Published:Updated:

`செந்தூரப் பூவே' புரோமோவில் பிரியா ராமன்... அப்ப `செம்பருத்தி' அகிலாண்டேஸ்வரி?

செந்தூரப் பூவே
செந்தூரப் பூவே

இந்த புரொமோ வெளியானது முதலே 'செந்தூரப் பூவே' சீரியலில் இனி பிரியா ராமனா என்கிற கேள்வி, சந்தேகம் சீரியல் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது. விடுவார்களா சோஷியல் மீடியாவில்?

ஒரேயொரு நிமிடம் வெளியாகிற சீரியல் புரோமோக்கள் கூட சமயங்களில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பைக் கிளப்பிவிடுகின்றன.

கடந்த சில தினங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'செந்தூரப் பூவே' தொடரின் புரொமோவும் அப்படித்தான்.

சீரியலின் ஹீரோ ரஞ்சித் கோயிலுக்கு வர, அந்த நேரத்தில் அங்கு நான்கைந்து ரௌடிகள் நடிகை பிரியாராமனிடம் வம்பு செய்ய, அந்த ரௌடிகளை அடித்து விரட்டுகிறார் ரஞ்சித்.

பிரியா ராமன் | `செம்பருத்தி' அகிலாண்டேஸ்வரி
பிரியா ராமன் | `செம்பருத்தி' அகிலாண்டேஸ்வரி
இந்த புரொமோ வெளியானது முதலே 'செந்தூரப் பூவே' சீரியலில் இனி பிரியா ராமனா என்கிற கேள்வி, சந்தேகம் சீரியல் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது. விடுவார்களா சோஷியல் மீடியாவில்?

"அப்படின்னா, இப்ப இருக்கிற ஹீரோயின் மாறிட்டாங்களா?", "என்ன பிரச்னையோ!", "பிரியா ராமன் 'செந்தூரப் பூவே'க்கு வந்துட்டா, 'செம்பருத்தி'யில இல்லையா?", "சமீபத்துலதான் இந்த ஜோடி திருமண நாளைக் கூடக் கொண்டாடினாங்க, அதுக்குள் ஜோடியா சின்னத்திரையில் என்ட்ரியா?" என ஏகப்பட்ட அலசல்கள்.

செந்தூரப் பூவே
செந்தூரப் பூவே

சீரியல் ரசிகர்களின் இந்தs சந்தேகங்களைப் போக்க விஜய் டிவி தரப்பிலேயே பேசினோம்.

"'செந்தூரப் பூவே' தொடர்ல ஒரு சிறப்புத் தோற்றத்துல நடிச்சாங்க பிரியா ராமன். ஃபிளாஷ்பேக் மாதிரி அந்த போர்ஷன் வந்துபோகும். அதுக்கு சில நாள் தேதி கொடுத்து நடிச்சுக் கொடுத்துட்டுப் போனாங்க, அவ்ளோதான். மத்தபடி 'செந்தூரப் பூவே' சீரியல்ல எந்த மாற்றமும் இல்லை" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு