என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

ரிமோட் ரீட்டா

படிப்புல மட்டுமல்ல... நடிப்புலேயும் சாதிக்கலாம்!

‘தென்றல்’ ஸ்ருதி ராஜ்

சன் டிவி ‘தென்றல்’ சீரியலில் ‘துளசி’யாக ரசிகர்களின் மனதை வருடிச் சென்றவர் ஸ்ருதி ராஜ். ‘அபூர்வராகங்கள்’, ‘ஆபீஸ்’, ‘அழகு’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர், சமீப நாள்களாக அவரை சீரியல் எதிலும் காணோம்.

என்னாச்சு..?

கொரோனா, லாக்டௌன் உள்ளிட்ட சில பிரச்னைகளால நான் கடைசியா நடிச்சிட்டு இருந்த ‘அழகு’ சீரியலுக்கு அவரசமா எண்டு கார்டு போட்டுட்டாங்க. லாக்டௌன்ல கார்டனிங், குக்கிங்ன்னு நானும் கொஞ்சம் பர்சனல் வேலைகள்ல பிஸியாகிட்டேன். இன்னும் ஒரு மாசத்துல புது சீரியல்ல உங்களைச் சந்திக்க காத்துகிட்டு இருக்கேன்!

சேனல் சைட் டிஷ்

ஏழு வயசுலேயே நடிக்க வந்துட்டீங்களாமே...

எனக்கு நடிப்புல இன்ட்ரெஸ்டே இல்ல. என் அம்மாவோட விருப்பத்தால தான், ஏழாவது படிக்கிறப்போ ஒரு மலையாளப் படம் மூலமா சினிமாவுக்கு வந்தேன். சின்ன வயசுல நல்லா படிப்பேன். எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை. டாக்டர், நர்ஸ் பொம்மையெல்லாம் வச்சிக்கிட்டுதான் விளையாடுவேன். ஆனா, தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சதால படிப்புல கவனம் செலுத்த முடியல. பத்தாவதோட படிப்பை நிறுத்துற சூழல் ஏற்பட்டுச்சு. அதுக்காக நான் கவலைப்பட்டதில்ல. நடிப்பை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். படிப்புல மட்டும் இல்ல நடிப்புலேயும் சாதிக்க முடியும்.

சினிமாலேருந்து ஏன் சீரியல் பக்கம் வந்தீங்க..?

ஆரம்பத்துல மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். குருவாயூர்ல இருக்குற எங்க கிராமத்துலேருந்து அப்பாவோடு சென்னைக்கு வந்து நடிச்சுட்டுப் போவேன். படங்கள்ல என் கேரக்டருக்கு பெருசா ரீச் கிடைக்கல. நடிக்கிறதையே நிறுத்திடலாம்னு நினைச்சபோதுதான் ‘தென்றல்’ வாய்ப்பு கிடைச்சுது. அதுல என்னோட ‘துளசி’ கேரக்டருக்கு நல்ல ரீச். தொடர்ந்து சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கேன்.

சேனல் சைட் டிஷ்

நீங்க தீவிர விஜய் ரசிகையாமே...

ஆமா. அவர் நடிச்ச படம் எதையும் மிஸ் பண்ண மாட்டேன். இப்போ ரிலீஸான மாஸ்டர் படத்தைக்கூட 10 முறைக்கு மேல பார்த்துட்டேன். வீட்டுல எப்போதும் விஜய் பாட்டுதான் ஓடிக்கிட்டே இருக்கும். என் மொபைல் ரிங்டோன்கூட ‘மாஸ்டர்’ பாட்டுதான்!

ஆக்டிங்கை தவிர வேற ஹாபி..?

லாக்டௌன்ல வீட்டு மாடியில கார்டனிங் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். நான் போட்ட விதைகள் எல்லாம் செடியா முளைச்சுக் காய்க்கிறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து

குமரன் விலகலா?

விஜய் டிவி-யின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே சித்ரா இறந்தபின் அவருக்குப் பதிலாக ‘காவ்யா அறிவுமணி’ மாற்றப்பட்டார். ஆனால், ரசிகர்களிடையே பிரபலமான கதிர்-முல்லை ஜோடியைப் பார்த்தவர்களுக்குக் கொஞ்சம் டல் அடிக்கத் தொடங்கியது.

சேனல் சைட் டிஷ்

இதற்கிடையே கடந்த சில தினங்களாகவே சீரியலில் கதிர் கதாபாத்திரம் இடம் பெறவில்லை. இந்த கேரக்டரில் நடித்துவந்த குமரன் வெளியூரில் இருக்கிறார் என்பதுபோல கதை நகர்ந்தது. மேலும், குமரன் சினிமாவில் நடிக்கும் செய்தியும் வெளி யானது. இதனால் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலகி விட்டாரோ எனக் கலக்கத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்த நிலையில்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்குத் திரும்பி விட்டதாகத் தன் இன்ஸ்டா பேஜ் ஸ்டோரி மூலம் அறிவித்துள்ளார் குமரன்!

