Election bannerElection banner
Published:Updated:

குக்கு வித் கோமாளி: அஷ்வின் & ஷிவாங்கியின் `பேக்டு ப்ளூபெர்ரி வித் க்ரம்மாங்குளிஸ்'... என்னாது?!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இந்தக் கூத்துகளெல்லாம் போதாதென்று ரக்‌ஷன், சுனிதா, சரத் மூவரும் ஒரு வொர்க் ஸ்டேஷனில் நின்று கொண்டு சமைக்க வேண்டும் என்றும் நடுவர்கள் சொன்னார்கள்.

குக்கு வித் கோமாளியில் இந்த வாரம்ம்ம்ம்ம்.... இம்யூனிட்டி வாரம். இம்யூனிட்டியில் பவித்ரா மிஸ்ஸிங். பாபா பாஸ்கர், கனி, அஷ்வின், ஷகிலா என குக்குகள் ஆஜராக வெங்கடேஷ் பட், தாமு நடுவர்களாக வந்து நிற்க தொகுத்து வழங்கத் தொடங்கினார் ரக்‌ஷன்.

இந்த வார கான்செப்ட்: Mad House. சும்மாவே ஆடறவனுக்கு சலங்கை கட்டிய கதையாக கோமாளிகளுக்குப் பேய் வேஷம். ‘அனபெல்’ பேய் ஷிவாங்கி, 'காஞ்சனா' பேயாக மணிமேகலை, 'ஜெகன்மோகினி'யாக பாலா, 'அருந்ததி'யில் பல வருடங்கள் உள்ளிருந்த பேயாக புகழ் ஆகியோர் வேடமிட்டிருந்தனர்.

பேய்களைத் தேர்ந்தெடுக்க வைக்கப்பட்டிருந்த ப்ராப்பர்ட்டி மூலம், ஒவ்வொருவரும் அவர்களுக்கான ஜோடியைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி அஷ்வினுக்கு ஷிவாங்கி, ஷகிலாவுக்கு புகழ், கனிக்கு மணிமேகலை, பாபா பாஸ்கருக்கு பாலா ஆகியோர் இணை சேர்ந்தனர்.

பேய்களாக கோமாளிகள்
பேய்களாக கோமாளிகள்

என்ட்ரியில் ஓவர் அட்ராசிட்டியும் அலப்பறையும் செய்து கலக்கியது மணிமேகலைதான். காஞ்சனாவாக அவர் கொடுத்த என்ட்ரியில் அவரை பர்ஃபாமென்ஸ் செய்ய விடாமல் எல்லாரும் கலாய்க்க, விடாது ஈடுகொடுத்தார் மணிமேகலை. நாளுக்கு நாள் அவரது நடிப்பும், கலாய்த்து போடப்படும் கூக்ளியில் ரிட்டன் சிக்ஸ் அடிக்கும் திறனும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இவர்கள் போக ஒரு புத்தம் புதிய சிறப்பு விருந்தினர் ஒருவரும் கௌபாய் கெட்டப்பில் வந்தார். அதுதான் நம்ம மதுரை முத்து.

அட்வான்டேஜ் டாஸ்க் ஒன்று. கோமாளிகள் தலையில் ‘கெரகம்’ போல ஒரு சல்லடை வைக்கப்பட்டது. இரண்டு வித மாவுகளை அதில் போட்டு தலையை ஆட்டி ஆட்டி அதை சலிக்க வேண்டும் என்பதுதான் போட்டி. மாவு முடிந்துவிட்டால், கோமாளிகளிடம் ஒரு பன்ச் டயலாக் கேட்டு அதை நடுவர்களிடம் சொல்லி ஒரு டம்ளர் மாவு வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள்.

''பூரிக்கு தொட்டுக்குத் தேவை குருமா

இன்னைக்கு நமக்கு இம்யூனிடி பேண்ட் வருமா?''

''மொக்க ஜோக் அடிக்கறார் முத்து

புகழ்தான் என் சொத்து''

''ஷிவாங்கிதான் வொய்ட் டிரஸ் போட்ட பியூட்டி

மத்தவங்க எல்லாம் பாட்டி''

இப்படி ஆளாளுக்கு பஞ்ச் டயலாகுகளாகச் சொல்லி அசத்தினர். பாலாவுக்கு சொல்லவே வேண்டாம்.

