Published:Updated:

சின்னத்திரை: சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

- ரிமோட் ரீட்டா

சின்னத்திரை: சேனல் சைட் டிஷ்

- ரிமோட் ரீட்டா

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

சிம்பிள் லைஃப்... ஓவர் ஹேப்பி! - பவித்ரா லட்சுமி

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அதிக எதிர் பார்ப்பைக் கூட்டியிருக்கிறது விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. அதில் குக்காக வரும் பவித்ரா லட்சுமிக்கு ரசிகர்கள் கூடியிருக் கின்றனர். இதனால், உற்சாகத்தில் இருக்கும் பவித்ராவிடம் பேசினால், நமக்கும் பாசிட்டி விட்டி தொற்றிக் கொள்கிறது.

“எனக்கு சமையல்ல பெரிசா ஆர்வம் இல்ல. இந்த நிகழ்ச்சி வாய்ப்பு வந்தப்போ, என்னால சமாளிக்க முடியுமான்னு ரொம்பவே தயங்கினேன். சேனல் தரப்பினர் ரொம்பவே ஊக்கம் கொடுத்தாங்க. என்னோட மெயின் இலக்கு சினிமாதான். அதுக்கான நல்ல வாய்ப்பு எப்போ வேணாலும் வரலாம். ஆனா, நம்முடைய இருப்பை உறுதிப்படுத்திட்டே இருக்கணும். அதனாலதான் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். எனக்கு சமையல் அனுபவம் குறைவுதான். நிறைய ரெஸ்டாரன்ட்ஸ் போவேன். இத்தாலியன் டிஷ்ஷை விரும்பிச் சாப்பிடுவேன். வித்தியாசமான டிஷ்லயெல்லாம் சேர்க்கப்படும் உணவுப் பொருள்கள் பத்தி ஆர்வமா தெரிஞ்சுப்பேன். இந்த அனுபவம் எனக்கு நல்லாவே கைகொடுக்குது. இந்த நிகழ்ச்சியில என்ன டிஷ் கொடுத்தாலும், எப்படியாச்சும் சமாளிச்சு சமைச்சுடுறேன். அந்த டிஷ்ஷும் சாப்பிடுற அளவுக்குச் சுமாராவாவது வந்திடுது. முன்னெல்லாம் அடிக்கடி ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில கிடைச்ச அனுபவத்துல, வீட்டுலயே ஏதாச்சும் சிம்பிளாவாவது சமைச்சு சாப்பிடவே ஆசைப்படுறேன்”

சின்னத்திரை: சேனல் சைட் டிஷ்

- சுவாரஸ்யமாக உரையாடும் பவித்ரா, அந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் மற்ற `குக்' மற்றும் `கோமாளி'களுடனான நட்பை, வீட்டுக்கு வந்த பிறகும் தொடர்கிறாராம்.

“பர்சனல் வாழ்க்கையில வலி மிகுந்த தருணங்களைக் கடந்து வந்திருக்கேன். அதையெல்லாம் மறந்து, புது வாழ்க்கையில அடியெடுத்து வெச்சிருக்கேன். 10 வருஷ முயற்சிகளுக்குப் பிறகு மீடியா ஃபீல்டுல எனக்குனு ஓர் அடையாளம் கிடைச்சிருக்கு. இனி எல்லா விஷயத்தையும் பாசிட்டிவ்வா எதிர்கொள்ளவே ஆசைப்படுறேன். என் அம்மா மேல நான் அளவுகடந்த அன்பு வெச்சிருக்கேன். அதனாலதான், என் பெயருக்குப் பின்னாடி அவங்க பெயரைக் குறிப்பிடுறேன். எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்களோடு நிறைய நேரம் செலவிடுவேன். வீட்டுல செல்லமா ஒரு நாய் வளர்க்கிறேன். தெரு நாய்கள் மீதும் அதிக அக்கறை செலுத்துவேன். இப்படி என்னோட வாழ்க்கை ரொம்பவே சிம்பிளானதுதான். ஆனா, ரொம்பவே மகிழ்ச்சியானது”

- க்யூட் சிரிப்பில் உள்ளம் கவர்கிறார் பவித்ரா.

சின்னத்திரை: சேனல் சைட் டிஷ்

`அந்தப் பாடல்கள்'தான் எனக்குத் துணை!

80-களில் தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகி யாகத் திகழ்ந்தவர் சபீதா ஆனந்த். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“ஷூட்டிங் ஸ்பாட்டுல எனக்கு ஒரே துணை 70, 80-களில் வெளியான தமிழ் சினிமா பாடல்கள்தான். ஷூட்டிங்குக்கு இடை யில இருக்குற ஃப்ரீ டைம்ல பாட்டுதான் கேட்டுட்டு இருப்பேன். மேக்கப் பண்ற நேரத்துலகூட ஒருபக்கம் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும். குறிப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம்” என்கிறார் இந்த 80-களின் நாயகி!

சின்னத்திரை: சேனல் சைட் டிஷ்

வாயாட மட்டுமல்ல... வழக்காடவும் செய்வோம்!

