Published:Updated:

"ஆளுகூடவே ஆலு பரோட்டா..." ஸ்டவ்வுக்குள்ள ஒரு லவ்வு... குக்கு வித் கோமாளி அலப்பறைகள்!

குக்கு வித் கோமாளி
News
குக்கு வித் கோமாளி

சிறிதுநேரம் ஃபீலிங்கில் மிதந்த புகழைச் சுற்றி எடிட்டர், புகழ் ஏர்வேஸ், புகழ் ரெயில்வேஸ், புகழ் அவார்ட்ஸ் என்று கனவுகளைப் பறக்கவிட்டார்.

“வெய்ட்டிங்லயே வெறியேறுதே” ரகமாக இரண்டு நாட்களுக்கு முன்பு குக்கு வித் கோமாளியின் ஒரு ப்ரொமோ வெளியானது. “ஷோ பார்த்தேன் நான். இவ என்னென்ன பண்ணிருக்கா... அஷ்வினுக்குத்தான் ஹெல்ப் பண்ணிட்டிருந்திருக்கா. இன்னைக்கு இவள சும்மா விடமாட்டேன்” என்று பாபா பாஸ்கர் ஷிவாங்கியைப் பார்த்துச் சொல்கிறார். இந்த வாரம் ஷிவாங்கி அஷ்வினுடன் கூட்டு போல. ஷிவாங்கியுடன் நின்றிருந்த அஷ்வின், “பார்த்துக்கலாம். நான் சமைக்கவே மாட்டேன். அவளை சமைக்க வெப்பேன். பாத்துக்கலாம் மாஸ்டர்” என்று பாபா பாஸ்கரிடம் சொல்கிறார்.

ஷிவாங்கியை அழைக்கும்போதே ‘த குயின் ஆஃப் கோமாளி’ என்று அழைத்தார் தொகுப்பாளர் ரக்‌ஷன். மணிமேகலை, சரத், பாலாவைத் தொடர்ந்து சென்ற வாரம் பிரேக்கில் இருந்த புகழ், சுனிதாவை அலேக்காகத் தூக்கியபடி ‘கனவா... நீ காற்றா...’ பாடல் ஒலிக்க வந்தார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குக்குகளில் கனி செவ்வாடையில் மாரியம்மன்போல வர, அடுத்து வந்த பாபா பாஸ்கர் ஷிவாங்கியை “மகளே... என்னா ஹெல்ப் பண்ணிருக்க நீ அஷ்வினுக்கு. நேத்துதான் எபிசோட் பார்த்தேன். எம்பொண்டாட்டி கொதிச்சுட்டா. இன்னைக்கு வேற லெவல்ல உனக்கு இருக்கு” என்று சொல்ல, ஷிவாங்கி அழாத குறையாக “அப்டி இல்ல மாஸ்டர்” என்று தன் தரப்பைச் சொல்லி கொஞ்சவே “இந்த மூஞ்சியப் பார்த்தா கோபமே வரமாட்டீங்குது” என்று ஷிவாங்கியைக் கட்டிக்கொள்ள, “இது அப்பா புள்ள பாசம்” என பூரிப்பில் பொங்கினார் ஷிவாங்கி.

செம்ம ட்ரிம்மாக உள்ளே வந்தார் அஷ்வின். அடுத்து பவித்ராவும், ஷகிலாவும் வர, கலகல பேச்சில் மீண்டும் பாபா பாஸ்கர் ஷிவாங்கியை வம்பிழுத்தார். “தோத்தாலும் பராவால்ல... 10 நிமிஷத்துல சமையலை முடிச்சுட்டு இவளுக்கு வைக்கிறேன் கட!” என்று சொல்லவும் “ஒருவேளை உங்களுக்கே ஜோடியா வந்தா என்ன பண்ணுவீங்க?” என்று லாஜிக்கலாகக் கேட்டு கைதட்டல் வாங்கினார் புகழ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நடுவர்கள் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் மேடைக்கு வர, Pairing ஆரம்பமானது. ஒரு போர்டில் ஐந்து வண்ணங்களில் ஐந்து கைகள் பெய்ன்ட்டில் பதிவு செய்யப்பட்ட ஐந்து ஃபோட்டோ ஃப்ரேமும், அருகே ஐந்து ப்ளெய்ன் ஃப்ரேமும் மாட்டப்பட்டிருந்தன. அந்த ப்ளெய்ன் போர்டில் குக்குகள் அவர்கள் செலக்ட் செய்யும் வண்ணத்தில் உள்ளங்கையை முக்கி, பதிக்க வேண்டும் என்பது செலக்ட் செய்யும் வழிமுறையாகச் சொல்லப்பட்டது.