பாபா பாஸ்கர், ஷகிலா, அஷ்வின் ஆகிய மூவரும் ஜெயித்து அட்வான்டேஜ் டாஸ்க் இரண்டாவது சுற்றுக்குச் சென்றனர்.

சீப்பு சீடை. மாவை பிசைந்து சீப்பை வைத்து இம்ப்ரஷன் உருவாக்கி அதைச் சுற்றி சீடை செய்ய வேண்டும் என்பது டாஸ்க்.

ஒருபுறம் மாவை பிசைய முடியாமல் திணறினார் ஷிவாங்கி. “அஷ்வினே... வர்ல அஷ்வினே...” என்று புலம்பியவர் ஒருவாரு ஃபார்முக்கு வந்தார். புகழை சமைக்கச் சொல்லிவிட்டு ஒரு கட்டத்தில் போய் ரிலாக்ஸாக உட்கார்ந்தார் ஷகிலா. அஷ்வின் - ஷிவாங்கிக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பாலா, “டானு டானு டானு... நான் உன்னோட டானு” ட்யூனில் ஷிவாங்கிக்காக டூயட் பாட்டை ட்யூன் செய்து கொண்டிருந்தார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

பாபா பாஸ்கர் அதிக சீடைகளை செய்து அட்வான்டேஜ் டாஸ்க் ஜெயித்தார்.

சனிக்கிழமை எபிசோடில் அதிக டேமேஜ் ஆனது மதுரை முத்துதான். ஜோக் அடிக்கறேன் என்று அவர் ஆரம்பித்தாலே அதை அவுட் செய்தனர் மற்றவர்கள். போதாக்குறைக்கு செஃப் இருவருமே “ஒரு ஜோக் கூட வரலை” என்று காலை வாரினர்கள்.

ஞாயிற்றுக் கிழமை எபிசோட் ஆரம்பித்ததுமே அதற்கு பதிலடி கொடுத்தார் மதுரை முத்து.

அன்றைக்கு பிசாசாக என்ட்ரி கொடுத்தார் சுனிதா. கைகளைப் பின்னால் நீட்டிக்கொண்டு அவர் பேயைப் போலவே நடந்ததைப் பார்த்தால் நமக்கே ஒரு செகண்ட் பீதியானது. அதையும் கலாய்க்கிறேன் பேர்வழி என்று கலாய்த்தார் பாலா. பாராட்ற சீனுக்கெல்லாம் கலாய்க்கறது செட்டாவல பாலா!

“நீ வாக் பண்ணு பார்க்கலாம்” என்று சுனிதா கைகளைப் பின்னால் ஊன்றி ‘மல்லாக்க’ உடம்பை வளைத்து நடந்தார். பாலா நடக்க முடியாமல் தடுமாறினார். அப்போது மணிமேகலை “இப்ப மதுரை முத்து இதே மாதிரி வாக் பண்ணுவார்” என்று அவரை மேடையேற்றினார்.

போய் நின்ற மதுரை முத்து “எல்லாரும் நல்லாருக்கணும்” என்று சொல்லி “இதுதான் வாக்கு... அருள்வாக்கு!” என்றார். அடுத்தது ஸ்டைலாக ஃபோன் பேசிக்கொண்டு நடந்து “இது செல்வாக்கு” என்றார். ''ஜோக்கா கேட்கற... இந்தா வாக்கு'' என்று நேற்றைய ஏமாற்றத்துக்கு மருந்து தடவினார் மதுரை முத்து.

இன்றைய டாஸ்குக்கு பழம் ஒன்றும் விதை ஒன்றும் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஷகிலா பைனாப்பிள் - ராஜ்மா தேர்வு செய்தார். பாபா பாஸ்கர், பலாப்பழம் - வெள்ளை கொண்டக்கடலை தேர்வு செய்தார். கனி, கத்திரிக்காய் - தாமரை விதையைத் தேர்வு செய்தார். அஷ்வின் கேரட் - ப்ளூபெர்ரி தேர்வு செய்தார். இவர்கள் செய்யும் டிஷ்ஷில் இந்த இரண்டும் அதிக போர்ஷன்கள் இருக்க வேண்டும் என்பது விதி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

பாபா பாஸ்கர் அட்வான்டேஜ் ஜெயித்திருந்ததால், இருவரின் ஏதாவதொரு பொருளை மாற்றலாம் என்று சொன்னார்கள். புகழும் ஷிவாங்கியும் கொஞ்சம் கெஞ்ச “இந்தக் கொழந்தைகளை விட்டுடறேன்” என்று கனி பக்கம் திரும்பினார். முடிஞ்சா டஃப் கொடுங்க பார்க்கலாம் என்று மணிமேகலை கொடுத்த அலப்பறை சவாலில், கனி தேர்வு செய்திருந்த தாமரை விதையை மாற்றி சூரியகாந்தி விதையைக் கொண்டு வந்து கொடுத்தார். கத்திரிக்காயை எடுத்துவிட்டு பாவக்காய் வைத்தார். ஷகிலாவுக்கு பைனாப்பிளை எடுத்து, கொய்யாக்காய் கொடுத்தார். இப்படிக் குந்தாங்கூறாய் எல்லாவற்றையும் மாற்றினார்.

இந்தக் கூத்துகளெல்லாம் போதாதென்று ரக்‌ஷன், சுனிதா, சரத் மூவரும் ஒரு வொர்க் ஸ்டேஷனில் நின்று கொண்டு சமைக்க வேண்டும் என்றும் நடுவர்கள் சொன்னார்கள்.

இந்த வார இடைஞ்சல்... சின்ன ஷாட் கிளாஸில் கலர் கலரான ஜூஸ் இருந்தது. அந்த ஜூஸ் கிளாஸை ஸ்கேலில் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். ஆட்டி அது கீழே விழுந்தால், செட்டில் வைக்கப்பட்டிருக்கும் Trampoline-ல் குதிக்க வேண்டும் என்பது பனிஷ்மென்ட்.

அஷ்வினே என்றழைத்து அவரை ஜோக்கடித்து சிரிக்க வைக்க முயன்றார் ஷிவாங்கி. அவர் சிரிக்கவே இல்லை. மதுரை முத்து வெங்கடேஷ் பட்டிடம் ஒரு ஜோக் சொன்னார். “அக்கா வாழையிலை வியாபாரம் பண்ணினா... தங்கச்சி வாழக்காய் வியாபாரம் பண்ணினா... ஏன்” என்று கேட்டார். “ஏன்ன்னா அக்காக்கும் மச்சானுக்கும் சண்டை. அக்கா வாழல... வாழல என்று சொல்ல தங்கச்சி வாழக்கா வாழக்கா என்று சொன்னார்” என்று வெடிகுண்டைப் போட்டார் மதுரை முத்து.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இந்த காமெடி கலாட்டாக்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் சமையலும் நடந்தது. ரக்‌ஷனும் சமைத்துக் கொண்டிருந்ததுதான் செம காமெடி. சுனிதா ஐடியா கொடுக்க ரக்‌ஷன் “ஓ அதுவா” என்று கேட்டு கேட்டு சமைத்துக் கொண்டிருந்தார்.

அஷ்வின் டென்ஷனாகவே இருப்பதைப் பார்த்து அவர் கையிலிருக்கும் ஜூஸ் கிளாஸ் விழவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஷிவாங்கி. அதேபோலவே அஷ்வின் க்ளாஸைக் கீழே போட்டு ட்ராம்போலினில் குதிக்கப் போனதும் ‘ஐ ஜாலி ஜாலி’ என்று சந்தோஷப்பட்டார்.

ஷகிலா குதித்துக் களைத்து உட்கார்ந்தார். “ஒரு தலகாணி கொடுத்தா தூங்குவேன்ல” என்றார். அஷ்வின் மணிமேகலையின் கிளாஸைத் தட்டிவிட, பதிலுக்கு மணிமேகலை ஷிவாங்கியைத் தட்டிவிட என்று களேபரங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.

முதல் சுற்று சமையல் முடிந்தது.

பாபா பாஸ்கர் & பாலா: சக்க அடையும், ஃபகத் ஃபாசில் என்று பெயர் வைத்த ஒரு துபாய் டிஷ்ஷும் செய்திருந்தார். இரு நடுவர்களும் வேற லெவல் என்று பாராட்டினார்கள்.

