Published:Updated:

``அந்த விபத்து பத்தி பேச வேண்டாமே; இப்போ ஒன்லி பாசிட்டிவிட்டிதான்!" - `குக் வித் கோமாளி' பவித்ரா

'குக் வித் கோமாளி' குழுவுடன்

ஒரு விபத்து பவித்ராவை முடக்கியிருக்கிறது. அதன் பிறகும் தளராமல் முயற்சி செய்தவருக்கு, பத்து வருடங்களுக்குப் பிறகே அடையாளம் கிடைத்திருக்கிறது. மீடியா அனுபவங்கள் குறித்து பவித்ராவிடம் பேசினோம்.

``அந்த விபத்து பத்தி பேச வேண்டாமே; இப்போ ஒன்லி பாசிட்டிவிட்டிதான்!" - `குக் வித் கோமாளி' பவித்ரா

ஒரு விபத்து பவித்ராவை முடக்கியிருக்கிறது. அதன் பிறகும் தளராமல் முயற்சி செய்தவருக்கு, பத்து வருடங்களுக்குப் பிறகே அடையாளம் கிடைத்திருக்கிறது. மீடியா அனுபவங்கள் குறித்து பவித்ராவிடம் பேசினோம்.

Published:Updated:
'குக் வித் கோமாளி' குழுவுடன்

விஜய் டிவி `குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, இளைய தலைமுறையினரின் விருப்பமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதில் குக்காக வரவேற்பைப் பெற்றிருக்கும் பவித்ரா லட்சுமி, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். மீடியாவிலும் சினிமாவிலும் புகழ்பெறுவது இவருக்குப் பெரும் ஆசையாக இருந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளில் இருந்தபோது, ஒரு விபத்து இவரை முடக்கியிருக்கிறது. அதன் பிறகும் தளராமல் முயற்சி செய்தவருக்கு, பத்து வருடங்களுக்குப் பிறகே அடையாளம் கிடைத்திருக்கிறது. மீடியா அனுபவங்கள் குறித்து பவித்ராவிடம் பேசினோம்.

பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி

``டீன் ஏஜ்ல டான்ஸ்ல எனக்கு ஈடுபாடு அதிகம். அதன் மூலம்தான் மீடியா துறைமீது ஆர்வம் ஏற்பட்டுச்சு. விஜய் டிவி `உங்களில் யார் பிரபுதேவா' நிகழ்ச்சியில கலந்துக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதுக்குப் பிறகு படிப்புலதான் கவனம் செலுத்தினேன். லாக்டெளன் நேரத்துல, விஜய் டிவி `ஸ்டார்ட் மியூசிக்' நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அதன் மூலம் உடனடியா, `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு வந்துச்சு. எனக்கு சமையல்ல பெரிசா ஆர்வம் இல்ல. என்னால சமாளிக்க முடியுமான்னு ரொம்பவே தயங்கினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேனல் தரப்பினர் எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுத்தாங்க. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னுதான் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். என்னோட மெயின் இலக்கு சினிமாதான். அதுக்கான நல்ல வாய்ப்பு எப்போ வேணாலும் வரலாம். ஆனா, நம்முடைய இருப்பை உறுதிப்படுத்திட்டே இருக்கணும். இந்த நிகழ்ச்சியில ஜெயிக்கிறதும் தோற்கறதும் என் சினிமா கரியர்ல தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால, சந்தோஷமா இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன்.

'குக் வித் கோமாளி' குழுவுடன்
'குக் வித் கோமாளி' குழுவுடன்

வீட்டுல சமைச்சுப் பயிற்சி எடுக்கிறதெல்லாம் ரொம்ப குறைவுதான். நிறைய ரெஸ்டாரன்ட்ஸ் போவேன். அங்கு பலவித உணவுகளைச் சாப்பிட்ட அனுபவத்துல, எப்படியாச்சும் சமாளிச்சுதான் இந்த நிகழ்ச்சியில சமைக்கிறேன். அந்த டிஷ் கடைசியில ஓரளவுக்குச் சாப்பிடுற அளவுக்கு வந்திடும். அதனால, இப்ப வரைக்கும் போட்டியாளரா நீடிக்கிறேன். முன்பெல்லாம் அடிக்கடி ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி அனுபவத்துல, வீட்டுலயே ஏதாச்சும் சிம்பிளாவாவது ஒரு டிஷ் செஞ்சு சாப்பிடவே ஆசைப்படுறேன். அந்த அளவுக்கு குக்கிங்ல ஆர்வம் அதிகமாகிடுச்சு.

