Published:Updated:

எவிக்‌ஷன் உண்டு... ஆனால், 'பிக்பாஸ்' - 'குக்கு வித் கோமாளி' வித்தியாசங்கள் என்ன?

குக்கு வித் கோமாளி

சூப்பர் சிங்கரில் எஸ்பிபி நடுவராக இருந்தால், பாடுபவர்களின் குறைகளை, குறை சொல்கிறார் என்பதே தெரியாமல் அழகாக எடுத்துச் சொல்வார். பாராட்டுவதென்றால் மனதில் இருந்து பாராட்டுவார். செஃப் தாமுவிடமும் அந்த குணத்தைப் பார்க்க முடிகிறது. வெல்டன் செஃப்!

எவிக்‌ஷன் உண்டு... ஆனால், 'பிக்பாஸ்' - 'குக்கு வித் கோமாளி' வித்தியாசங்கள் என்ன?

சூப்பர் சிங்கரில் எஸ்பிபி நடுவராக இருந்தால், பாடுபவர்களின் குறைகளை, குறை சொல்கிறார் என்பதே தெரியாமல் அழகாக எடுத்துச் சொல்வார். பாராட்டுவதென்றால் மனதில் இருந்து பாராட்டுவார். செஃப் தாமுவிடமும் அந்த குணத்தைப் பார்க்க முடிகிறது. வெல்டன் செஃப்!

Published:Updated:
குக்கு வித் கோமாளி

ஞாயிறன்று மெய்ன் டாஸ்க்... ஒரு பெரிய சைஸ் டிஃபன் பாக்ஸில் ஒவ்வொரு குக்கும் சமைத்து, நடுவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும். “இவ்ளோலாம் யாராவது எடுத்துட்டுப் போவாங்களா?” என்று ஷிவாங்கி கேட்க “சாப்பிடுற டாஸ்க் கொடுத்திருக்கலாம்” என்று மணிமேகலை சொல்ல போட்டி ஆரம்பமானது. யார் என்ன சமைத்து நடுவர்களிடம் நல்ல பெயர் வாங்குவார்கள் என்பதுதான் போட்டி.

“விருந்து வெச்சா மொய் வெப்பீங்களா” என்று பாபா பாஸ்கர் கேட்க “உங்க சமையலைப் பொறுத்துதான் அது” என்றார் செஃப் வெங்கடேஷ் பட்.

சனிக்கிழமை அட்வான்டேஜ் டாஸ்க்கில் ஜெயித்த பவித்ரா - ஷிவாங்கிக்கு ஒரு அட்வான்டேஜ் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஏதாவது இரண்டு கஷ்டமான காயை தேர்வு செய்து அதை இரண்டு பேருக்கு சமைக்கக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு சமைக்க சிரமமாக இருக்கும் என்பதுதான் அட்வான்டேஜ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பவித்ரா “இத பண்ணியே ஆகணுமா?” என்று தவிர்க்க நினைத்தார். ஷிவாங்கி “இல்ல வாங்க... ரெண்டு பேருக்கு மாத்திவிடுவோம்” என்று சொல்லி தில்லு கீரை, (சோம்பு கீரை) வாழைப்பூ உள்பட சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்தார்.

ஷகிலா, ஷிவாங்கி
ஷகிலா, ஷிவாங்கி

இங்கி பிங்கி பாங்கி போட்டு தில்லு கீரையை பாபா பாஸ்கரிடம் கொண்டு போனார். அவர் கோபப்படுவதுபோல நடிக்கவே பயந்து திரும்பி வந்தார். மீண்டும் போனார். மீண்டும் பாபா பாஸ்கர் மிரட்டும் ஆக்‌ஷன்கள் செய்யவே திரும்ப வந்தார். “பயமா இருக்கு” என்றார். செஃப் அருகில் போய் அந்தக் கீரையை பாபா பாஸ்கர் டேபிளில் வைத்தார். வாழைப்பூவை ஷிவாங்கி ஷகிலாவுக்கு கொடுத்தார்.

கொடுத்தாலும் புலம்பிக்கொண்டுதான் இருந்தார். “யாருக்கும் கெடுதல் நெனைச்சுக் குடுக்கல. மாஸ்டர் எப்படியாச்சும் சமாளிச்சு செஞ்சிருவார். ஷகிலாம்மாவும் அப்டித்தான். அஷ்வினுக்கு மாத்தி விட்டா அஷ்வின் டென்ஷனாவாரு. அதுனாலதான் அவருக்கு வைக்கல. ரெண்டு பேரும் நல்லா பண்ணணும். இல்லன்னா எனக்குக் கஷ்டமா இருக்கும்” என்று புலம்பினார்.

குக்கு வித் கோமாளி ஹிட்டடிக்கும் இடம் இதுதான். போட்டியாளர்களின் வில்லன் முகத்தை வெளிக்காட்டும் பிக் பாஸ் ஷோவுக்கு நேரெதிராக, எல்லாருக்குள்ளும் இருக்கும் ‘லாலாலா’ விக்ரமன் முகத்தைக் காட்ட அனுமதிக்கிறது இந்த ஷோ. வேண்டுமென்றே யாரையும் பழி வாங்க, புறம் பேச என்றில்லாமல் ஜாலிலோ ஜிம்கானா பாடிக்கொண்டிருப்பதாலும், ஒரு ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கேங் ஃபீலிங் தருவதாலும் இந்த ஷோவின் வீச்சும், ரீச்சும் வாரா வாரம் ஏறிக்கொண்டே இருக்கிறது!

சமைக்கும் முன் இடையூறாக ஒரு நீண்ட குச்சி, செங்கோல் டைப்பில் கொடுக்கப்பட்டது. ‘'உப்புக்கருவாடு ஊற வெச்ச சோறு” பாட்டில் வயிற்றில் ஒரு குச்சியை பேலன்ஸ் செய்தபடி ஆடுவார்களே... அதேப்போல அந்தக் குச்சியை வைத்துக்கொண்டு குக்கும், கோமாளியும் சமைக்க வேண்டும். ஒருவேளை பேலன்ஸ் தவறி விழுந்துவிட்டால், அந்த குக்கும் கோமாளியும் இரண்டு நிமிடங்கள் சமைக்காமல் நிற்க வேண்டும்.

பாபா பாஸ்கர்
பாபா பாஸ்கர்

இந்த இடையூறுடன் சமையல் ஆரம்பமானது. மணிமேகலை இஷ்டத்துக்கு அஷ்வினை ஆட்டுவித்தார். “நான் பேலன்ஸ் விட்டுடுவேன். ஒழுங்கா மணிமேகலை க்யூட்டுனு சொல்லு” என்று மிரட்டி சர்ட்டிஃபிகேட் வாங்கினார். ‘விஜய் டிவி இலியானா’ என்று சொல்லிக்கொண்டார். இன்னொரு புறம் பாலா சொல்லும் கவுன்ட்டர்களுக்கு ரைமிங் ரிப்ளை சொல்லிக் கொண்டிருந்தார் ரித்திகா. ஷகிலாவை பாலா, சரத், புகழ் மூவருமாக போன வாரம் போலவே மிமிக்ரி பண்ணச் சொல்லி ட்ரெய்னிங் கொடுத்தார்கள்.

ஷிவாங்கிக்கு, ஷகிலாவும் பாபா பாஸ்கரும் காய்கறி மாற்றிக் கொடுத்ததில் தன்மீது கோபமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார். ''நீங்க தில்லு... அதான் தில்லுகீரை உங்களுக்கு” என்று பாபா பாஸ்கருக்கு ஐஸ் வைத்தார்.

புகழிடம், அந்த தில்லு கீரையை (டில்லி கீரை என்றும் சொன்னார்கள்) எப்படி சமைக்கவேண்டும் என்று வேறு வொர்க் ஸ்டேஷனில் போய்க் கேட்கச்சொன்னார் பாபா பாஸகர். புகழ் அந்த வேலையைச் செய்யாமல் சொந்த வேலையச் செய்து கொண்டிருந்தார். பவித்ராவிடம் கொஞ்ச நேரமும், ரித்திகாவிடம் கொஞ்சநேரமும் கடலை விளைத்துக் கொண்டிருந்தார்.

இன்னொரு சென்ட்டிமென்ட்டும் நிகழ்த்தினார் புகழ். குக்கர் விசிலைக் காணவில்லை என்று புகழ் தேடிக்கொண்டிருக்க, தன்னுடைய குக்கரில் விசிலை வைத்து உதவினார் ஷகிலா. புகழ் போய் காலில் விழுந்து ''நன்றிம்மா'' என்று சொல்லி நடிக்க, புகழ் நடிப்பதாக இருந்தாலும் ஷகிலா சீரியஸாக சென்டிமென்ட்டாக உணர்ந்தார். புகழைக் கட்டிக்கொண்டு நன்றியை ஏற்றுக்கொண்டார். நடுவில் சுனிதாவிடம் கோபப்பட்டார் ஷகிலா. அதற்கும் மனதார மன்னிப்புக் கேட்டார்.

ஷிவாங்கி
ஷிவாங்கி

சமைத்து முடித்ததும் ஒவ்வொருவராக நடுவர்களிடம் சமர்ப்பித்தனர். ஷகிலா செய்த போட்டி சால்னா, கீமா தொக்கு, வாழைப்பூ கூட்டு.. இவற்றுக்கு நடுவர்களிடம் இருந்து நிறைய பாராட்டுகள் கிடைத்தன. செஃப் தாமுவும் செஃப் வெங்கடேஷ் பட்டும் எழுந்து வந்து மொய்ப்பணம் கொடுக்கும் அளவுக்கு விருந்து இருந்தது.

