Published:Updated:

“இட்லி சம்பவத்துக்கு அப்புறம் எதைப் பத்தியும் கவலைப்படுறது இல்ல!” - சி.ஆர்.சரஸ்வதி #HowTVChangedMyLife

c.r.saraswathi
c.r.saraswathi ( vijayakumar.M )

"'அம்மா இட்லி சாப்பிட்டார்' என நான் கூறியதை அடிப்படையாக வைத்து, என்னை சமூக ஊடகங்களில் சிலர் திட்டமிட்டுத் தாக்கினார்கள்."

எந்த ஒரு பெரிய டி.வி. விவாதமாகட்டும், இவரது முகம் இல்லாமல் அது ஒளிபரப்பாகாது. 1979-ல் சுவரில்லாத சித்திரங்களில் தொடங்கிய சி.ஆர்.சரஸ்வதியின் பயணம், இன்று அ.தி.மு.க., அ.ம.மு.க. எனப் பயணிக்கிறது.

cr saraswathi
cr saraswathi

செய்தி சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைக்கும் ‘கண்டென்ட்’களை வழங்குவதில் சரஸ்வதியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. தொலைக்காட்சிக்கும் அவருக்குமான உறவு குறித்துப் பேசினோம். தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர், “அப்போதெல்லாம் பொதிகை தொலைக்காட்சியில் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். 15, 20 தொடர்களில் முடித்துவிடுவார்கள்.

முதல்முறையாக சன் டி.வி.யில் ‘சக்தி’ மெகாசீரியல் ஒளிபரப்பானது. பானுப்பிரியாவுடன் இணைந்து அதில் நான் நடித்தேன். இப்படித்தான் தொலைக்காட்சியில் என் பயணம் தொடங்கியது. இதன் பிறகு, 2014ல் அ.தி.மு.க.வின் முதல் பெண் செய்தி தொடர்பாளராக அறிமுகமானேன். டி.வி. விவாதங்களில் நான் சார்ந்த இயக்கத்தின் கருத்துக்களை எடுத்து வைக்கக் களம் கிடைத்தது” என்றவரிடம், “உங்களைக் கலாய்த்துப் பதிவிடுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றோம்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எந்த மோசமான கமென்டுகளைப் பார்த்தாலும் நான் கவலைப்படுவதில்லை!
சி.ஆர்.சரஸ்வதி

“அம்மா இட்லி சாப்பிட்டார் என நான் கூறியதை அடிப்படையாக வைத்து, என்னை சமூக ஊடகங்களில் சிலர் திட்டமிட்டுத் தாக்கினார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எந்த மோசமான கமென்டுகளைப் பார்த்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஆனால், தனிமனித தாக்குதல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு