பிரீமியம் ஸ்டோரி

ரிமோட் ரீட்டா

நியூட்ரிஷனஸிட்’ பிரியா ப்ரின்ஸ்!

ன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில், வில்லி ‘மேனகா’வாக நடிப்பவர் பிரியா ப்ரின்ஸ். ரேடியோ ஜாக்கியாக மீடியா பயணத்தைத் தொடங்கிய இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகை எனப் பல அவதாரங்கள் எடுத்து தற்போது ஊட்டச்சத்து ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

சேனல் சைட் டிஷ்

``ரேடியோ ஜாக்கி, தொகுப் பாளர், நடிகைன்னு பல துறை களில் நான் பணிபுரிஞ்சிருந்தாலும் எனக்கு மன திருப்தியையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது நியூட்ரிஷனிஸ்ட் வேலைதான். நம்ம உடலை ஆரோக்கியமாக பராமரிக்கிறது பெரிய கலை. ஒவ்வொருத்தரோட உடல் இயல்பும் ஒவ்வொரு மாதிரி. அதுக்குத் தகுந்த மாதிரி உணவுப்பழக்கமும் மாறுபடும். அதைத் தெரிஞ்சுக்கிட்டு நம்ம உடம்புக்கு பிரச்னை கொடுக்காத உணவுப்பழக்கத்தைக் கடைப் பிடிச்சாலே பாதி நோய்கள் குறைஞ்சிடும்” என்கிற பிரியா தன் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியே டயட், வெயிட் லாஸுக்கான ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

குட் ஜாப்!

மாப்பிள்ளையை எடுத்து மாலைக்குப் போடுங்கோ!

‘நீ
யெல்லாம் எனக்கு பொண்ணே இல்லடி’ - வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தைத் தவிர்த்துவிட்டு, காதல் திருமணம் செய்துகொண்ட தன் மகளை வார்த்தைகளால் எரித்துக்கொண்டிருந்தார் ஹீரோவின் அம்மா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2'வின் படப்படிப்பு... தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த இந்தக் காட்சியை கேமரா மும்முரமாகப் பதிவுசெய்துகொண்டிருக்க, வீட்டுக்குள் சென்றோம்.

சேனல் சைட் டிஷ்

நிச்சயதார்த்த சீன் என்பதால் ஹீரோ யின் ரக்ஷிதாவும் மற்ற பெண்களும் பட்டுச் சேலை சரசரக்க வீட்டைச் சுற்றிச்சுற்றி போன் பேசிக்கொண்டும், மேக்கப் போட்டுக்கொண்டும் இருந்தார்கள். கதாநாயகனின் மூத்த தங்கைக்குப் பார்த்த மாப்பிள்ளையை இளைய தங்கைக்கு நிச்சயம் செய்யப்போகிறார்கள். ஆனால், ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட சிலருக்கு இதில் விருப்பமில்லை. மாப்பிள்ளை வந்து மணவறையில் அமர்கிறார். “மாலையை எடுத்து மாப்பிள்ளைக்குப் போடுங்கோ” என்ற டயலாக்கை அசிஸ்டன்ட் டைரக்டர், ஐயருக்குச் சொல்லித்தர, அதை “மாப்பிள்ளையை எடுத்து மாலைக்குப் போடுங்கோ” என்று ஐயர் மாற்றிச் சொல்ல ஷூட்டிங் ஸ்பாட் ஒரே கலகல.

இது நிச்சயம் இல்லை. திருமணம் என்று ஒருகட்டத்தில் தெரியவர, அங்கிருந்த ஹீரோயின், மூத்த தங்கை உள்ளிட்ட சிலரின் முகங்களில் மேக்கப்புக்கு மேலே அதிர்ச்சிவந்து ஒட்டிக்கொண்டது. திருமணத்தை நிறுத்த ஹீரோ முன்வர, அவரை அடிக்க சில ரவுடிகள் பாய, அவர் களில் ஒரு ரவுடியை நெஞ்சில் வேகமாக உதைத்துவிட்டார் ஹீரோ. சில நிமிட சலசலப்புக்குப் பிறகு ஷாட் மீண்டும் தொடங்கியது.

அந்தத் திருமணம் நடந்ததா... ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இனிவரும் எபிசோடுகளில் உங்களுக்கு விடை கிடைக்கலாம்.

பூச்சூடப்போகும்‘பூவே பூச்சூடவா’ ஹீரோயின்!

சேனல் சைட் டிஷ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியலின் ஹீரோயின் ரேஷ்மாவுக்கும், அதே சீரியலில் இரண்டாவது ஹீரோவாக நடித்துவரும் மதன் பாண்டியனுக்கும் விரைவில் கல்யாணமாம். நட்பில் தொடங்கிய அறிமுகம், காதலாகக் கசிந்துருகி தற்போது திருமண உறவுக்குள் செல்கிறது. “இந்த 2021 எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். சீக்கிரமே ஒருத்தருக்கொருத்தர் சொந்தமாகப் போறோம்” என்கிறார்கள் காதலர்கள்!

வாழ்த்துகள்!‘

யூடியூபை கலக்கும் விஜய் டிவி ஸ்டார்கள்!

வி
ஜய் டிவி பிரபலங்கள் பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறார் களோ இல்லையோ... கட்டாயம் யூடியூபில் வைத்திருக்கிறார்கள்.

சேனல் சைட் டிஷ்

`மைனா' நந்தினி, `பாரதி கண்ணம்மா' வெண்பா, ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, `குக் வித் கோமாளி' ஷிவாங்கி ஆகியோரின் சேனல்களுக்கு உள்ள சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்கள்!

சமீபத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே, `குக் வித் கோமாளி' புகழுடன் சேர்ந்து நடனமாடிய ஆல்பம் சாங் ஒன்றை தன் யூடியூப் சேனலில் பதிவிட, ஒரு வாரத்திலேயே சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இதையடுத்து புகழும் தனக்கென தனியாக ஒரு சேனல் தொடங்கியுள்ளார். டிவியில சம்பாதிப்பதைவிட இதில் கணிசமான தொகையைச் சம்பாதித்து வருகிறார்களாம் இந்தப் பிரபலங்கள்!

வாழவைக்கும் யூடியூபுக்கு ஜே!

என்னங்கம்மா உங்க திட்டம்..?

வ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் நாம் ரெசல்யூஷன் எடுப்பது வழக்கம். ‘இந்த 2021-ல் நீங்கள் எடுத்த ரெசல்யூஷன் என்ன?' தொகுப்பாளர்கள் சிலரிடம் கேட்டோம்.

சேனல் சைட் டிஷ்

அஞ்சனா

“தொடர்ந்து ஜிம்முக்குப் போகணும். அதிகமா பேசுறதை இந்த வருஷத்துல இருந்து குறைச்சுக்கலாம்னு இருக்கேன். அடுத்தது, இந்த வருஷம் அதிகமா உழைக்கணும். குழந்தை பிறந்ததும், அவனை பார்த்துக்குறதுக்காக கரியர்ல கொஞ்சம் பிரேக் விழுந்துடுச்சு. இப்போ அவன் வளர்ந்துட்டான். சொல்றதை எல்லாம் புரிஞ்சுக்கிறான். பயப்படாம வீட்டுல உள்ளவங்ககிட்ட விட்டுட்டு வேலைக்குப் போகலாம். கரியர்ல அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!”

சேனல் சைட் டிஷ்

சுமையா கெளசர்

“பொய் பேசக் கூடாது, கெட்ட வார்த்தை பேசக் கூடாதுன்னு போன வருஷம் முடிவெடுத்தேன். இப்போ வரைக்கும் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். ஆனா, ‘எவ்ளோ நாளைக்குத்தான் நமக்கு நாமளே கட்டுப்பாடு களை விதிச்சுக்கிட்டு வாழுறது... ஒரு சேஞ்சுக்கு மனசுல என்ன தோணுதோ அதெல்லாம் பண்ணிட்டு ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணலாமே’ன்னு தோணுச்சு. ஸோ... இந்த வருஷம் ‘நோ’ ரெசல்யூஷன்!”

சேனல் சைட் டிஷ்

சரண்யா துரடி

“இந்த வருஷம் மென்டல் ஹெல்த் பத்தின விஷயங்களை நானும் தெரிஞ்சுக்கிட்டு, மத்தவங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். என்னை சுற்றியுள்ளவங்க மன அழுத்தத்துல இருந்தா என்னால முடிஞ்ச உதவியை அவங்களுக்குச் செய்யணும். அவ்ளோதான்!''

டி.ஆர்.பி டேட்டா: தமிழ்த் தொலைக்காட்சிகளின் சென்ற வார TRP ரேட்டிங்

சேனல் சைட் டிஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு