Published:Updated:

தமிழா தமிழா: `முடிவை எப்போதும் நாம் தான் எடுக்கவேண்டும்' - விலகல் குறித்து கரு.பழனியப்பன் பேட்டி

கரு.பழனியப்பன்

`தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான காரணம் குறித்து அவரிடம் பேசினோம்.

Published:Updated:

தமிழா தமிழா: `முடிவை எப்போதும் நாம் தான் எடுக்கவேண்டும்' - விலகல் குறித்து கரு.பழனியப்பன் பேட்டி

`தமிழா தமிழா' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான காரணம் குறித்து அவரிடம் பேசினோம்.

கரு.பழனியப்பன்
இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கிய வந்த 'தமிழா தமிழா' நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இருவேறு கருத்துடைய இரு தரப்பினரின் விவாதங்கள் நிகழ்ச்சியில் நடைபெறும். அதை கரு. பழனியப்பன் எடுத்தாண்ட விதமும் கூறுவது கூறல் நடக்காமல் புதிதாய் அமைந்தது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த இந்த 'தமிழா தமிழா' நிகழ்ச்சியை கரு. பழனியப்பன் நிறுத்திக்கொண்டிருக்கிறார். இதுபற்றி "சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி ஜீ தமிழ்" என்று தனது விலகல் குறித்து கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பு அனேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கரு.பழனியப்பனிடம் பேசினோம்.

கரு.பழனியப்பன்
கரு.பழனியப்பன்

இதுபற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கரு.பழனியப்பன், "நான் அந்தத் தொடரை ஆரம்பித்து நான்கு வருடம் ஆகிவிட்டது. முடிவை எப்போதும் நாம் தான் எடுக்க வேண்டும். இதே தன்மை கொண்ட நிகழ்ச்சி வேறொரு தளத்தில் கொண்டு வர தீவிரமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜீ தமிழில் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். கொஞ்சமும் மாற்று குறையாமல் அடுத்த முயற்சி இருக்கும். ஒரு பெரும் வாசற்படியை கொண்டு வந்து சேர்த்த விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நான் என்னை அர்ப்பணித்து வாழ்கிறேன் என்பதும் உண்மை. நிறுவனத்தின் மீது பெரிதும் புகார் இல்லை. அடுத்த வாரம் இன்னும் பெரிய தளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை முன் வைக்க வாய்ப்பு வருவதற்கான அறிவிப்பு காத்திருக்கிறது. அடர்ந்த பொருட்களில் அதில் விவாதங்களை பேசிக்கொள்ளலாம். அதே முழுமையோடு புது நிகழ்ச்சியிலும் என்னை முன்வைப்பேன் என உறுதியளிக்கிறேன்" என்றார்.