Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

ரிமோட் ரீட்டா

சேனல் சைட் டிஷ்

ரிமோட் ரீட்டா

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

நான் கொஞ்சம் சோம்பேறி! - வந்தனாவின் வில்லத்தனம்

நீங்க ஹீரோயினா... இல்ல, வில்லியா? வந்தனாவைப் பார்க்கும்போது இந்தக் கேள்வியைத்தான் கேட்கத் தோன்றும்!

‘ஆனந்தம்’ சீரியல் மூலமாக அறிமுகமாகி அதகளம் செய்த வில்லி நடிகை இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நிலா’ சீரியலின் வில்லியும் இவரே. ‘நீங்க சீரியல்ல பார்க்குற வில்லி வந்தனா வேற... இப்போ நீங்க பேசிகிட்டு இருக்குற வந்தனா வேற. நிஜத்துல நான் ரொம்பவே ஸ்வீட்டுங்க’ என்ற டிஸ்க்ளெய்மரோடு பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து வில்லி கேரக்டரில் மட்டும் நடிக்கிறீங்களே..?

நான் சீரியலுக்கு நடிக்க வந்த ஆரம்பத்துல எனக்கு எந்த மாதிரியான கேரக்டர் செட் ஆகும்னு ஐடியாவே இல்லாம இருந்தது. ‘ஆனந்தம்’ சீரியல்ல வில்லியா நடிச்ச பிறகு, நெகட்டிவ் ரோல்தான் எனக்குப் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. தொடர்ந்து வில்லி கேரக்டர் களை மட்டும் செலக்ட் பண்ணி நடிச் சேன். அப்புறம் அதுவே பழகிடுச்சு!

சேனல் சைட் டிஷ்

வந்தனாவை சினிமாவில் பார்க்க முடியலையே...

நான் சீரியலுக்கு நடிக்க வந்தபோதே படங்கள்ல நடிக்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். அதனாலதான் வாய்ப்புகள் வந்தும் நடிக்கல. சின்னத்திரையில எனக்கான ஓர் அடையாளம் இருக்கு. அதைக் கடைசி வரைக்கும் தக்கவச்சிக்கணும். இப்போ என் முழு கவனமும் அதுல தான் இருக்கு

உங்க காஸ்ட்யூம்ஸ் எல்லாம் வேற லெவல்! நீங்களே டிசைன் பண்ணுவீங்களா..?

நான் கொஞ்சம் சோம்பேறி. காஸ்ட்யூம் டிசைன் பண்ற அளவுக் கெல்லாம் பொறுமை இல்ல. கிடைக்குற ஃப்ரீ டைம்ல நல்லா தூங்குவேன். எப்போவாவது தோணுச்சுனா சமைப்பேன். அவ்ளோதான்! மத்தபடி காஸ்ட்யூம்ஸ்லாம் எந்த மாதிரி வேணும்னு சொல்லிடு வேன். என் டிசைனர்களே ரெடி பண்ணிடுவாங்க.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... கல்யாணம்!

சேனல் சைட் டிஷ்

தமிழ்த் திரையுலகில் இது கல்யாண சீசன் போலும். சில தினங்களுக்கு முன்பு தொகுப்பாளினி நட்சத்திராவுக்கும் அவரின் காதலர் ராகவ்வுக்கும் நிச்சய தார்த்தம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ‘பிக் பாஸ்’ பிரபலம் விஜய லட்சுமி மற்றும் ‘குக் வித் கோமாளி’ கனி ஆகியோரின் தங்கை நிரஞ்சனி தன் திருமணச் செய்தியை அறிவித்துள்ளார்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ள இவர், இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரிய சாமியைக் கரம்பிடிக்க உள்ளார். சீக்கிரமே வீடு கல்யாண களைகட்டப் போவதை நினைத்து சந்தோஷத்தில் உள்ளனர் சகோதரிகள் மூவரும்.

வாழ்த்துகள்!

சேனல் சைட் டிஷ்

எங்களுக்கு இன்னோர் அடையாளம் இருக்கு... -   சீரியல் பிரபலங்களின் சைடு பிசினஸ்

சின்னத்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பிரபலங்களில் பலர், நடிப்பைத் தாண்டி சைடு பிசினஸும் செய்துவருகின்றனர். ‘சுயதொழில் செய்வது பொருளாதார தேவையைப் பூர்த்திசெய்வதோடு எங்களுக்கான தனி அடையாளத்தையும் தருகிறது’ என்று கூறும் பிரபலங்கள் சிலரிடம் அவர்களின் சைடு பிசினஸ் குறித்துக் கேட்டோம்.

மகேஸ்வரி, தொகுப்பாளினி

சேனல் சைட் டிஷ்

காம்பியரிங், சீரியல், சினிமா மற்றும் விளம்பரப் படங்களில் நடிப்பு எனத் திரையுலகில் ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருக்கும் விஜே மகேஸ்வரி காஸ்ட்யூம் டிசைனராகவும் இருக்கிறார்.

“காஸ்ட்யூம் டிசைனிங்ல எனக்குச் சின்ன வயசுல இருந்தே இன்ட்ரெஸ்ட். எனக்கான ஆடைகளை நானே வடிவமைச்சிப்பேன். ஒரு கட்டத்துல ‘இதையே சைடு பிசினஸா பண்ணலாமே’ன்னு தோணுச்சு. களத்துல இறங்கிட்டேன். சிம்பு, ஜி.வி. பிரகாஷ், அஞ்சலி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிருக்கேன். இப்போ எல்லாரும் என்னை ‘விஜே மகேஸ்வரி’ன்னு கூப்புடுறதுக்கு பதிலா ‘காஸ்ட்யூம் டிசைனர் மகேஸ்வரி’ன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க!”

ரம்யா என்.எஸ்.கே, பாடகி

சேனல் சைட் டிஷ்

பிரபல பாடகியான ரம்யா என்.எஸ்.கே சைடு பிசினஸாக சென்னையில் ‘ஸ்பா’ ஒன்றையும் நடத்திவருகிறார். “ரொம்ப நாளாவே ஏதாவது  பிசினஸ் பண்ணணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போ வந்ததுதான் இந்த ‘ஸ்பா’ ஐடியா. சென்னையில உள்ள நிறைய பேர் இப்போ ‘ஸ்பா’க்கு ரெகுலரா போக ஆரம்பிச்சிட்டாங்க. சோ, நம்மளும் ‘ஸ்பா’ தொடங்கலாமேன்னு தோணுச்சு. ஆரம்பிச்சேன். நல்லா போயிட்டிருக்கு. இது தவிர, ஃபாரின் குழந்தைகளுக்கு ஸ்கைப் வழியா பாட்டு கிளாஸும் எடுத்துட்டு இருக்கேன்.”

சந்தோஷி, சீரியல் நடிகை

சேனல் சைட் டிஷ்

நடிகை ராதிகா தயாரிப்பில் உருவான ‘இளவரசி’ உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷி சொந்தமாக ‘பொட்டிக்’ வைத்துள்ளார். “சீரியல்கள்ல நடிச்சுக்கிட்டிருந்த காலகட்டத்துல புதுசா ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. எனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகள்லதான் ஆர்வம் அதிகம். அதுலேயே புதுசா தொழில் தொடங்கலாம்னு நினைச்சேன். அப்படித்தான், நானும் என் கணவரும் சேர்ந்து இந்த ‘பொட்டிக்’கை சென்னையில தொடங்கினோம். இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் பண்றோம்.”