விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி பலருடைய ஃபேவரைட். இந்த நிகழ்ச்சி, தற்போது நான்காவது சீசனை எட்டியிருக்கிறது.
"இனி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்!" என மணிமேகலை பதிவிட்ட போஸ்ட் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் 'ரஜினி முருகன்' படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக க்யூட் பர்ஃபாமென்ஸ் கொடுத்திருந்த ஆண்ட்ரியானா (Andreanne Nouyrigat) போட்டியாளராகக் களம் இறங்கியிருக்கிறார். குக்காக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் இவரின் குட்டி பயோ இதோ!

என்னதான் ஆண்ட்ரியானா பிரென்ச் நாட்டைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும் அவங்களுடைய ஆறாவது வயதிலேயே குடும்பத்தோட புதுச்சேரியில் செட்டில் ஆகியிருக்காங்க. அதனால தன்னுடைய சின்ன வயசிலேயே தமிழையும் கத்துட்டு பேச ஆரம்பிச்சிருக்காங்க. 'குக்கு வித் கோமாளி'யில் இவங்க எப்படிடா இவ்ளோ நல்லா தமிழ் பேசுறாங்கன்னு நீங்களும் யோசிச்சீங்க தானே? அதுக்கு காரணம் இதுதானாம்!
மீடியா ஃபீல்டுல இவங்களுக்கு அதிக ஆர்வமாம். மாடலிங் துறையில கொஞ்ச நாளைக்கு கவனம் செலுத்தி இருந்திருக்காங்க. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2007-ல் வெளியான `சிவாஜி' படத்துல வருகிற பாடலில் ஆண்ட்ரியானா டான்ஸ் ஆடியிருக்காங்களாம்... ( அது என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சீங்கன்னா மறக்காம கமென்ட் பண்ணுங்க!)

'எனக்குள் ஒருவன்', 'ஜீரோ', 'வீர சிவாஜி', 'ரம்' போன்ற படங்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களிலும் இவங்க நடிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'அபியும் நானும்' தொடர் மூலமா நம் மனசுல இடம்பிடிச்ச நடிகர் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'மேல்நாட்டு மருமகன்' என்ற படத்துலயும் நடிச்சிருக்காங்க.

`குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் நிச்சயம் இவர் டைட்டில் வின் பண்ணுவார்னு பலரும் கமென்ட் செய்துட்டிருக்காங்க. இவரும், ஜி.பி.முத்துவும் சேர்ந்தால் 'செம காம்போ' என்கிறார்கள்.
அந்த அளவுக்கு டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியானா அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சியிலும், சினிமாவிலும் வெற்றியடைய வாழ்த்துகள்!