ஒவ்வொரு கோமாளி நெஞ்சிலும் ஒரு கை, ஒவ்வொரு வண்ணத்தில் பேட்ஜாக பின் செய்யப்பட்டிருந்தது. சுனிதா தன் பேட்ஜின் நிறம் என்ன என்று கேட்க ஷிவாங்கி ‘'இது தெரியலையா... பிங்க்’' என்றார். “இல்ல தமிழ்ல கேட்டேன்” என்று சுனிதா சொல்லவும், “பிங்க்தான்” என்றார் மறுபடியும். “தமிழ்ல பேரே வைக்கலையா பிங்க்-குக்கு? உனக்குத் தெரியலன்னு சொல்லு” என்றார் சுனிதா முறைத்தபடி! “என்னைக் கலாய்ச்சுட்டாரு... இன்னைக்கு அஷ்வின்கூட கோமாளியா போய் அவரை எலிமினேட் பண்றேன்” என்று மணிமேகலை சொன்னதுக்கு சண்டைக்குப் போனார் ஷிவாங்கி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

உள்ளே இப்படி கோமாளிகள் பல கோமாளித்தனம் செய்துகொண்டிருக்க வெளியே ஐந்து ட்ரேக்களில் ஐந்து நிற பெய்ன்ட் வந்தன. பாபா பாஸ்கர், மஞ்சள் நிற பெய்ன்டை தேர்வு செய்து பதித்து பாலாவை தன் கோமாளியாக்கிக் கொண்டார். ”யார் வேணாலும் வரட்டும். பொண்ணுங்க வேணாம். அதும் ஷிவாங்கி வேணவே வேணாம்” என்று பாபா மாஸ்டர் சொன்னதுக்கு ஷிவாங்கி நிஜமாகவே வாடிப்போனார் பாவம்!

வழக்கம்போல மணிமேகலையும், சுனிதாவும் 'எலந்தப் பழம்... எலந்தப் பழம்... எனக்குத்தான்...’ எனப் பாடாத குறையாக அஷ்வின் எனக்கு எனக்கு என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்க ஷிவாங்கி “ஆங்... எனக்கு!” என்று குழந்தைத்தனம் காட்டிக்கொண்டிருந்தார். ஷிவாங்கியுடையது நீலம். அஷ்வின் வந்து எல்லா கலர் பெய்ன்ட்டையும் நோட்டமிட்டு முடிக்கும் வரை உள்ளே ஷிவாங்கிக்கு ஹார்ட்பீட் ஐநூறைத் தொட்டிருக்கும்போல. அப்படித் துடித்துக்கொண்டிருந்தார். அஷ்வின், “பிடிக்காத கலரை செலக்ட் பண்றேன்” என்றபடி சரியாக நீலத்தைத் தொட்டதும் சந்தோஷத்தில் நிஜமாகவே விழுந்து விழுந்து சிரித்தார். எழுந்து ஓடி வந்து அஷ்வின் அருகே நின்றுகொண்டு “பிடிக்காத கலரு... ஆனா பிடிச்ச ஆளு” என்று டயலாக் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனி, சுனிதாவைத் தேர்வு செய்ய பவித்ரா வரவேண்டுமென புகழும், ஷகிலா கிடைக்கட்டும் என்று மணிமேகலையும் பேசிக்கொண்டிருந்தனர். பவித்ரா சிவப்பு வண்ணத்தைத்தான் தேர்வு செய்யப்போகிறார் என்று அறிந்து புகழ் தன்னுடைய பச்சை நிற பேட்ஜை மணிமேகலைக்குக் கொடுத்து அவரது சிவப்பு பேட்ஜை மாற்றிக்கொண்டார். பவித்ரா சிவப்பைத் தேர்வு செய்ய இருவரும் உள்ளே இருந்து ஓடிவந்தனர். பவித்ரா, தனக்கு புகழ்தான் கோமாளி என்று சிரித்துக்கொண்டிருக்கும்போதே ”பேட்ஜை மாத்தி ஃப்ராடு பண்ணிருக்காங்க” என்பதை ஜட்ஜ் இருவரும், ரக்ஷனும் சொல்லி மாற்றிவிட்டனர். ஆக, பவித்ராவுக்கு மணிமேகலையும், ஷகிலாவுக்கு புகழும் கோமாளியாகச் சேர்ந்தனர்.