ஒரு பெண் சற்று அதிகமாகப் பேசினாலே ‘வாயாடி’ என்ற பட்டத்தைக் கட்டிவிடுவார்கள். இதனாலேயே பேச வேண்டிய இடத்திலகூட தயங்கித் தயங்கி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ‘அதிகமா பேசுனா வாயாடியா... அப்படினா நாங்க வாயாட மட்டுமல்ல வழக்காடவும் செய்வோம்’ என்கிறார்கள் இவர்கள். சின்னத்திரையில் ஜொலித்துக்கொண்டு சட்டத்துறையிலும் தடம் பதித்திருக்கும் தாரகைகள். இவர்களில் சிலரிடம் பேசினோம். தங்களது மல்டி டாஸ்க்கிங் பற்றியும், சாதிப்பதில் பெண்களுக்கு இருக்கும் சவால்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.

மாளவிகா அவினாஷ்

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நன்கு அறியப்பட்டவரான மாளவிகா அவினாஷ் ஒரு வழக்கறிஞர். அரசியல் பிரமுகரும்கூட.

``எனக்கு நடிப்புல இருந்த ஆர்வம் சட்டத் துறையிலயும், அரசியல்ல யும் இருந்தது. நான் கால் வெச்ச ஒவ்வொரு துறை யிலேயும் எக்கச்சக்க சவால்கள். எல்லாத்தையும் கடந்துதான் வந்துருக்கேன். இன்னிக்கி நிறைய பெண்கள் ‘எனக்கும் சாதிக்க ஆசை இருக்கு. ஆனா, இந்தக் காரணங்கள் எல்லாம் என்னைத் தடுக்குது’ன்னு புலம்புறாங்க. உண்மையிலேயே சாதிக்கணும்னு ஆசை இருந்தா இதுமாதிரி காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டோம்.

‘எங்க வீட்டுப் பொண்ணுங்களை எல்லாம் வேலைக்கு அனுப்ப மாட்டோம்’னு என் முன்னாடி யாராவது சொன்னா, அவ்ளோதான். அப்போ வேலைக்குப் போற என்னை மாதிரி பெண்கள் எல்லாம் நல்லவங்க இல்லையான்னு சண்டைக்குப் போயிடுவேன். வீட்டுல உள்ளவங்க தம் வீட்டுப் பெண்களோட கனவுகளுக்கு முக்கியத்துவம் தரணும். பெண்களும் மத்தவங்களைக் குறை சொல்றதையும், தன்னை பலவீனமா காட்டிக்கிறதையும் விட்டுட்டு கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற கத்துக்கணும்.”

மாளவிகா அவினாஷ் - ஜெயலக்ஷ்மி - ஆர்த்தி கணேஷ்
மாளவிகா அவினாஷ் - ஜெயலக்ஷ்மி - ஆர்த்தி கணேஷ்

ஜெயலக்ஷ்மி

பல முன்னணி சீரியல்களில் நடித்த ஜெயலக்ஷ்மி, வழக்கறிஞராகவும், சமூக சேவகராகவும் பணியாற்றி வருகிறார்.

``வக்கீல் ஆகணும்ங்கிறது சின்ன வயசு கனவு. அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சேன். ஆக்ட்டிங்லயும் ஆர்வம் இருந்துச்சு. அதுக்கான வாய்ப்பு கிடைச்சதும் பயன்படுத்திகிட்டேன். உணவு, உடை மாதிரி வேலை யும் ஒவ்வொருத்தருக்கும் அவசியம். முக்கியமா பெண்களுக்கு. ‘எனக்கான தேவைகளை என் உழைப் புல கிடைச்ச பணத்தைக் கொண்டு நான் பூர்த்தி செஞ்சுக்குவேன்’ங்குறது தனி கெத்து. அந்த கெத்துக் காகத்தான் நேரம் காலம் பாக்காம ஓடிக்கிட்டு இருக் கேன்.''

ஆர்த்தி கணேஷ்

தூர்தர்ஷன், மக்கள் டிவி, சன் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஆர்த்தி கணேஷும் ஒரு வழக்கறிஞர்.

``பல கஷ்டங்களைத் தாண்டி அடம்பிடிச்சி `லா' படிச்சேன். காலேஜ்ல படிச்சிட்டு இருந்தபோதே மக்கள் டிவியில தொகுப்பாளினியா பணியாற்ற வாய்ப்பு கிடைச்சுது. பொருளாதார தேவைக்கு உதவும்னு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கிட்டேன்.

கோர்ட்டுல கார சாரமான வாக்குவாதங் களை எல்லாம் பார்த்து, கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு, தொகுப்பாளினியா ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது ஈஸியா இருந்தது. தொடர்ந்து ரெண்டு ஃபீல்டு லயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

பொதுவாவே, பெண்கள் ஒரே நேரத்துல பல வேலைகளைச் செய்யக்கூடிய மல்டி டாஸ்க்கராதான் இருப்பாங்க. அதனால எப்போதும் ஒரு வேலையை மட்டும் நம்பி இருக்காம, உங்களுக்கு விருப்பம் இருக்குற மற்ற துறைகள்லயும் வேலை செய்யுங்க. இது, பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் கிறதைத் தாண்டி உங்களுக்குன்னு ஓர் அடை யாளத்தை ஏற்படுத்தித் தரும்.”