Published:Updated:

"தமிழன்னு சொல்லி வெளிப்படையாவே கிண்டல் பண்ணியிருக்காங்க!"- 'தெய்வமகள்' சுப்பிரமணியன்

'தெய்வமகள்' சுப்பிரமணியன்

'அத்திப்பூக்கள்' சீரியலில் டப்பிங் பேசிட்டு இருந்தேன். பிறகு, சில சீரியல்கள், படங்களுக்கு டப்பிங் பேசிட்டு இருந்தேன். டப்பிங் யூனியனில் மெம்பராகத்தான் இப்போவரை இருக்கேன். ஆனா, டப்பிங் பேசி ஏழு வருஷத்துக்கும் மேல ஆகுதுங்க.

'தெய்வமகள்' தொடரில் நடித்து பிரபலமானவர், நடிகர் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன். தமிழில், 'வள்ளி', 'தெய்வமகள்', 'அஞ்சலி' போன்ற தொடர்களில் இவரை பார்த்திருக்கிறோம். சமீபத்தில், தமிழ் சீரியல்களில் இவர் முகத்தை பார்க்க முடியவில்லை. தேடிப் பார்த்தால் மலையாளத் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. அவரிடம் பேசினோம்.

'தெய்வமகள்' சுப்பிரமணியன்
'தெய்வமகள்' சுப்பிரமணியன்

அஞ்சலி சீரியல் முடிஞ்சதும் கேரளா சீரியல் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. மாதத்தின் முதல் பதினைந்து நாட்கள் அந்த ஷூட்டிங் இருக்கும். அதனால், மாதத்தில் அடுத்த 15 நாள்கள் மட்டும் தான் நான் ஃப்ரீ என்பதால் பல வாய்ப்புகள் எனக்கு கிடைக்காம போயிருக்கு. தமிழும், மலையாளமும் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி பண்ண என்னால முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்ம மொழியில் சாதிக்க முடியலைங்கிற வருத்தம் எனக்கு நிறையவே இருக்கு. மலையாளத்தில் இப்போ என் முகம் பரவலாகத் தெரியும். தமிழில் நல்லா நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு சரியா அமையலை. நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன்னுலாம் நான் சொல்லலைங்க. நல்ல கேரக்டர் எதுனாலும் எனக்கு ஓகேதான்!

'தெய்வமகள்' சுப்பிரமணியன்
'தெய்வமகள்' சுப்பிரமணியன்

`வள்ளி' சீரியலில் நான் லீட் ரோலில் நடிக்கிறதாகத்தான் இருந்தது. எனக்கு ஜோடியா நடிக்க இருந்த உமா திடீர்னு வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்பட்டதால கதையை வேற மாதிரி கொண்டு போக வேண்டியதாகிடுச்சு. அதனால, என் கேரக்டரும் நின்னுடுச்சு. வேற ஜோடிகளுடன் அந்த சீரியல் நிறைய வருஷம் ஓடி மெகா ஹிட் ஆச்சு. அதுல வெறும் 60 எபிசோட் மட்டும்தான் நான் பண்ணினேன். இப்படி பல சீரியல்களில் என் டிராக் திடீர்னு மாறிப் போயிருக்கு.

'அத்திப்பூக்கள்' சீரியலில் டப்பிங் பேசிட்டு இருந்தேன். பிறகு, சில சீரியல்கள், படங்களுக்கு டப்பிங் பேசிட்டு இருந்தேன். டப்பிங் யூனியனில் மெம்பராகத்தான் இப்போவரை இருக்கேன். ஆனா, டப்பிங் பேசி ஏழு வருஷத்துக்கும் மேல ஆகுதுங்க.

'தெய்வமகள்' சுப்பிரமணியன்
'தெய்வமகள்' சுப்பிரமணியன்

எப்பவுமே நான் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நினைக்கவே இல்லை. மலையாளத்தில் போய் நடிக்கும்போது இவன் தமிழன்னு சொல்லி வெளிப்படையாவே கிண்டல் பண்ணியிருக்காங்க. அங்கேயே ஒர்க் பண்ணி மலையாளம் கத்துக்கிட்டு இப்போ அங்கே யாரும் என்னை தமிழன்னு நம்ப மாட்டேங்கிறாங்க. என்னை மலையாளின்னு நினைக்கிறாங்க. தமிழில் நல்ல பிராஜக்ட் அமையும்னு ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன்.

மலையாளத்தில் ஃபேஸ்புக் லைவ்வில் ஆடியன்ஸோடு சமீபத்தில் பேசிட்டு இருந்தேன்.. அப்போ பலரும் 'தெய்வமகள்' கார்த்திக் தானே நீங்க.. உங்களை ரொம்ப மிஸ் பண்றோம். சீக்கிரமே கம்பேக் கொடுங்க கார்த்திக்! என தொடர்ந்து மெசேஜ் பண்ணாங்க. அந்த தருணம் ரொம்பவே எமோஷனலா இருந்துச்சுங்க. தமிழில் நல்ல பிராஜக்ட் அமையும்னு ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன்!' என்றார்.