இங்கே அஷ்வினுடன் ஷிவாங்கி லைட்டாக ரொமான்ஸ் டயலாக்குகள் விட, பாபா பாஸ்கர் “இன்னைக்கு உன்னை ஜெயிக்க விடமாட்டேன்” என்று சீண்டிக்கொண்டிருந்தார். பதிலுக்கு ஷிவாங்கி, "இன்னைக்கு அஷ்வினுக்கு இம்யூனிட்டி சேலஞ்ச் ஜெயிச்சுக் குடுக்கறேன்... பாருங்க” என்று சவால் விட்டார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி
அட்வான்டேஜ் டாஸ்க் ஒன்றில் இரண்டு உருளைக்கிழங்குகளைக் கொடுத்து ஆலு பரோட்டா செய்யச் சொன்னார்கள். அடுத்து இரண்டு உருளைக்கிழங்குகள் வேண்டுமென்றால் ஒரு வெங்காயத்தை (பெரிய வெங்காயம் பாஸ்!) சாப்பிட்டு விட்டு, இரண்டு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். “வெங்காயம் சாப்டா அஷ்வின்கிட்ட பேசமுடியாது” என்று சுனிதா சொல்ல “யாரையும் இங்க வரவிடமாட்டேன்” என்று ஷிவாங்கி சொல்ல ரணகளங்களுக்குப் பிறகு டாஸ்க் ஆரம்பித்தது.

ரகளை மொமன்ட்ஸ்!

* “மாஸ்டர் கூட பண்றது கஷ்டமாதான் இருக்கு” என்று செஃப் தாமுவிடம் பாலா சொல்ல, அவர் அதை மாஸ்டரிடம் போட்டுக்கொடுத்தார். “நான் நம்பமாட்டேன்... அவன் சொல்லிருக்க மாட்டான்” என்றார் பாபா மாஸ்டர். “சத்தியமா சொன்னான். இல்லன்னா நான் சட்டையக் கழட்டிக்கறேன்” என்று செஃப் தாமு சொல்லவும், “அவன் சொன்னாக்கூட பரவால்ல. உங்களை சட்டைய கழட்டிலாம் பாக்க முடியாது” என்று கவுன்ட்டர் அடித்தார்.

* சமைத்துக் கொண்டிருக்கும்போது ஷிவாங்கி, அஷ்வினிடம் சொன்னது... “எல்லாரும் ஆலு பரோட்டா பண்றாங்க. ஆனா ஆளுகூடவே ஆலு பண்றது நான் மட்டும்தான்!”

* “ரோட்ல போகுதாம் Cow... உங்களைப் பாத்தா எனக்கு Lovvu!” என்று பாலா சொல்லிக்கொடுத்த டயலாக்கை சுனிதா வந்து அஷ்வினிடம் சொல்ல “பாலா டயலாக்கா?” என்று கேட்டார் அஷ்வின். “நான் சொல்றது ஃபீல் ஆகலையா?” என சுனிதா கேட்க “ஆகாது... சொன்னவங்க சொன்னாதான் ஆகும்” என்று காண்டு கவுன்ட்டர் கொடுத்தார் ஷிவாங்கி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இப்படி பல ரகளை மொமண்ட்ஸுக்கு நடுவே ஒரு எமோஷனல் மொமன்ட்டும் நடந்தது. புகழின் வேலையைப் பாராட்டிய செஃப் வெங்கடேஷ் பட் “கடையே போட்டுடுவ போல” என்றார். “ஆமா செஃப். வடை, சிப்ஸ் எல்லாம் கத்துகிட்டேன்” என்றார் புகழ். ''இதுக்கு நடுவுல பெரிய காமெடியனாகி வடிவேலு இடத்தைப் பிடிச்சுடுவ. ஏன் அதுக்கு மேலயே...” என்று அவர் சொல்லவும் “ஆமீன்” என்றார் அருகிலிருந்த ஷகிலா. உணர்ச்சிவசப்பட்டு கையெடுத்துக் கும்பிட்ட புகழிடம் “ஆவுடா ஆவுடா. அடுத்தவாட்டி ரெண்டு மணிநேரம் வெய்ட் பண்ணி உன்னப் பாக்கணும் நான்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் செஃப்.

இதைக் கேட்டு சிறிதுநேரம் ஃபீலிங்கில் மிதந்த புகழைச் சுற்றி எடிட்டர், புகழ் ஏர்வேஸ், புகழ் ரெயில்வேஸ், புகழ் அவார்ட்ஸ் என்று கனவுகளைப் பறக்கவிட்டார். கொஞ்சநேரம் புகழைப் பார்த்துவிட்டு, “என்னா?” என்று அவரை தரைக்கு வரவைத்தார் ஷகீலா.

முதல் அட்வான்டேஜ் டாஸ்க்கில் மிகவும் கம்மியான ஆலு பரோட்டாக்களைச் செய்த அஷ்வின், ஷிவாங்கியைத்தவிர நால்வரும் அடுத்த டாஸ்க்குக்கு முன்னேறினர். அழுத ஷிவாங்கியை, “நானே டென்ஷனாகல... ஃபீல் பண்ல... நீ ஏன் ஃபீல் பண்ற?” என்று ஆறுதல்படுத்தினார் அஷ்வின்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

அடுத்ததாக தமிழ் உயிரெழுத்துகள் வடிவில் முறுக்கு சுடச் சொல்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது. கோமாளி ‘அ’ வடிவில் சுட்டால், அடுத்து குக் ‘ஆ’ வடிவில் சுடவேண்டும். “எனக்கு டமிள் தெர்யாதே” என்று சுனிதா முறையிட, “நீங்க எழுதிக் காமிங்க கனி” என்றனர் ஜட்ஜ் இருவரும்.

ஆளுக்கு அரைகிலோ சுட்ட பிறகும் யாருக்கும் ‘அ’கூட வரவில்லை. பிறகு நிறைய வேஸ்ட் செய்து மெதுவாக செய்ய ஆரம்பித்தனர். ஷகிலா, புகழின் கோமாளித்தனங்களால் சிரிக்க ஆரம்பித்தவர், சிரித்துக்கொண்டே இருந்தார். சிரிப்பை அடக்க முடியாமல், வொர்க் ஸ்டேஷனிலிருந்து வெளியே போய் உட்கார்ந்து கொண்டார்.

ஷகிலாவும், புகழும் எதுவும் செய்யாததால் அவர்களைத் தவிர்த்து மற்ற மூவரின் முறுக்குகளும் எண்ணப்பட்டன. பாபா பாஸ்கரும் பாலாவும் ’அ முதல் ஓ’ வரை செய்து இம்யூனிட்டி டாஸ்க்கில் வெற்றிபெற “அடுத்த மெய்ன் டாஸ்க்கில் உங்களுக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் இருக்கு” என்றனர் ஜட்ஜ் இருவரும்.

நாம் முதல் பாராவில் பார்த்த அஷ்வினின் சேலஞ்ச் (நான் எதுவும் செய்ய மாட்டேன். ஷிவாங்கிதான் செய்வா... அவளை செய்ய வைப்பேன்) போட்டு, “அடுத்த வாரம்” என்ற அறிவிப்புடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

"என்னது அடுத்த வாரமா? நாளைக்கு ஒரு எபிசோட் இருக்குல்ல?” என்று கொதித்த CwC ரசிகர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டாரை சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்க டிஸ்னியின் அஃபீஷியல் ஹேண்டிலில் இருந்து, “ஆமாப்பா நாளைக்கு பிக்பாஸ் ஃபைனல் இருக்குறதால குக் வித் கோமாளி இல்லை. அடுத்த எபிசோட் 23-ம் தேதிதான்” என்று அறிவிக்கப்பட்டது. “யாருக்கு வேணும் உன் பிக்பாஸ். ஒழுங்கா போடுய்யா குக்கு வித் கோமாளிய...”, “ஒரு மணிநேர ஸ்ட்ரஸ் பஸ்டர் போச்சே” என்றெல்லாம் புலம்பிய ரசிகர்கள், “டிவில அப்றம் போடுய்யா... டிஸ்னி ஹாட்ஸ்டார்ல ரிலீஸ் பண்றதுக்கென்ன?” என்று கேட்டு #boycottdisneyhotstar என்றெல்லாம் ட்வீட் செய்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஆனாலும், குக்கு வித் கோமாளி அடுத்த வாரம்தானாம் மக்களே!