ஷகிலா & புகழ்: கஷ்மீரி புலாவும் ராஜ்மா தாலும் செய்திருந்தார். அதையும் நடுவர்கள் குறைகளின்றிப் பாராட்டினார்கள்.

கனி & மணிமேகலை: ஃபூல் மக்கானா-வும், ஸ்டஃப்டு பாவக்காய் ஃபரையும் செய்திருந்தனர். கொஞ்சம் பேசிவிட்டு மணிமேகலையிடமிருந்து கன்டென்ட் எடுத்து அனுப்பி வைத்தனர்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

அஷ்வின் & ஷிவாங்கி: ‘பேக்டு ப்ளூபெர்ரி வித் க்ரம்மாங்குளிஸ்’ மற்றும் ‘Bunny கேரட்’ செய்திருந்தார்கள். (க்ரம்மாங்குளிஸ்ன்ற பேரையெல்லாம் வாழ்க்கையில கேட்டதேல்ல சாமி). மற்ற எல்லாருக்கும் எடுத்துக் கொண்ட நேரத்தை விட அதிக நேரம் சாப்பிட எடுத்துக் கொண்டார்கள் நடுவர்கள். ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அவுட் ஆஃப் த வேர்ல்ட், டாப் நாட்ச், அவுட்ஸ்டாண்டிங் உள்ளிட்ட வார்த்தைகளால் பாராட்டித் தள்ளினார்கள்.

ரக்‌ஷன், சுனிதா & சரத்: நார்த் இண்டியன் காலிஃப்ளவர் மன்சூரியனும், ஸ்மோக்டு சிக்கன் ப்ரொக்கலி ஒயிட்சாஸும் செய்திருந்தார்கள். பெரிதாக கமென்ட் சொல்லவில்லை என்பதே கமென்ட்டாக இருந்தது.

பாபா பாஸ்கர் - பாலா முதலிடமும், ஷகிலா - புகழ் இரண்டாமிடமும், அஷ்வின் - ஷிவாங்கி மூன்றாமிடமும் பெற்று அடுத்த சுற்றுக்குப் போனார்கள். ஷகிலா உடல்நிலை காரணமாக வாக் அவுட் கொடுத்துவிட, பாபா பாஸ்கருக்கும் அஷ்வினுக்கும் ஒன் டு ஒன்னாக இரண்டாம் சுற்று அமைந்தது.
இம்யூனிட்டி சேலஞ்ச்சின் இறுதிச் சுற்று மில்லட்ஸ் சேலஞ்ச். சாமை, திணை, வரகரிசி, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களை வைத்து சமைக்க வேண்டும் என்பது போட்டி.
குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

போட்டி ஆரம்பித்தது. 20 நிமிடங்கள். அஷ்வினாவது சமைத்துக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடம் கூடுதலாகக் கேட்ட பாபா பாஸ்கர், ஐந்து நிமிடங்களுக்கு மேல் மாரி மியூசிக்குக்கு புகழையும், மதுரை முத்துவையும் தூக்கிக் கொண்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தார். சென்ற வார டவுட் இந்த வாரமும் வந்தது... ஒருவேளை, காமெடி கன்டென்ட் கொடுக்கற டைமையெல்லாம் கழிச்சுட்டுதான் குக்கிங் டைம் கணக்கு பண்ணுவாங்களோ?

பாபா பாஸ்கர், சாமை - திணை - வரகரிசி மூன்றையும் போட்டு கேழ்வரகு பீட்சா செய்திருந்தார். அஷ்வின் ‘மெடிடேரியன் திணை’ செய்திருந்தார். அஷ்வின் செய்திருந்ததில் ஏதோ ஒன்று குறைவதாக வெங்கடேஷ் பட் சொன்னார். ஆனால் இருவரையும் எடுக்கும் முயற்சிகளுக்காகப் பாராட்டினார் வெங்கடேஷ் பட்.

இம்யூனிட்டி சேலஞ்சில் பாபா பாஸ்கர் வென்றார். அடுத்த வாரம் அவர் சமைக்க வேண்டியதில்லை. இன்னும் சில வாரங்களிலேயே செமி ஃபைனலும், ஃபைனலும் வரப்போகிறது.

கெட் ரெடி ஃபோக்ஸ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு