Published:Updated:

"அந்த வீடியோ மட்டும் ரிலீஸ் ஆகிவிடக் கூடாது!" - பிக்பாஸ் ஜூலியின் ஃபோட்டோஷூட் பஞ்சாயத்து

ஜூலி

சமீபத்தில் வைரலான ஜூலியின் ஃபோட்டோஷூட்டுக்குப் பின்னால் பெரும் பஞ்சாயத்து!

"அந்த வீடியோ மட்டும் ரிலீஸ் ஆகிவிடக் கூடாது!" - பிக்பாஸ் ஜூலியின் ஃபோட்டோஷூட் பஞ்சாயத்து

சமீபத்தில் வைரலான ஜூலியின் ஃபோட்டோஷூட்டுக்குப் பின்னால் பெரும் பஞ்சாயத்து!

Published:Updated:
ஜூலி

பிக் பாஸ் ஜூலி விதவிதமான கெட்-அப் களில் காட்சியளித்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலானதல்லவா? அந்த ஃபோட்டோஷூட் நடத்தியவர் நடிகையும், வீடியோ ஜாக்கியுமான ப்ரியா.

தற்போது ப்ரியா ஜூலி இருவருக்குமிடையே பெரிய பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருப்பதாக பட்சிகள் மூலம் தெரியவர, ப்ரியாவிடம் பேசினேன்.

ப்ரியா
ப்ரியா

‘’சில தினங்களுக்கு முன்னாடி புதுசா 'சாரா மேக் ஓவர் ஸ்டுடியோ' திறந்தேன். அதோட ப்ரமோஷனுக்காக ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்களைக் கூப்பிட்டு மேக்-அப், ஃபோட்டோ ஷூட்னு நடத்த ஆரம்பிச்சேன். அப்பதான் ஜூலியையும் போட்டோஷூட்காக கேட்டேன்.

சரின்னு சொல்லி வந்தாங்க. கல்யாணப் பொண்ணு அலங்காரத்துல, வட இந்திய ஸ்டைல்ல, புடவைல, மேற்கத்திய மாடர்ன் லுக்லனு வெரைட்டியா போட்டோஷூட் பண்ணோம். இதுக்கு முன்னாடி போட்டோஷூட் பண்ணியிருக்காங்களான்னு தெரியாது. ஆனா, ரொம்பவே ஆர்வமா ஒத்துழைப்பு தந்தாங்க. ஒருநாள் முழுக்க ஷூட் நடந்தது. நாங்க கேட்காமலேயே விதவிதமா போஸ் தந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருகட்டத்துல ஆர்வத்துல ’சிகரெட் கிடைக்குமா’ன்னு அவங்களாத்தான் கேட்டாங்க. நான் ‘சிகரெட் பிடிப்பாங்க போல’னு நினைச்சு அதையும் வாங்கித் தரச் சொன்னேன். சிகரெட் பிடிச்சாங்க. அப்ப ஷூட் பண்றதை நிறுத்தினோம். ஆனா, ’பரவால்ல, இதையும் ஷூட் பண்ணுங்க'ன்னு சொன்னாங்க. ஸ்டைலா புகை விட்டபடி ஃபோட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டாங்க. அவங்க சொன்னபடியெல்லாம் ஷூட் பண்ணோம். ஒரு நாள் முழுக்க ஷூட் நடந்தது.

புதுசா இப்பதான் தொடங்கியிருக்கறதால பேமென்ட் தர்றது சிரமமா இருக்கும்னு சொன்னதுக்குச் சம்மதிச்சுதான் வந்தாங்க. அதேநேரம் மூணு காஸ்ட்யூம், மத்த செலவுகள்லாம் சேர்த்து எனக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல செலவாச்சு.

ஜூலி
ஜூலி

எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. அந்த ஃபோட்டோக்களை, வீடியோவை நான் புரமோஷனுக்காகப் பயன்படுத்தத் தொடங்கினேன். உடனே என் லைனுக்கு வந்தவங்க, 'நான் சொல்ற ஃபோட்டோக்களை, நான் சொல்ற நேரத்துலதான் வெளியிடணும்'னு சொன்னாங்க. நான் ஃபோட்டோஷூட் முடிஞ்சிடுச்சு. பரஸ்பரம் ஒரு புரிதலோடுதான் நாம வொர்க் பண்ணியிருக்கோம். உங்க புரஃபைலுக்கான ஃபோட்டோக்களும் தந்தாச்சு. அதனால இனி ஸ்டூடியோ ப்ரமோஷனுக்கு ஃபோட்டோஸ், வீடியோக்களைப் பயன்படுத்துறது என்னுடைய விருப்பம். அதுல நீங்க தலையிட்டா எப்படி’னு கேட்டேன்.

உடனே, ’நான் என் வக்கீல்ட்ட பேசப்போறேன்'னு சொன்னாங்க. 'தாராளமாப் பேசுங்க’னு சொல்லிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘கையில கிளாஸ் வச்சிருக்கிற மாதிரி, சிகரெட் பிடிக்கற மாதிரியெல்லாம் நானா இவங்களை போஸ் கொடுக்கச் சொன்னேன்? அவங்களா விருப்பப்பட்டு கொடுத்தாங்க. எடுத்தேன். இப்ப அந்தப் புகைப்படங்கள் வெளிய வந்துடுமோன்னு பயப்படுறாங்கபோல. அதுக்கு மிரட்டல் தொணியில பேசினா என்னங்க நியாயம்? நான் என் பிசினஸ்காகத்தான் இந்த ஃபோட்டோஷூட் பண்ணேன். வீடியோவை, ஃபோட்டோக்களை எப்ப பயன்படுத்தணும்னு இவங்ககிட்ட அனுமதி கேட்கணும்னு சொல்றது எந்த விதத்துலயும் சரியில்லை.

ஜூலி
ஜூலி

ஏற்கெனவே சோஷியல் மீடியாவுல ’இவங்களை வெச்சா ஏன் ஃபோட்டோ ஷூட் நடத்தனீங்க’னு என்னைக் கலாய்சிட்டிருக்காங்க. அந்தளவு இவங்களுக்கு அங்க பேர் ரிப்பேரா இருக்கு. இந்த லட்சணத்துல வக்கீல்கிட்ட போவேன், கோர்ட்டுக்குப் போவேன்னு மிரட்டினா? 'என்ன பண்ண நினைக்கறீங்களோ பண்ணிக்குங்க’னு சொல்லிட்டேன். இவங்களுக்கு ஒரு வக்கீல் கிடைக்கிறப்ப எனக்கும் ஒரு வக்கீல் கிடைக்க மாட்டாங்களா?'' என்கிறார் ப்ரியா.

ஜுலியிடம் இது தொடர்பாகக் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஜூலி பேசினால் அவர் தரப்பு விளக்கத்தை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism