Published:Updated:

`குக் வித் கோமாளி' சாய் சக்திக்கு கல்யாணம்... எங்கே? எப்போது?

சாய்சக்தி
சாய்சக்தி

சமீபத்தில் 'குக் வித் கோமாளி' ஷோவில் கலந்து கொண்டவர் சாய் சக்தி. இவருக்குத் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

'நாதஸ்வரம்' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சாய் சக்தி. அந்தத் தொடருக்குப் பிறகு 'ஜோடி', 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தொடர்ந்து கலைஞர் டிவியில் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். பிறகு சில காலம் டிவியில் வாய்ப்புகள் ஏதுமில்லாமல் துபாய் சென்று விட்டார்.

சில மாதங்களில் மறுபடியும் சென்னை வந்தவருக்கு பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை சாய்சக்திக்கு மகிழ்ச்சியானதாக அமைய‌வில்லை. அதனால் ஒராண்டிலேயே அந்தத் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்றார்.

சாய்சக்தி
சாய்சக்தி

பின்னர் மறுபடியும் சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார், சமீபத்தில் 'குக் வித் கோமாளி' ஷோவில் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று சாய்சக்திக்கும், மீஞ்சூரைச் சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் ஃபாத்திமா சாய்சக்தியின் உறவுக்காரப் பெண் என்கிறார்கள். ஃபாத்திமாவின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடந்த இந்தத் திருமண நிகழ்ச்சியில் இரு தரப்புக் குடும்ப உறவுகளுடன் சாய்சக்திக்கு நெருக்கமான சில டிவி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு