கனா காணும் காலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபிகா. அந்தத் தொடரில் அபியின் ஃப்ரெண்ட் கெளதம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ராஜ வெற்றி பிரபு. நிஜத்திலும் நண்பர்களான இவர்கள் காதலிப்பதை சமீபத்தில் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களான இவர்கள் இன்று தம்பதிகளாக அவர்களுடைய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறார்கள். பிரமாண்ட முறையில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் அவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. திருமணத்திற்குப் பின்னர் கணவன் - மனைவியான இருவரும் நண்பர்களாக நடிக்க இருக்கிறார்கள்.
கல்யாணத்தை கோலாகலமாக இருவரும் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து நான்கு நாட்களாக வெவ்வேறு கான்செப்ட்களில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன. நேற்றைய ரிசப்ஷனில் இருவரும் கருப்பு உடை அணிந்திருந்தனர். `என் தீபிகாவின் ரன்வீர்!' என்கிற கேப்ஷனுடன் ரிசப்ஷனில் எடுத்துக் கொண்ட வீடியோக்களை தீபிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
‘கனா காணும் காலங்கள்’ தொடர் நடிகர்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் எனப் பலரும் அவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடைய ரிஷப்ஷன் புகைப்படங்களும், திருமண புகைப்படங்களும் சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன