என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

எனக்கு வர்ற கேரக்டர் எல்லாமே தங்கச்சியாவே இருக்கு.

லர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘மலர்’ சீரியலில் ஹீரோயினின் தங்கையாகக் கவனம் ஈர்த்தவர் வைஷ்ணவி அருள்மொழி. ‘அழகு’, ‘பொண்ணுக்கு தங்க மனசு’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித் துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ஹீரோவின் கடைசி தங்கை ஐஸ்வர்யாவாக அசத்தி வருகிறார்.

“நான் பொறந்தது ஜம்மு-காஷ்மீர்ல. ஆனா, என் பூர்வீகம் தமிழ்நாடுதான். ஸ்கூல், காலேஜ் எல்லாம் மதுரை, கோயம்புத்தூர்ல படிச்சேன். ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட்டான நான் சீரியலுக்கு நடிக்க வந்ததே பெரிய கதை!” - கலகலவென பேசத் தொடங்கினார் வைஷ்ணவி.

ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் டு சீரியல்... எப்படி?

என் அம்மா ஸ்கூல் டீச்சர். அதனால படிப்புல ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டு. நானும் நல்லாவே படிப்பேன். ஸ்கூல் டாப்பர். ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங்கை நானே ஆசைப்பட்டுதான் தேர்ந்தெடுத்தேன். சக்ஸஸ்ஃபுல்லா படிச்சும் முடிச்சிட்டேன். ஆனா, சில காரணங்களால அந்த ஃபீல்டுக்கு வேலைக்குப் போக முடியல. சரின்னு, யுபிஎஸ்சி எக்ஸாமுக்கு தயாரா கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல என் கஸினோட ஃபிரெண்டு ‘சில்லாக்கி டும்மா’ங்குற யூடியூப் சேனல்ல நடிக்க வாய்ப்பு கொடுத்தாரு. ‘அண்ணன்-தங்கச்சி’ கான்செப்ட்ல ஒரு வீடியோ பண்ணினோம். நல்ல ரீச். தொடர்ந்து நிறைய வீடியோஸ் பண்ணினோம். இது மூலமாதான் ‘மலர்’ சீரியல்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சுது.

சேனல் சைட் டிஷ்

தொடர்ந்து தங்கச்சி கேரக்டர்லேயே நடிக்கிறீங்களே...

எனக்கு வர்ற கேரக்டர் எல்லாமே தங்கச்சியாவே இருக்கு. நான் நடிச்ச ‘அண்ணன்-தங்கச்சி’ யூடியூப் வீடியோவை பார்த்துட்டு, இதே மாதிரி ஒரு ‘சுட்டிப்பெண்’ தங்கச்சியா வேணும்னுதான் என்னை ‘மலர்’ சீரியலுக்குத் தேர்வு செஞ்சாங்க. நான் துறுதுறுன்னு ஜாலியா நடிக்கிற அதே நேரத்துல பயங்கர எமோஷனலாவும் நடிப்பேன். கிளிசரின் போடாமலேயே அழுவேன்னா பாத்துக்கோங்க. இப்போ நான் நடிச்சிட்டு இருக்குற ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்ல இதுவரைக்கும் கொஞ்சம் திமிரான தங்கச்சியா நடிச்சிட்டு இருந்தேன். ஆனா, இனிமேல் எமோஷனல் சீன் நிறைய வரப்போகுது. `பாசமலர்' தங்கச்சியா பட்டையைக் கிளப்பக் காத்துட்டு இருக்கேன்!

சினிமாவுல என்ட்ரி கொடுக்கப் போறீங்களாமே..!

ஆமாங்க... சந்தானம் சார் ஹீரோவா நடிக்கிற ‘சபாபதி’ படத்துல அவருக்குத் தங்கச்சியா நடிச்சிருக்கேன். இதுலேயும் தங்கச்சியான்னு கிண்டல் பண்ணாதீங்க... படம் ஏப்ரல்ல ரிலீஸ்.

உங்க ஃபேமிலி..?

வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான். என்னுடன் பொறந்தவங்க யாரும் இல்ல. பல கஷ்டங்களுக்கு நடுவுலதான் அம்மா என்னை படிக்க வெச்சாங்க. இப்போ நான் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, அவங்களை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டேன். எனக்கு அம்மாவை அவ்வளவு பிடிக்கும். அதைவிட அதிகமா அவங்க மேல மரியாதையும் இருக்கு. வைஷ்ணவிங்குற என் பேருக்கு பின்னாடி இருக்குற ‘அருள்மொழி’ என் அம்மாவோட பேர்தான்!

பாசமலரே...

தினமும் அவனுக்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல கத்துக்கொடுக்குறோம்!

மைனா நந்தினி

சேனல் சைட் டிஷ்

‘`துருவன் எங்க வாழ்க்கையில வந்து ஏழு மாசம் ஆயிடுச்சுங்குறதை நம்பவே முடியலை. நாள்கள் வேகமா ஓடிகிட்டு இருக்கு'' - தன் குழந்தை குறித்து கண்கள் விரியப் பேசத் தொடங்கினார் மைனா நந்தினி`

``பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, என் லைஃப்ல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சது. அதுல ஒண்ணுதான் என் குழந்தை. அவன் என் வயித்துல இருந்தபோதே செம சுட்டி. உதைச்சுக்கிட்டேதான் இருப்பான். இப்போ தவழ்ந்துகிட்டு `ஆ... ஊ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டான். நான் ஷூட்டிங்க்கு போற டைம்ல அவன் பாட்டிகிட்ட சமர்த்தா இருப்பான். ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும் என்கிட்ட தாவிப்பான். வீட்டுல உள்ள யாராவது அதட்டுனாகூட கொஞ்சம் பயப்படுவான். ஆனா, என்கிட்ட அவனுக்கு பயமே இல்ல. நான் கோபமா அதட்டுனாகூட சிரிப்பான். அதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்துடும். நீங்க வேணும்னா பாருங்க... ஃபியூச்சர்ல நானும் அவனும்தான் `எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி!’

அவனுக்கு நாங்க இப்போ பெருசா எதையும் கத்துக்கொடுக்கல. எல்லார் மேலயும் பாசமா இருக்கணும்ங்குறதை மட்டும் புரிய வெச்சிக்கிட்டு இருக்கோம். தினமும் காலையில எழுந்ததும் 5 நிமிஷம் கை தட்டிகிட்டே அவனுக்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல கத்துக்கொடுக்குறோம். அவனும் சிரிச்சுகிட்டே ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல டிரை பண்றான். அதைப் பார்க்க அவ்ளோ கியூட்டா இருக்கு. வளர்ந்த பிறகு, எத்தனை பேருக்குச் சொல்லப் போறானோ..!''

ஹா... ஹா... அவன் ‘2கே கிட்’டுங்க!

ஆஹா... சூப்பர், அதை மட்டும் கேட்காதீங்க...

லாக்டௌன் அனுபவங்கள் பகிரும் சின்னத்திரை நாயகிகள்!

‘லாக்டௌனா! அப்பப்பா... வீட்டுக்குள்ளேயே இருந்து செம்ம போரிங்’ என்பதில் தொடங்கி ‘கும்பலோட கும்பலா எதையோ பண்ணிட்டு இருந்தோம். அதுல இருந்து லாக்டௌன்தான் சாப விமோச்சனம் கொடுத்துச்சு’ என்பதுவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம். சின்னத்திரை நடிகைகளுக்கு லாக்டௌன் நாள்கள் எப்படியிருந்தன... கேட்போமா?

சேனல் சைட் டிஷ்

அம்மு

``லாக்டௌன் எனக்கு அருமையா போச்சுங்க. வாக்கிங் போனேன். நிறைய புக்ஸ் படிச்சேன். இந்த கேப்ல அலையன்ஸ் வேற வந்துதுங்க எனக்கு. ஆனா, எதுவும் சரிபட்டு வரல. நிறைய தனிமை. ஆனாலும், இந்தத் தனிமைதான் எனக்கான மனுஷங்க யார் யாருங்குறதை வெளிப்படையா காட்டிக்கொடுத்திருக்கு. லாக்டௌன்ல

‘புதுசா கத்துக்கிட்டேன்’னு சொல்ற மாதிரி எந்த ஹாபியையும் வளர்த்துக்கல. அதே மாதிரி, முன்னாடி இருந்தே ஃபாலோ பண்ணிட்டு வர்ற எந்த ஹாபியையும் விடல. லைஃப் அப்படியே போயிட்டு இருக்கு!”

சேனல் சைட் டிஷ்

ஜீவிதா

“லாக்டௌனா... அதைப் பத்தி மட்டும் கேட்காதீங்க... படுத்தி எடுத்துடுச்சு. தனிமையில நொந்துட்டேங்க. சினிமாவுல இருக்குறவங்களுக்கு பிரதானமே ஷூட்டிங் தான். அதுவே நின்னுடுச்சு. அப்ப எப்படிங்க சந்தோஷமா இருக்குறது. இவங்களுக்கு என்ன, சினிமாவுல இருக்காங்கன்னு ஈஸியா சொல்லிடுறாங்க. வீட்டு வாடகை கொடுக்குறது முதல் மளிகை சாமான் வாங்குறதுவரை எல்லோரையும் போலவே எங்களுக்கும் சவால்கள் இருக்கு. இப்படி லாக்டௌன் இழுப்படியா போயிருந்தாலும்கூட, டெய்லி அசத்தலா விதவிதமா குக் பண்ணி என்னையே நான் அசத்திகிட்டேனா பாருங்களேன். நான் சூப்பரா சமைப்பேன். ஷூட்டிங்ல பிஸியா இருந்ததால சிம்பிளா சமைச்சிட்டிருந்தேன். ஆனா, லாக்டௌன்ல தினுசு தினுசா இன்னும் வெரைட்டியா சமைக்கக் கத்துக்கிட்டேன்.”

சேனல் சைட் டிஷ்

ஜனனி அஷோக்

``லாக்டௌன்ல நிறைய சமையல் எக்ஸ்பர்ட்ஸ் உருவானதை கவனிச்சேன். நான் ஒதுங்கினது யூடியூப் பக்கமா. லாக் டௌனுக்கு முன்னால இருந்தே நான் யூடியூப்ல இருக்கேன். ஆனா, வீடியோஸ் அதிகம் போட ஆரம்பிச்சது லாக்டௌன் நேரத்துலதான். விஜய் டிவில ஆங்கர் ஆகிடணும்னு திரைத்துறைக்கு வந்தேன். `செம்பருத்தி' சீரியல்ல முக்கிய கேரக்டர்ல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, திடீர்னு அந்த சீரியல்ல இருந்து என்னை நீக்கிட்டாங்க. அது என்னை ரொம்பவே பாதிச்சது. இருந்தாலும் என் முயற்சியை நான் விடல. `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் இப்ப ரொம்ப நல்லாவே போகுது. நான் யூடியூப்ல போடுற வீடியோஸை நிறைய பேர் பார்க்குறது சந்தோஷமா இருக்கு!”

சேனல் சைட் டிஷ்