Election bannerElection banner
Published:Updated:

Cooku With Comali: ஷகிலா, ஷிவாங்கி, புகழ்... குக்குக்கும் கோமாளிக்கும் எவ்ளோ சம்பளம் தெரியுமா?

குக்கு வித் கோமாளி | Cooku With Comali
குக்கு வித் கோமாளி | Cooku With Comali

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் சம்பளம் எவ்வளவு?

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகம் பேசப்படும் ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்துள்ளது ’குக் வித் கோமாளி’.

சென்ற ஆண்டு முதல் சீசன் ஒளிபரப்பானபோது அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், இந்த கான்செப்ட் தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்குப் புதியது என்பதுதான். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுமே ஷோவைப் புரிந்து உள்வாங்கத் தொடங்கிய போது ஷோவே முடிவுக்கு வந்துவிட்டது.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

ஆனால் இரண்டாவது சீசனோ எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்தான். முதல் சீசனைக் கவனித்திருந்த போட்டியாளார்களுமே நிகழ்ச்சியின் நெளிவு சுளிவு அறிந்தவர்களாகக் களம் இறங்கியதால், கொண்டாட்டமும் குதூகலமுமாகச் செல்கிறது நிகழ்ச்சி.

சரி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

(சம்பளம் ரூபாயில்... எபிசோடு ஒன்றுக்கு)

ஷகிலா - 50,000

பாபா பாஸ்கர் – 40,000

மதுரை முத்து - 40,000

அஷ்வின் – 25,000

மணிமேகலை – 20,000

சுனிதா – 20,000

ஷிவாங்கி - 20,000

பாலா – 15,000

புகழ் – 15,000

தர்ஷா – 10,000

பவித்ரா - 10000

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

முதல் சீசனில் நடிகைகள் ரேகா, வனிதா விஜயகுமார் இருவருக்கும்தான் அதிகபட்சமாக 60,000 வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த சீசனில் அதிகபட்ச சம்பளம் ஷகிலாவுக்கு! #CookuWithComali | #Pugazh | #Shivangi | #Shakeela

Posted by Vikatan EMagazine on Wednesday, February 24, 2021
முதல் சீசனில் நடிகைகள் ரேகா, வனிதா விஜயகுமார் இருவருக்கும்தான் அதிகபட்சமாக 60,000 வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த சீசனில் அதிகபட்ச சம்பளம் ஷகிலாவுக்கு!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு