அடுத்த டார்கெட் விஜய்யும் விஜய் தேவரகொண்டாவும்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸி’ன் புதிய முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் விஜே சித்ரா நடித்த ‘முல்லை’ கேரக்டரில் அவருக்குப் பதிலாக நடித்துக் கொண்டிருப்பவர் காவ்யா அறிவுமணி. ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹீரோவின் தங்கை.

‘`நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆம்பூர்லதான். அப்பா எல்.ஐ.சி ஏஜென்ட். அம்மா ஹவுஸ்வொயிஃப். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். ஆனா, சந்தோஷத்துக்குக் குறையே இருக்காது'’

- தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு பேசத் தொடங்கினார் காவ்யா.

காவ்யா சின்னத்திரைக்குள் வந்தது எப்படி?

ஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே எனக்கு மோனோ ஆக்ட்டிங்ல பயங்கர ஆர்வம். ஆறு, ஏழு கேரக்டர்களை ஒரே நேரத்துல மாத்தி மாத்தி நடிச்சிக் காட்டுவேன். ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு ஆர்கிடெக்ச்சர் படிக்க சென்னை வந்தேன். நான் எப்போதும் சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருப்பேன். அதைப் பார்த்துட்டு ஷார்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படித்தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பும் வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கேரக்டர் பற்றி...

சித்ரா அக்கா இறந்த பிறகு, ‘முல்லை’ ரோல்ல நடிக்க ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ யூனிட்ல இருந்து எனக்கு கால் வந்தது. ஆடிஷனுக்கு கூப்பிடாங்க. ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது. ‘முல்லை’ கேரக்டருக்கு ஏற்ற மாதிரி புடவை கட்டி, மேக்கப் பண்ணி டெஸ்ட் ஷூட் பண்ணினாங்க. பிறகு, மூணு நாள் கழிச்சி ‘நீங்கதான் அடுத்த முல்லை’ன்னு சொன்னாங்க. அடுத்த முல்லை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள்கிட்ட அதிக மாகவே இருக்கு. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய வேண்டிய இடத்துல நான் இருக்கேன். நிச்சயம் சிறப்பா செய்வேன்.

நீங்க பண்ணின நயன்தாரா ரீகிரியேஷன் மேக்கப்புக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்குபோல...

நயன்தாராதான் என் ரோல் மாடல். ‘உன் கிட்ட நயன்தாரா லுக் கொஞ்சம் இருக்கு. புருவத்தை லைட்டா டார்க் பண்ணி, அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் பண்ணா அவங்களை மாதிரியே இருப்பே’ன்னு சொன்னாங்க என் ஃபிரெண்ட். அதுக்குப் பிறகுதான் நயன் தாரா ரீகிரியேஷன் மேக்கப் டிரை பண்ணினேன். நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருது. செம ஹேப்பியா இருக்கேன்.

அடுத்த பிளான்..?

ஆர்கிடெக்ச்சர் சம்பந்தமான வேலைக்கு ஆபீஸ் ரெடி பண்ணணும். நடிகர் விஜய், விஜய் தேவரகொண்டா ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து நடிக் கணும். அவ்ளோதான்!

ஆல் தி பெஸ்ட்!

நமக்கு சோறுதான் முக்கியம்!

அகல்யா

ஆதித்யா சேனலின் இளமை ததும்பும் துறுதுறு தொகுப்பாளராக நமக்கு அறிமுகமானவர் பப்ளி பியூட்டி அகல்யா.

``பேசிக்கா நானொரு ‘ஃபுட்டீ’ங்க. சென்னையில எங்கே, என்ன சாப்பாடு நல்லா இருக்கும்னு என்னைக் கேளுங்க. சென்னை யில உள்ள பல ஹோட்டல்ல நான் ரெகுலர் கஸ்டமர்” என்று காலரைத் தூக்கிவிடுகிறார்.

``இருக்கிறதே ஒரு ஃலைப். அதுல நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோஷமா இருந்துட்டுப் போயிடணும். எதுக்கும் கவலைப் படக்கூடாது. எனக்குச் சாப்பிட மட்டும்தான் தெரியும். சமைக்கக் கத்துக்கணும். நான் நடிக்கிற படங்களைப் பற்றி சீக்கிரமே அப்டேட்ஸ் வரும்’’ என்கிறார் குதூகலத்துடன்.

சாப்பாட்டு ராணி!

போயா... நீயும் உன் சீனும்!

மின்னல் தீபா

`மாயி' படத்தில் `மாயண்ணன் வந்திருக்காக... மாப்பிள மொக்கச் சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்கள்லாம் வந்திருக்காக...வாம்மா மின்னல்’ என்ற காட்சி ரசிகர்களிடையே பிரபலமான பின்பு தீபாவின் பெயருக்கு முன்னால் `மின்னல்’ என்ற அடைமொழியும் சேர்ந்துகொண்டது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நெகட்டிவ் ரோல் செய்து கொண்டிருக்கிறார் இவர்.

``மாயி படத்துல அந்த ரெண்டு நிமிஷ சீன்ல நடிக்க நிறைய பொண் ணுங்க ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. நானும் போயிருந்தேன். டைரக்டர் ஒரு சீன் சொல்லி அதுல என்னை ‘மாறுகண்’ணோட இருக்குற மாதிரி நடிக்கச் சொன்னாரு. எனக்கு நடிக்க வரல. ‘இது கூட நடிக்கத் தெரியல. நீ எல்லாம் எதுக்கு ஆடிஷனுக்கு வந்தே’ன்னு திட்டிட்டாரு. எனக்கு செம கோபம். ‘போயா... நீயும் உன் சீனும்'னு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்து நல்லா பிராக்டிஸ் பண்ணிப் பார்த்துட்டு திரும்பவும் ஆடிஷனுக்கு போனேன். படத்துல செலக்ட் ஆயிட்டேன். ஆனா, ‘பொண்ணு ரொம்ப வெள்ளையா இருக்குன்னு’ சொல்லிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டு ஒருவழியா மேனேஜ் பண்ணிட்டோம். அந்த சீன் இவ்ளோ பிரபலமாகும்னு அப்போ எதிர்பார்க் கலை’' என்று பளிச்சிடும் மின்னலுக் குச் செய்யத் தெரியாத வேலைகளே இல்லையாம்.

``காஸ்டியூம் டிசைன், பெயின்டிங் தெரியும். ஒரு காரை பிரிச்சிப்போட்டு மெக்கானிக் வேலைகூட பண்ணு வேன்'' என்கிற தீபா ஒரு பெட் லவ்வர்!

ஆல் இன் ஆல் அழகு ராணி!

டி.ஆர்.பி டேட்டா: தமிழ்த் தொலைக்காட்சிகளின் சென்ற வார TRP ரேட்டிங்