Published:Updated:

``தமிழ் பிக்பாஸ்ல இல்லாத அந்த தெலுங்கு பிக்பாஸ் டெரர்..!'' - பாபா பாஸ்கரின் அனுபவம்

பாபா பாஸ்கர்
பாபா பாஸ்கர்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மூன்றாம் இடம் வென்றிருக்கிறார் பாபா பாஸ்கர். சென்னை திரும்பியவரை சந்தித்துப் பேசினோம்.

பிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது?

‘’வாழ்க்கையில் எல்லாரும் ஒரு முறை காசிக்கு போயிட்டு வந்திடணும்னு சொல்லுவாங்க. அதே மாதிரி, எல்லா செலிபிரிட்டியும் ஒரு முறை பிக் பாஸுக்கு போயிட்டு வந்திடணும்னு நினைக்கிறேன். ஏன்னா, வெளியில செலிபிரிட்டிக்கு பல வசதிகள் இருக்கு. அதெல்லாம் எதுவுமே இல்லாம, அந்த வீட்டுக்குள்ள இருக்குறது ஒரு தனி அனுபவம். நிச்சயம் அந்த அனுபவத்தை அனுபவிக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் என் வீட்டுக்கும் பிக் பாஸ் வீட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என் வீட்டுல நான்தான் எல்லா வேலைகளையும் பார்ப்பேன். அங்கேயும் நான் அப்படித்தான் இருந்தேன். அதுனால எனக்கு செம ஜாலியா இருந்துச்சு.’’

`பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா?! #Nostalgia

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்ததும் உங்க மனசு என்ன சொல்லுச்சு?

பாபா பாஸ்கர்
பாபா பாஸ்கர்

’’பிக் பாஸ்ல இருந்து என்னை கூப்பிட்டதும், முதலில் என் மனைவிகிட்டதான் சொன்னேன். சொன்னதும், ’சூப்பருங்க... போங்க’னு சொன்னாங்க. அடுத்த நாள், ’வேணாம்’னு சொன்னாங்க. அப்பறம், ’போங்க’ன்னு சொன்னாங்க. இப்படி பிக் பாஸ் போறதுக்கே நிறைய குழப்பங்கள் இருந்துச்சு. எனக்கும் வெளியில நிறைய வேலைகள் இருந்ததனால, முதலில் வேணாம்னுதான் சொன்னேன். ’நீங்க வந்தா நல்லா இருக்கும்; பல பேர் இதையே ஃபீல் பண்றாங்க’ன்னு சொல்லி, ஓகே பண்ண வெச்சுட்டாங்க. பிக் பாஸ் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ரெண்டு நாள், என்னை செமையா பயப்பட வெச்சுட்டாங்க. நான் ஹைதராபாத் ஏர்போர்ட்ல இறங்குனதுல இருந்து பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்னை அனுப்புற வரைக்கும், எனக்கு பல டெஸ்ட்டுகள் எடுத்தாங்க. என்னை யார்கிட்டயும் பேசக்கூடாதுனு சொன்னாங்க. ஒரு மாதிரி பயமாகிடுச்சு. ஒரு கட்டத்துல, பேசாம நெஞ்சு வலிக்குதுனு சொல்லி ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துக்கலாமான்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம், 'முன்ன வெச்ச காலை பின்ன வைக்கக்கூடாதுடா பாஸ்கரே'னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிட்டேன்.''

அந்த வீட்டுக்குள்ள போற வரைக்கும் இருந்த பயம், போனதுக்கு அப்பறம் இல்லை. மற்ற போட்டியாளர்கள் எல்லாருமே என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. நான், பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்ததேயில்லைங்கிறதுனால, எனக்கு எந்த ரூல்ஸும் தெரியாது. அங்க போய்தான் எல்லாத்தையும் கத்துக்க ஆரம்பிச்சேன். அந்த வீட்டுக்குள்ள ரெண்டு வாரத்துக்கு மேல் நான் இருக்க மாட்டேன்னு நானே முடிவு பண்ணிட்டு, ரெண்டு வாரத்துக்கான டிரெஸ் மட்டும்தான் எடுத்துட்டுப்போனேன். ஆனால், மொத்தம் 105 நாள் அந்த வீட்டுக்குள்ள இருந்தேன். அதுக்கு, ஆந்திர மக்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அங்க எனக்குன்னு ஒரு வட்டத்தை கிரியேட் பண்ணிக்கிட்டேன். காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சிடுவேன். காக்கா, குருவிக்கு இட்லி வைப்பேன். ஒரு வாரம் தொடர்ந்து வச்சிட்டே இருந்தேன். அதுக்கப்பறம், ஒரு கூட்டமே காலையில வந்திடும். எல்லா பறவைக்கும் சாதம் வைக்கிறதுதான் முதல் வேலை. அதை முடிச்சிட்டு, வீட்டுக்குள்ள இருக்கிற வேலையைப் பார்ப்பேன். அப்பப்போ மத்தவங்களை கலாய்ப்பேன். இப்படியே பண்ணி ஃபைனலுக்கு வந்துட்டேன்.’’

பிக் பாஸ் வீட்டுக்குள்ள நிறைய நாள் இருக்க ஏதாவது வியூகங்களை ஃபாலோ பண்ணீங்களா?

``பாத்ரூம்ல லவ் சொல்லியிருந்தா நல்லாவா இருந்திருக்கும்!'' -  பிக் பாஸ் பியர்லி

"தமிழ் பிக்பாஸைவிட தெலுங்கு பிக்பாஸ் செம டெரர். முதல்ல எந்த வியூகமும் இல்லாமதான் இருந்தேன். ஆனா, இரண்டு வாரம் என்கூட அவ்ளோ நட்பா பழகினவங்க, யார் பச்சோந்தினு கேட்கும்போது என் பேரைச்சொன்னாங்க. அப்புறம்தான் அவங்கள்லாம் ஏதோ ஸ்ட்ராட்டஜி பயன்படுத்துறாங்கன்னு புரிஞ்சது. என்னோட வியூகம் ரொம்ப சிம்ப்பிள். அன்பு மட்டும்தான். அந்த அன்புதான் என்னை இறுதிவரை கொண்டுவந்தது."

நீங்களும் தனுஷூம் ரொம்ப க்ளோஸ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போறதை அவர்கிட்ட சொன்னீங்களா; அவர் என்ன சொன்னார்..?

’’தனுஷ் சாரை நேரா பார்த்து சொல்லலை. அவரோட உதவியாளர்கிட்ட சொல்லி, சொல்லச்சொன்னேன். தனுஷ் சாரும் கொஞ்ச நாள் பிக் பாஸ் பார்த்திருக்கார். அப்பறம் நான் வெளியில வந்ததும் அதே உதவியாளர்கிட்ட, வந்துட்டேன்னு சொல்லச்சொன்னேன். ‘நீங்க வின் பண்ணிட்டு வருவீங்கனு நினைச்சா, மூணாவது இடத்துல வந்துட்டீங்களே’னு தனுஷ் சார் சொன்னதா சொன்னார். நான், வின் பண்ணணும்கிற எண்ணத்திலேயே அங்க போகல. நிறைய விஷயங்களை கத்துக்கத்தான் போனேன். அங்க போய் நான் கத்துக்கிட்ட மிக முக்கியமான விஷயம் என்னன்னா, ’காத்திருத்தல்’தான். வெளியில இருக்கும்போது நாம காபினு கேட்டா, உடனே வந்திடும். ஆனா, அங்க அப்படி கிடையாது. எதையுமே நாம கேட்ட உடனே கொடுக்க மாட்டாங்க. அதுக்கு நாம காத்திருக்கப் பழகணும்கிற விஷயத்தைக் கத்துக்கிட்டேன். அது நம்ம வாழ்க்கைக்கு ரொம்பவே யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.’’

அடுத்தடுத்து என்ன ப்ளான்..?

பாபா பாஸ்கர்
பாபா பாஸ்கர்

’’5 படங்களுக்கான ஸ்கிரிப்ட் என்கிட்ட இருக்கு. அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணி படங்கள் பண்ணணும். திடீர்னு ஆல்பம் சாங்ஸ் பண்றதுல ஆர்வம் வந்திருக்கு. அதுவும் ட்ரை பண்ணணும். 100 நாள் கழிச்சு இப்போதான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கேன். இனிமேல்தான் கோரியோகிராபிக்கும் வாய்ப்புகள் வரும்.’’

அடுத்த கட்டுரைக்கு