நாங்க ஏன் யூடியூப் ஆரம்பிச்சோம்ன்னா...

சின்னத்திரை பிரபலங்கள் ஷேரிங்ஸ்

சின்னத்திரை நடிகர்களில் பலர் தனியாக ‘யூடியூப்’ சேனல் தொடங்கி, அதில் கலக்கி வருகின்றனர். லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட பிரபலங்கள் சிலரிடம் ‘நீங்க ஏன் யூடியூப் சேனல் ஆரம்பிச்சீங்க...’ என்று கேட்டோம்.

சேனல் சைட் டிஷ்

வனிதா விஜயகுமார்

``விஜய் டிவி-யில நான் கலந்துக்கிட்ட ‘குக் வித் கோமாளி’ ஷோ முடிஞ்ச பிறகு, மக்கள் கூட தொடர்பே இல்லாமப்போன மாதிரி இருந்தது. நிறைய பேர் ‘வனிதாக்கா உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். இன்ஸ்டாவுல லைவ்ல வாங்க’ன்னு மெசேஜ் பண்ணாங்க. நான் ‘குக் வித் கோமாளி’ ஷோ மூலமா குக்கிங் பத்தி நிறைய நுணுக்கமான விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

தவிர தனியா குக்கிங் கோர்ஸ் முடிச்சிருக்கேன். அதனால, ஒரு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணி சமையல் சந்தேங்கங்கள், டிப்ஸ் மாதிரியான வீடியோக்களை போஸ்ட் பண்ணலாமே’ன்னு தோணுச்சு. மக்கள் கூட தொடர்பும் இருக்கும்; அதே நேரத்துல பயனுள்ள விஷயத்தை மத்தவங்களுக்குக் கத்துக் கொடுத்த மாதிரியும் இருக்கும்னு உடனே களத்துல இறங்கிட்டேன்.

சேனல் தொடங்கின சில நாள்களிலேயே

நல்ல வரவேற்பு. எல்லாரும் தொடர்ந்து சப்போர்ட் பண்ணிட்டும் இருக்காங்க. என்னை சுத்தி எத்தனையோ சர்ச்சைகள் போயிட்டு இருந்தாலும், எல்லாத்து லேருந்தும் மீண்டு வர்றதுக்கு இந்த யூடியூப் சேனலும் ஒரு காரணம்.''

வாழ்த்துகள் வனிதா!

ப்ரீத்தி சஞ்சீவ்

‘`கிச்சன் சூப்பர் ஸ்டார் சீஸன்-1’ல நானும் ஒரு ஃபைன லிஸ்ட். நல்லா சமைப்பேன். என் ஃபிரெண்ட்ஸ் கொடுத்த ஐடியா வுலதான் யூடியூப் சேனல் ஆரம்பிச் சேன்.

சேனல் சைட் டிஷ்

ஆரம்பத்துல குக்கிங் சம்பந்தமான வீடியோக்கள்தான் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, மக்கள் ஜாலியான பொழுதுபோக்கு வீடியோக்களை அதிகம் விரும்புறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு நிறைய ஜாலியான வீடியோக்களை ஷேர் செய்ய ஆரம்பிச்சேன். நல்ல ரீச். எல்லாரும் பாசிட்டிவ்வா கமென்ட் பண்ணாங்க. ஆரம்பத்துல விளையாட்டா ஆரம்பிச்ச இந்த யூடியூப் சேனல் இப்போ என்னோட ஃபுல் டைம் டியூட்டியாவே மாறிடுச்சு!''

ஆல் தி பெஸ்ட்!

மதுரை முத்து

``நான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சதுக்கு ரசிகர்கள்தாம் காரணம். ஒருநாள் வெளி நாட்டுல இருந்து ஒருவர் போன் பண்ணி, `உங்களோட ஸ்டாண்ட் அப் காமெடி ரொம்ப பிடிக்கும். எங்க அம்மா ஹார்ட் பேஷன்ட். அவங்க நைட்டு தூங்கறதுக்கு முன்னாடி உங்க வீடியோக்களைத்தான் விரும்பிப் பார்ப்பாங்க.

சேனல் சைட் டிஷ்

ஆனா, யூடியூப்ல உங்க பழைய வீடியோக்கள்தான் இருக்கு. நீங்களே ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, புது வீடியோக்கள் போஸ்ட் பண்ணலாமே'ன்னு கேட்டுக்கிட்டாரு. அந்த நேரத் துல நான் ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி மூணு மில்லியனுக்கு வியூவ்ஸுக்கு மேல போயிருந்துது.

‘மதுரை முத்து அலப்பறை’ங்குற பேர்ல யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். நிறைய காமெடி வீடியோக்கள் போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். நம்மளால நாலு பேர் சோகத்தை மறந்து சிரிக்கிறாங்கன்னா... அது நல்ல விஷயம்தானே.''

மதுரை வீரன்தானே!