Published:Updated:

குக் வித் கோமாளி - அடுத்த சீசன் ரெடி!

பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
பார்த்திபன்

டிவி

குக் வித் கோமாளி - அடுத்த சீசன் ரெடி!

டிவி

Published:Updated:
பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
பார்த்திபன்

`ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இந்த அளவுக்கு ஆடியன்ஸ் இருப்பார்களா' என வியக்கவைத்திருக்கிறது, ‘குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி. இதன் இயக்குநர் பார்த்திபனை ஒரு மழைநாளில் சந்தித்தோம்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. விஸ்காம் படிச்சேன். காலேஜ் படிக்கும்போதுதான் மீடியான்னா என்னன்னே தெரியும். அப்போ விளம்பரப் படங்கள் இயக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கும்போது ‘மீடியா மேசன்ஸ்’ புரொடக்‌ஷன் கம்பெனியில இன்டர்ன்ஷிப் கிடைச்சுது. ஃபைனல் இயர் படிக்கும்போது, அங்கேயே பார்ட் டைமாக வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அங்க நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். காலேஜ் முடிச்சதும் டைரக்டரா என்னோட முதல் ஷோ, ‘தினம் ஒரு சுவை.’ அதுக்குப் பிறகு வந்த ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சிதான் என்னை ஒரு முழுமையான டைரக்டரா நானே பரிசோதனை செய்துக்கிட்ட தளம்.

குக் வித் கோமாளி - அடுத்த சீசன் ரெடி!

நான் அப்போ ரொம்பச் சின்னப் பையன். ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ பெரிய டீம். அந்த டீமை மேனேஜ் பண்றதுக்காக, ஆரம்பத்தில் ரொம்பக் கத்துவேன். ரெண்டு மூணு வருஷத்துலேயே அந்த குணத்தை மாத்திக்கிட்டேன். ஆரம்பத்தில் இருந்தே செய்யுற வேலையை ரொம்ப நேசிச்சுச் செய்வேன். டைரக்‌ஷன்ல ஆரம்பிச்சு, எடிட்டிங் முடிஞ்சு, டி.வி-யில டெலிகாஸ்ட் ஆகிற வரைக்கும் எல்லா வேலைகளிலும் என் பங்களிப்பு இருக்கணும்னு நினைப்பேன். நான் தொடர்ந்து நிறைய குக்கிங் ஷோ டைரக்ட் பண்ணினபோது, ‘இதுதான் நமக்கான தளமா, சரியான வழியிலதான் போறோமா'ன்னுலாம் யோசிச்சிருக்கேன். இந்தத் தளம் நிச்சயம் ஏதோ ஒரு வகையில எனக்கான அடையாளமா மாறும்னு நினைச்சேன். அது ‘குக்கு வித் கோமாளி’ மூலமா நடந்திடுச்சு'' என்றவர், ‘குக்கு வித் கோமாளி' ஷோ குறித்த சீக்ரெட்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

`` ‘குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியை ரொம்ப ஜாலியா, கேஷுவலா டைரக்ட் பண்ணினேன். என்ன மாதிரியான குக்கிங் ஷோவாக இதைக் கொண்டுபோகப் போறோம்னு நிறையவே யோசிச்சோம். பிரதீப் சார், ரவூபா மேம், பிரதீமா மேம், மோ.ராமச்சந்திரன் சார், கிருஷ்ணன் குட்டி சார், பாலா சார், பிரியா, முத்துப்பாண்டின்னு டீமா உட்கார்ந்து நிறைய பேசினோம்.

காமெடி ஷோவாக இதைக் கொண்டுபோனால் எப்படி இருக்கும்... என்ன மாதிரியான விஷயங்களை அதில் புகுத்தலாம்'னு நிறைய ஐடியாக்கள் ஷேர் பண்ணுவோம். ஆரம்பத்தில் நாங்க நிறைய பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, ஷோ ஆரம்பிச்சதும் அந்தந்த டைம் என்ன ஒர்க்கவுட் ஆகும்னு எங்களுக்குத் தோணுச்சோ, அதை அப்ளை பண்ணினோம். முதல் எபிசோடு முடிச்சு எடிட்ல ரிசல்ட் பார்க்கும்போது, ‘நாம எதிர்பார்த்த ஷோ இதுதானா'ன்னு எங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கிட்டோம். ஒரு ஆடியன்ஸா எங்களுக்கு இந்த ஷோ பிடிச்சிருக்கான்னு பார்த்தோம். அத்தனை உழைப்புக்கும் இப்போ பலன் கிடைச்சிருக்கு.

குக் வித் கோமாளி - அடுத்த சீசன் ரெடி!

கோமாளிகளைத் தேர்வு செய்றதுல ஆரம்பிச்சு, குக் செலக்‌ஷன் வரைக்கும் எல்லாத்துக்கும் நிறைய டைம் எடுத்துக்கிட்டோம். நாங்க பார்க்கிற ஆட்கள்கிட்ட இருக்கிற திறமையை நோட் பண்ணி, இவங்க ஒர்க் ஆவாங்கன்னு ட்ரை பண்ணினோம். இந்த ஷோவைப் பொறுத்தவரை குக்கிங்தான் கான்செப்ட். கோமாளிகள் குக் பண்றவங்களுக்கு ஹெல்ப்தான் பண்ணணுமே தவிர, வேணும்னே அவங்க பண்ற குக்கிங்கைக் கெடுக்கக் கூடாது. ஆனா, அவங்களுக்கு நிஜமாகவே சமையல் தெரியாது. அதுதான் அங்க ட்விஸ்ட்'' என்றவரிடம், ‘‘சரிங்க, அந்த மூன்றாவது சீஸனைப் பத்திச் சொன்னீங்கன்னா...'' என்றதும் சிரிக்கிறார்.

‘‘இப்போதைக்கு சீஸன் இருக்குன்னு சேனலில் இருந்து கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க. ஆனா, குக், கோமாளி செலக்‌ஷன் இன்னும் ஆரம்பிக்கலை. 'இவங்கதான் அடுத்த குக்'னு சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ற போட்டோஸ் பார்க்கும்போது, ‘அப்படியா'ன்னு எங்களுக்குள்ளேயே கேட்டுக்கிறோம்!

இரண்டாவது சீஸன் பர்சனலா எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்துச்சு. அந்த செட்ல அவ்வளவு பாசிட்டிவிட்டி இருக்கும். எல்லோருக்குள்ளேயும் நல்ல ரிலேஷன்ஷிப் உருவாகிடுச்சு. அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சின்னு நிஜத்திலும் அப்படித்தான் இப்போ வரை பயணிக்கிறோம். சீஸன் முடிஞ்சதும் ஆடியன்ஸ் எந்த அளவுக்கு வருத்தப்பட்டாங்களோ, அதே அளவுக்கு நாங்களும் ஃபீல் பண்ணினோம்.

குக் வித் கோமாளி - அடுத்த சீசன் ரெடி!

எங்க ஷோவில் இருந்தவங்க இப்போ ஒரு வகையில பிசியா இருக்காங்கன்னு கேள்விப்படும்போது, ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கடைசியா நடந்த செலிபிரேஷன் சுற்றுக்கு வரணும்னு புகழ் ரொம்பவே ட்ரை பண்ணினார். ஆனா, ஷூட்டிங் இருந்ததனால அவரால கலந்துக்க முடியலை. ஒரு பக்கம் புகழை மிஸ் பண்ணினாலும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்துச்சு. அவங்க எல்லோருமே இன்னும் இன்னும் மேல போகணும்'' என்றவரிடம் திருமணம் குறித்துக் கேட்கவும் புன்னகைக்கிறார்.

‘‘வீட்ல நான்தான் மூத்த பையன். வேலையை ரொம்ப நேசிக்கிறதனால, ஃபேமிலிக்கு இப்போ என்னால முக்கியத்துவம் கொடுக்க முடியலை. கல்யாணம்கிறது மிகப்பெரிய பொறுப்பு. நம்மளை நம்பி வர்ற பொண்ணுக்கான நேரத்தைச் செலவிடுறது ரொம்ப முக்கியம். என்னோட புரொஃபஷன்ல நான் அடுத்தடுத்த படிக்கட்டுகள் ஏறுறேன்னு வீட்ல எல்லோருக்கும் ஹேப்பிதான். ஆனா, அவங்களுடைய ஒரே ஒரு எதிர்பார்ப்பு என்னுடைய திருமணம் மட்டும்தான்! இந்த வருஷம் ஒருவேளை திருமணம் ஆச்சுன்னா, அடுத்து தலை தீபாவளிக் கொண்டாட்டத்தில் சந்திப்போம்!’'