Published:Updated:

காட்டுக்குள் மாட்டிக்கொண்ட ஆல்யா; காப்பாற்றிய இயக்குநர்! - கோத்தகிரியில் திக் திக் அனுபவம்

மாட்டிக்கொண்ட ஜீப்பை மீட்க முயலும் திரவியம்...

``7 மாத கர்ப்பிணியான ஆல்யாவை பத்திரமாக அழைத்துச் செல்வதில் அனைவரும் கவனமாக இருந்துள்ளனர.’’

காட்டுக்குள் மாட்டிக்கொண்ட ஆல்யா; காப்பாற்றிய இயக்குநர்! - கோத்தகிரியில் திக் திக் அனுபவம்

``7 மாத கர்ப்பிணியான ஆல்யாவை பத்திரமாக அழைத்துச் செல்வதில் அனைவரும் கவனமாக இருந்துள்ளனர.’’

Published:Updated:
மாட்டிக்கொண்ட ஜீப்பை மீட்க முயலும் திரவியம்...

தமிழ் சின்னத்திரையின் டாப் சீரியல்களின் டாப் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் ஒரு கேங் ஃபார்ம் செய்து ஒண்ணும் மண்ணுமாகப் பழகி வருவது உங்களுக்குத் தெரியுமா?

நட்சத்திர பட்டாளம்
நட்சத்திர பட்டாளம்

`திருமணம்’ சித்து, ஷ்ரேயா அஞ்சன், `ராஜா ராணி’ சஞ்சீவ், ஆல்யா, ஸ்ரீதேவி , `சத்யா’ விஷ்ணு, ஆய்ஷா , `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன், `ஈரமான ரோஜாவே’ திரவியம், ரியோ, ஸ்ருதி, பிரிட்டோ என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து தொலைக்காட்சி நட்சத்திரங்களும் இந்த கேங்கில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளி (அதுவும் முக்கிய புள்ளி) இயக்குநர் பிரவீன் பென்னட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட சீரியல்களின் இயக்குநர் பிரவீன் பென்னட் - பிரமோதித்தா ஜோடிக்கு நட்பு வட்டம் பெரியது. ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக ``Monopoly madness’’ என்னும் வாட்ஸ் அப் க்ரூப் ஆரம்பித்துள்ளனர். அப்படியே குரூப்பில் ஒவ்வொருவராக இணைந்து நட்பு வட்டம் விரிவடைந்துவிட்டது. ஷூட் ஷூட் என பிஸியில் இருந்தாலும் சின்னதாக லீவ் கிடைத்தாலும் திரைப்படம், டிரெக்கிங், வீக் எண்ட் சந்திப்புகள் என கேங்காக கிளம்பிவிடுகிறார்கள்.

தர்பார் கலாட்டா
தர்பார் கலாட்டா

சமீபத்தில் `தர்பார்' படத்துக்கு குரூப்பாகச் சென்று திரையரங்கையே அதிர வைத்திருக்கிறது இந்தச் சின்னத்திரை பட்டாளம். அதுமட்டுமன்றி புத்தாண்டுக்கு டிரெக்கிங் சென்றபோது அங்கு பெரிய களேபரமே வெடித்திருக்கிறது.

இயக்குநர் பிரவீன் பென்னட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்திருந்தார். என்ன நடந்தது என்று சீரியல் வட்டத்தில் விசாரித்தோம். குமரன், திரவியம், சஞ்சீவ், ஆல்யா, சித்து என அனைவரும் புத்தாண்டு விடுமுறைக்கு தங்கள் குடும்பத்தினருடன் கோத்தகிரிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர். ஆல்யா மானசா, முதலில் பயந்தாலும், பின்னர் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் டிரெக்கிங் செல்ல முடிவெடுத்துள்ளார்.

மோனோபோலி டீம்
மோனோபோலி டீம்

7 மாத கர்ப்பிணியான ஆல்யாவை பத்திரமாக அழைத்து செல்வதில் அனைவரும் கவனமாக இருந்துள்ளனர். ஆனால், கோத்தகிரி மலைப்பாதையில் பாதி வழிக்கு மேல் ஆல்யாவால் ஏற முடியவில்லை. எனவே, அருகில் இருந்த கோயிலில் சஞ்சீவுடன் ஓய்வெடுத்துள்ளார். மற்றவர்கள் டிரெக்கிங்கை தொடர்ந்துள்ளனர்.

மலைப்பாதை மிகவும் கரடு முரடாக இருந்ததால் மற்றவர்களாலும் மலை ஏற முடியவில்லை. எனவே, அந்த வழியாக வந்த ஜீப்பில் ஏறிச் சென்று, தன் ஜீப்பை எடுத்து வந்து அனைவரையும் அழைத்து சென்றிருக்கிறார் பிரவீன் பென்னட். ஆனால் சஞ்சீவ், ஆல்யாவை அழைத்து வர சென்ற ஜீப் பாதி வழியிலேயே மாட்டிக்கொண்டுள்ளது. அந்த வழியில் ஜீப் செல்வது கடினம்.

மோனோபோலி டீம்
மோனோபோலி டீம்

எனவே, பாதியில் மாட்டிக்கொண்டனர். மொபைலில் சிக்னல் வீக். நேரம் செல்ல செல்ல ஆல்யாவும் சஞ்சீவும் பதறிவிட்டனர். எப்படியோ பிரவீன் பென்னட்டுக்குத் தகவல் கிடைக்க, தன் ஜீப்புடன் அவர்களை மீட்கச் சென்றுள்ளார். அவருடன் ஈரமான ரோஜாவே நாயகன் திரவியமும் சென்றுள்ளார். அது யானைகள் சென்று வரும் பாதை என்பதால் ஆல்யா பயத்தில் கதறி அழுதுள்ளார்.

பிரவீன் பென்னட்டும் திரவியமும் சேர்ந்து பள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஜீப்பை இழுக்க முயற்சி செய்துள்ளனர்.

இயக்குநர் பிரவீன் பென்னட்
இயக்குநர் பிரவீன் பென்னட்

சிக்கிக்கொண்டிருந்த ஜீப்பை, பென்னட்டின் ஜீப்புடன் கம்பி மூலம் இணைத்து, வேகத்தைக் கூட்டி ஒருவழியாக இழுத்து வெளியே எடுத்துள்ளனர். பின்னர், ஆல்யாவையும் சஞ்சீவையும் பத்திரமான மீட்டனர். இந்த மீட்பு பணியின் சில காட்சிகளை இயக்குநர் பென்னட் தன் இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பென்னட். அந்த வீடியோவை பார்த்து பதறிபோன ஆல்யாவின் ரசிகர்கள் `டேக் கேர் செம்பா’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இப்படியொரு நட்பு வட்டம் இருப்பது அரிதான் விஷயம்தான்.