Published:Updated:

`கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாது!’ -நடிகை அதிதி மேனன் பதிலால் கொதித்த மதுரை நீதிமன்றம்

அபி சரவணன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிவந்த அதிதி மேனனை இன்று கண்டிப்பாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அபி சரவணன் - அதிதி மேனன்
அபி சரவணன் - அதிதி மேனன்

மதுரையைச் சேர்ந்த நடிகர் அபி சரவணன் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் நடிகை அதிதி மேனனை மதுரை குடும்ப நல நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அபி சரவணன் - அதிதி மேனன்
அபி சரவணன் - அதிதி மேனன்

நடிகர் அபி சரவணன், அதிதி தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டு மலையாளப் படங்களில் நடித்து வருவதாக புகார் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கொடுத்த நடிகை அதிதி, ` நான் காதலித்தது உண்மை, ஆனால் அபி சரவணனைப் பற்றி கேள்விப்பட்டதால் அவரிடமிருந்து விலகிவிட்டேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் நடந்தசமயத்தில் அபிசரவணன் நிதிதிரட்டினார். அந்தப்பணத்தை அவர் மோசடி செய்தார். இந்தத் தகவல் எனக்கு தெரிந்ததும் அவரைத் தட்டிக் கேட்டேன். மேலும், மோசடியில் ஈடுபடும் அவருடன் நான் இருந்தால் என் மீதும் குற்றம் சாட்டப்படும்.

மேலும், அபி சரவணன் நடித்த முதல் படத்தின் ஹீரோயினையும் அவர் ஏமாற்றியுள்ளார். இதனால்தான் அவரைவிட்டுப் பிரிந்தேன். தற்போது, அவர் இல்லாமல் நான் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக சில தகவல்களைப் பரப்பிவருகிறார். இந்தத் தகவல் எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிப்படைய வைக்கிறது. அபி சரவணன் என் மீது புகார் பரப்பிய சமயத்தில் அமைதியாக இருந்தேன். அவரைக் காரில் கடத்திய சம்பவத்துக்கு நான் காரணம் என்ற தகவல் வெளியானது. இதனால்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன்' எனக் கூறியிருந்தார்.

Vikatan

இந்தநிலையில், அபி சரவணன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிவந்த அதிதி மேனனை, இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதிதி மேனன்
அதிதி மேனன்

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் அபி சரவணனும் அதிதி மேனனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதியை சந்தித்த அதிதி மேனன் தரப்பு, இந்த வழக்கில் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள இயலாது என்றும், ஐகோர்ட் மூலம் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

Vikatan

இந்தப் பதிலால் கோபமடைந்த நீதிபதி, அதிதியைக் கண்டித்துள்ளார். `இது குடும்பநல நீதிமன்றம். கண்டிப்பாக கவுன்சலிங்கில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.