Published:Updated:

விகடன் TV: சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்?

சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்

பிற்போக்குத்தனமான கருத்துகள் லட்சக்கணக்கானோர் பார்க்கும் தொலைக்காட்சி வழியே விதைக்கப்படுமானால், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது

விகடன் TV: சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்?

பிற்போக்குத்தனமான கருத்துகள் லட்சக்கணக்கானோர் பார்க்கும் தொலைக்காட்சி வழியே விதைக்கப்படுமானால், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது

Published:Updated:
சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்

ஒரு சீரியல் சர்ச்சையாகலாம். ஒரு சீரியலின் புரொமோவே இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

‘‘ஒரு மஞ்சக் கயித்தைக் கட்டிட்டு, நெத்தியில குங்குமம் வச்சு விட்டுட்டா, பொண்டாட்டி ஆயிடுவியா?'’ என சீரியலின் ஹீரோ ஒரு கோயிலில் நின்றபடி ஹீரோயினைப் பார்த்துக் கேட்ட அந்த புரொமோ வெளியானதும் செம வைரலாக, கூடவே கடும் விமர்சனங்களும் கிளம்பின.

‘பிற்போக்குத்தனமான கருத்துகள் லட்சக்கணக்கானோர் பார்க்கும் தொலைக்காட்சி வழியே விதைக்கப்படுமானால், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது' என சமூகச் செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்ப, ஹைலைட்டாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமாரும் இந்த புரொமோவுக்குப் பதிலளிக்கும் விதமாகச் சில கருத்துகளைப் பதிவிட்டார். ‘பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களைத் துன்புறுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

விகடன் TV: சர்ச்சைகளுக்காகவா வசனங்கள்?

ஜீ தமிழ் சேனலின் ‘செம்பருத்தி’ சீரியலிலும் சமீபத்தில் ஒரு டயலாக். அகிலாண்டேஸ்வரியின் இடத்துக்கு அடுத்து யார் வருவது என்பதைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யலாம் என முடிவு செய்கிறார்கள். அப்போது ‘ஓட்டுப் பெட்டியை மாத்திடலாமா' என வில்லிக்குத் துணைபோகும் ஒரு கேரக்டர் கேட்க, ‘அதெல்லாம் பொதுத் தேர்தல்ல செய்யலாம், இது ஒரு வீட்டுக்குள் நடக்கிற தேர்தல்' என்கிறார் வில்லி.

இந்த மாதிரியான வசனங்கள் டி.ஆர்.பி-க்காகவா, அல்லது, தெரியாமல் நிகழ்கிற தவறா?

‘‘பரபரப்புக்காக சர்ச்சையான வசனங்கள் வைக்கப்படுதுன்னு சொல்லிட முடியாது. ஏன்னா, வசனம் எழுதுகிற போது, சீரியல் ஒளிபரப்பாகிற சேனல்கள்லயே கிரியேட்டிவ் ஹெட், சேனல் ஹெட்னு பல மட்டங்கள்ல அதைக் கவனிக்கிறாங்க. பிரச்னை வரும்னு சந்தேகம் இருந்தாலே சட்ட நிபுணர்கள் குழுவுல யோசனை கேட்பாங்க. இதையெல்லாம் மீறி சர்ச்சையான வசனங்கள் ஒளிபரப்பாகிட்டா, பிராட்காஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளையின்ட் கவுன்சில்னு ஒரு அமைப்பு இருக்கு. அங்கிருந்து நடவடிக்கை பாயும். அதனால, இவையெல்லாம் தற்செயலானவைதான்’' என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த சீரியல் எழுத்தாளர்.

டி.ஆர்.பி-க்காக ஆணாதிக்கத்தையும் மூடநம்பிக்கையையும் திணிப்பது ஆபத்தானது.