ஷூட் போனாலே அந்த நாள் முழுக்கப் போறதே தெரியாத அளவுக்குக் கலகலப்பா போகும். நடுவர்கள் முதல் குக் கோமாளிகள் வரை எல்லோரும் ஃபேமிலி உறவுகளா மாறிட்டாங்க. பிரேக் டைம்ல எல்லோரும் ஒண்ணா அரட்டை அடிப்போம். ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். அந்த பந்தம், ஷூட் தாண்டி வீட்டுக்கு வந்த பிறகும் தொடரும். மீடியா வாய்ப்புகளுக்கு இன்னொருத்தரை ரெஃபர் பண்றது முதல் பர்சனல் விஷயங்கள் வரை பலதையும் மனம் விட்டுப் பேசுவோம். ஷகிலா அம்மா, கனி சிஸ்டர் உட்பட எல்லோருடனும் நட்பில் இருக்கேன்.

பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி

குறிப்பா, புகழ், பாலா, ஷிவாங்கியின் காமெடி வேற லெவல். ஷூட் போனதுல இருந்து பேக்கப் வரைக்கும் இயல்பாவே அவங்க காமெடி பண்ணிட்டே இருப்பாங்க. நானும் நல்லாவே மொக்கை போடுவேன். அதனால, அவங்களுக்கு ஈடுகொடுத்து என்னாலயும் ஓரளவுக்கு ஃபன் பண்ண முடியுது. இந்த நிகழ்ச்சி முடிஞ்சுட்டா, சக குக், கோமாளி, நடுவர்கள் எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்" என்று சென்டிமென்ட்டாக உருகுபவர், மலையாளப் படம் ஒன்றில் நாயகியாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் பவித்ரா.

தனது பர்சனல் விஷயங்கள் சிலவற்றைப் பகிர்பவர், "கஷ்டப்பட்ட காலத்துலயும், இப்பவும் எனக்கு நம்பிக்கை கொடுத்து வழிகாட்ட குடும்ப உறவுகள் பெரிசா இல்ல. நான் மறக்க நினைக்கும் அந்த விபத்து முதல் எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடையையும் நானா போராடித்தான் கடந்து வந்திருக்கேன். சிங்கிள் பேரன்ட்டா என்னோட வளர்ச்சிக்கு அம்மாதான் ரொம்பவே ஊக்கமா இருந்திருக்காங்க.

Pavithra Lakshmi
Pavithra Lakshmi

அதனால, காலேஜ் காலட்டத்துல இருந்து என் பெயருக்குப் பின்னால என்னோட அம்மா லட்சுமியின் பெயரையும் பயன்படுத்துறேன். என்னோட அம்மாவுக்கு நான் கொடுக்கும் ஆத்மார்த்தமான மரியாதை இது. என் வாழ்க்கையில நடந்த சில வலி மிகுந்த சம்பவங்களைப் பகிர விருப்பப்படல. இப்பவும் சரி, இனி வரக்கூடிய காலகட்டங்கள்லயும் எல்லா விஷயங்களையும் மகிழ்ச்சியானதாகவே அமைச்சுக்க விரும்புறேன்.

என்னோட பேச்சு உட்பட எல்லா விஷயங்களையும் பாசிட்டிவ்வா இருக்கும்படி பார்த்துக்கிறேன். இத்தனை வருஷ தொடர் முயற்சியால, இன்னைக்கு எனக்கு ஓர் அடையாளம் கிடைச்சிருக்கு. முயற்சிக்கு என்றாவது ஒருநாள் வெற்றி கிடைக்கும்னு என்னோட அனுபவத்துல இருந்தே உறுதியா நம்புறேன். வீட்டுல செல்லமா ஒரு நாய் வளர்க்கிறேன். அதுமேல அளவுகடந்த அன்பு வெச்சிருக்கேன். ஆதரவற்ற தெரு நாய்கள்மீதும் எனக்கு அதிக பாசம் உண்டு.

பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி

வாரம்தோறும் தெரு நாய்களுக்கு உணவு கொடுத்து நேரம் செலவிடுவேன். தவிர, பல மொழி சினிமாக்கள். நிறைய பார்ப்பேன். மணிரத்னம் சார், கெளதம் மேனன் சார் டைரக்‌ஷன்ல நடிக்க ஆசை. எனக்கான சரியான சினிமா வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கத் தயாரா இருக்கேன். காலம் நம்மை எப்படிக் கூட்டிட்டுப் போகுதுனு பார்ப்போம்" என்று முடித்தார் பவித்ரா.