Published:Updated:

`கலர்ஸ் `திருமணம்' சீரியலின் இயக்குநர் திடீர் மாற்றம். யார் அந்தப் புதிய இயக்குநர்?

வே.கிருஷ்ணவேணி

`சன் டி.வி', `விஜய் டி.வி', `ஜி தமிழ்' போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களின் முக்கிய கதாபாத்திரங்கள் மாறி வரும் வேளையில், தற்போது இயக்குநர்களையும் அசால்ட்டாக மாற்றுகிறார்கள்.

`திருமணம்'... கலர்ஸ் தமிழின் ஸ்டார் சீரியல்!
`திருமணம்'... கலர்ஸ் தமிழின் ஸ்டார் சீரியல்!

நேற்று, ஜி தமிழ் `பூவே பூச்சூடவா' சீரியலிலிருந்து தினேஷ் வெளியேறியுள்ளார். அதேபோல, `செம்பருத்தி' சீரியலின் இயக்குநர்களும் மாறிய வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சமீபத்தில், கலர்ஸ் `திருமணம்' சீரியலின் இயக்குநரும் மாறியிருக்கிறார். என்ன ஆச்சு என சேனல் தரப்பில் விசாரித்தேன்.

`மித்ரன் ஜவஹர்தான் இந்த சீரியலை இதுவரை இயக்கி வந்தார். இந்நிலையில், அவர் தற்போது சீரியலின் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். விஜய டி.வியில் செந்தில், ஶ்ரீஜா இருவரும் இணைந்து நடித்த `சரவணன் மீனாட்சி' முதல் பாகத்தை இயக்கிய அழகர் `திருமணம்' சீரியலை கடந்த இருபது நாள்களாக இயக்கி வருகிறார்.

திருமணம்
திருமணம்

இந்த வாரம்`திருமணம்' சீரியலின் 170 எபிசோட் முடியப்போகிறது. மக்களிடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சீரியல் எனும்போது சந்தோஷமாக இருக்கிறது' என்கிறார்கள் சேனல் தரப்பில். 

`திருமணம்' சீரியலின் கதைப்படி, சந்தோஷ், ஜனனி இருவருக்கும் திருமணம் நடக்கும். அப்பா, அம்மாவுடைய கட்டாயத்தின் பேரில்தான் உங்களைக் கல்யாணம் பண்ணேன். நான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்' என சந்தோஷ், ஜனனியிடம் சொல்வார். நான் எவ்வளவோ உங்களுக்கு இதை தெரிவிக்க முயற்சி செய்தேன். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நாம இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிடலாம்'னு சந்தோஷ் சொல்ல, அதற்கு ஜனனியும் சம்மதிப்பாள்.

இந்நிலையில், சந்தோஷின் காதலி சக்தி அவரைச் சந்திக்க வருகிறாள். `நான் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகிறேன். நான் திரும்பி வருவதற்குள் ஜனனியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடுமாறு சொல்லிவிட்டுச் செல்கிறாள். இரண்டு, மூன்று மாதத்திற்குள் விவாகரத்துக்கான வேலைகளைச் செய்வது, மனநல ஆலோசகரைச் சந்திப்பது என எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். இதற்கு இடையில் சந்தோஷ்- ஜனனி இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. விவாகரத்து பற்றிப் பேசும்போது, ஒரு வருடம் ஆகட்டும் என நீதிமன்றம் தரப்பில் சொல்லிவிடுகிறார்கள். 

திருமணம்
திருமணம்

இந்நிலையில், தற்போது, புரமோவில், ``இரண்டு பெண்களின் மனதிலும் காதலை ஏற்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன்'' என ஜனனியின் கைப்பிடித்து அழுகிறான் சந்தோஷ். இப்படி ஒரு புரமோ வெளிவந்திருக்கிறது.

திருமணம்
திருமணம்

சக்தி வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததும், ஜனனியை விவாகரத்து செய்துவிட்டு சந்தோஷூம், சக்தியும் இணைவார்களா அல்லது ஜனனி மீது வந்துள்ள காதலை வைத்து ஜனனியுடனே சந்தோஷ் தொடர்ந்து வாழ்வாரா என்பது வரும் திங்கட் கிழமைதான் தெரியும்.