Published:Updated:

`` `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க'னு டயலாக் வைக்கிறாங்க!'' - `ஆயுத எழுத்து' சீரியல் பிரச்னை

Aayutha ezhuthu serial

``எல்லாம் நன்மைக்கேங்கிற ஒரே வார்த்தையைத்தான் உங்க கேள்விக்கான பதிலா என்னால் சொல்ல முடியும்'' - ஶ்ரீத்து

Published:Updated:

`` `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க'னு டயலாக் வைக்கிறாங்க!'' - `ஆயுத எழுத்து' சீரியல் பிரச்னை

``எல்லாம் நன்மைக்கேங்கிற ஒரே வார்த்தையைத்தான் உங்க கேள்விக்கான பதிலா என்னால் சொல்ல முடியும்'' - ஶ்ரீத்து

Aayutha ezhuthu serial

`விஜய் டிவியில படிச்சு, அதே விஜய் டிவியில கலெக்டர் ஆகிட்டார்' என எந்த நேரத்தில் மீம் போட்டார்களோ, கலெக்டரை மாற்றிவிட்டார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `ஆயுத எழுத்து' சீரியல் விவகாரம் இது. நேற்று வரை சிரியலின் ஹீரோ ஹீரோயினாக இருந்த அம்ஜத் - ஶ்ரீத்து (சக்தி - இந்திரா) ஜோடி திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி நான்கு மாதங்களே ஆன நிலையில் திடீரென ஏன் இந்த ஜோடி வெளியேறியது என்பதைப் பார்க்கும் முன், அந்த `மீம்' குறித்துப் பார்க்க வேண்டாமா?

ஶ்ரீத்து கிருஷ்ணன் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமானது விஜய் டிவியில் ஒளிபரப்பான `7 சி' சீரியல் மூலம். அந்த சீரியலில் பள்ளிக்கூட மாணவியாக வந்திருப்பார். சீரியல் ரசிகர்கள் மத்தியில் அந்தத் தொடரும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

sreethu meme
sreethu meme

தொடர்ந்து வேறு சேனல்களின் சீரியல்கள் சிலவற்றில் நடித்துவிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மறுபடியும் `ஆயுத எழுத்து' மூலம் விஜய் டிவிக்கு வந்தார் ஶ்ரீத்து. ஆயுத எழுத்தில் அவருக்கு நேர்மை ப்ளஸ் கறாரான அதேநேரம் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்படுகிற சப் கலெக்டர் ரோல். இரண்டு சீரியல்களுக்குமான இடைவெளி ஏழு ஆண்டுகள் என்றாலும், `எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே' என பின்னந்தலையைத் தட்டிய சீரியல் ரசிகர்கள் கடைசியில் 'அட அந்தப் புள்ளல்ல இது' எனக் கண்டு பிடித்துவிட்டார்கள். விளைவு... சோஷியல் மீடியாக்களில் தெறித்தன மீம்ஸ்.

``நானும் பார்த்தேன்; ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்களேன்னு நினைக்கிறப்ப ரொம்பவே சந்தோஷமா இருந்தது'' என மீம் குறித்து ஶ்ரீத்துவுமே கூடச் சொல்லியிருந்த நிலையில்தான், தற்போது சீரியலில் அதிரடியான இந்த மாற்றம்.

ஏன், என்ன நடந்தது என விசாரித்தோம்.

``சினிமா மற்றும் சில வெப் சீரிஸ்களில் கமிட் ஆகியிருப்பதுதான் காரணம்'' என அம்ஜத் தரப்பு சொல்ல, ஶ்ரீத்துவைக் கேட்டோம்.

sreethu
sreethu

``எல்லாம் நன்மைக்கேங்கிற ஒரே வார்த்தையைத்தான் உங்க கேள்விக்கான பதிலா என்னால் சொல்ல முடியும். மத்தபடி என்ன நடந்ததுங்கிற எல்லா விவரமும் போகப்போகத் தானாகவே எல்லோருக்கும் தெரிய வரும்னு நினைக்கிறேன்'' எனச் சுருக்கமாக அவர் முடித்துக்கொள்ள, ஶ்ரீத்துவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

``ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், தயாரிப்பாளர்னு சகட்டு மேனிக்கு ஆள் மாறுவது சீரியல் உலகத்தில் புதுசு இல்ல. ஆனா, ஒருத்தர் போய் இன்னொருத்தர் வர்றப்ப தர்ற பில்டப்தான் ரொம்பவே ஓவரா இருக்கு. `இவங்களுக்குப் பதில் இவங்க'னு சொல்லிட்டுக் கடந்து போயிட வேண்டியதுதானே? அதைவிட்டுட்டு, `ஆளே மாறிட்டல்ல'னு டயலாக் வெச்சு, `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க, துறுதுறுன்னு இருக்க'ன்னு டயலாக் பேசவைக்கிறது, `கதையின் போக்கையே புரட்டிப்போடப் போகும் அதிரடி மாற்றம்'ங்கிறது... இதெல்லாம்தான் நல்லா இல்லை.

sreethu
sreethu

இது மூலமா என்ன சொல்ல வர்றாங்க, பழைய நடிகர்களைக் கேலி செய்றாங்களா? `ஆயுத எழுத்து'லயும் அதே மாதிரிதான் பண்ணியிருக்காங்க. ஒரு சீரியல்ல இருந்து வெளியேறும்போது ஒருசிலர் சந்தோஷமா போகலாம். சிலர் மன வருத்தத்துடன் வெளியேறலாம். வருத்தத்துடன் வெளியேறுகிறவர்களை இந்தப் பேச்சுகள் மேலும் காயப்படுத்தும். ஏன் அவங்களை கஷ்டப்படுத்தி அனுப்பணும்?' எனக் குமுறினார்கள்.