இங்கே இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சூப்பர் சிங்கரில் எஸ்பிபி நடுவராக இருந்தால், பாடுபவர்களின் குறைகளை, குறை சொல்கிறார் என்பதே தெரியாமல் அழகாக எடுத்துச் சொல்வார். பாராட்டுவதென்றால் மனதில் இருந்து பாராட்டுவார். செஃப் தாமுவிடமும் அந்த குணத்தைப் பார்க்க முடிகிறது. வெல்டன் செஃப்!

அடுத்ததாக அஷ்வின் கேரட் அல்வா, பன்னீர் டிக்கா, கும்ப் மட்டர் மலாய், ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி, ஆனியன் வித் வினிகர் ஆகியவற்றை விருந்தளித்தார். அதற்கு நார்மலான பாராட்டு கிடைத்தது.

பாபா பாஸ்கர் - புகழ் அடுத்தது. நடுவர்கள் காலில் விழுந்து விருந்தை அடுக்கினார்கள். சிக்கன் உருண்டைக் குழம்பு, தில்லு கீரை கடைஞ்சது, மூளை பெப்பர் ஃப்ரை, நல்லி ரசம். ஒவ்வொரு ஸ்பூன் வாயில் வைத்ததுமே இரண்டு நடுவர்களும் மெய்மறந்து சல்யூட் வைத்தனர். எழுந்து வந்து பாராட்டினர். பாபா பாஸ்கர் “இந்த ஒருநாள் போதும்” என்று உருகினார்.

குக்கு
குக்கு

“ஷிவாங்கி உங்களுக்கு இந்தக் கீரையை எடுத்துக் கொடுத்துட்டு ’அவங்க நல்லா பண்ணணும்’னு ப்ரே பண்ணிட்டிருந்தா.. அவ நல்ல மனசுதான் நீங்க நல்லா பண்ணியிருக்கீங்க” என்று செஃப் தாமு சொன்னதும் “என் கொழந்த... இந்தா இந்தக் காச நீ வெச்சுக்க” என்று நடுவர்கள் கொடுத்த காசை ஷிவாங்கி மறுக்க மறுக்க அவரிடமே கொடுத்தார் பாபா பாஸ்கர்.

அடுத்து பன்னீர் நக்கட்ஸ், புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, மேத்தி சிக்கன் உள்ளிட்டவையுடன் விருந்து வைத்தனர் பவித்ராவும் ஷிவாங்கியும்... சிக்கன் கொஞ்சம் ஓவர் குக்கிங் என்பதோடு நல்ல பாராட்டையும் பெற்றது அது.

ரித்திகா பாலா அடுத்து வந்தனர். வறுத்து அரச்சை சாம்பார், பாவக்க்கா புளித்தொக்கு, வெத்தலை ரசம் ஆகியவை கொடுத்தனர். தொக்கும், சாம்பாரும் நல்ல பாராட்டு பெற, மெயின் டிஷ் இல்லையே என்ற குறையும் சொல்லப்பட்டது,

முடிவில் பாபா பாஸ்கர்- புகழ், ஷகிலா - சுனிதா, அஷ்வின் - மணிமேகலை ஆகியோர் சேஃப் ஸோனுக்குள் போனார்கள். பாக்கி இருக்கும் பவித்ரா, ரித்திகா இருவரும் ஃபேஸ் ஆஃப் சேலஞ்சில் மோதிக் கொண்டனர். ரோஜாப் பூக்கள் உள்ளிட்ட சில பூக்களைக் கொண்டு வந்து சமைக்கச் சொல்லி டாஸ்க் கொடுத்தார்கள்.

இருவருமே டென்ஷனாக இருந்தார்கள். ரித்திகா ரொம்பவுமே முகத்தை சீரியஸாகவே வைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரீயாக இருந்ததால், 'மாரி' மியூசிக் போட்டாலே கண்ணில் படுபவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார் பாபா பாஸ்கர். அவரிடமிருந்து தப்பிகக் ஒவ்வொருவரும் முயன்று முடியாமல் நின்றனர். அஷ்வினையும் புகழையும் தூக்கிக்கொண்டு ஓடினார் பாபா பாஸ்கர்.

நேரம் முடியவே ரித்திகா ‘ஸாஃப்ரான் ரோஸ் ஃப்ளேவர் ஆப்பிள் ஜிலேபி’ செய்திருந்தார். பவித்ரா “ரோஸ் ஷாய் துக்ரா” செய்திருந்தார். இரண்டுமே பாசிட்டிவ் நெகடிவ்களுடன் விமர்சிக்கப்பட்டது.

கடைசியில் பரபர இசையெல்லாம் போட்டு பில்டப் செய்யப்பட்டு ரித்திகா எலிமினேட் செய்யப்பட்டார். அது அறிவிக்கப்பட்டதும் அழுதுவிட்டார் பவித்ரா. ரித்திகா வைல்ட் கார்டில் வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆக, மீண்டும் பழைய போட்டியாளர்களுடன் இன்னும் கடுமையாக அடுத்தடுத்த வாரங்களில் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்!