Published:Updated:

குக்கு வித் கோமாளி -3 : ஷிவாங்கி இருக்கிறார்... புகழ் மிஸ்ஸிங்! சீக்ரெட் பகிரும் ஷோ டைரக்டர்!

குக்கு வித் கோமாளி

சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு சமையல் தெரியாதவங்க ஹெல்ப் பண்ணனும் அதுதான் ஷோவுடைய முக்கியமான எண்ணம். வேணும்னே அவங்களுடைய சமையலை கெடுத்து விடணுங்கிறது நிகழ்ச்சியின் நோக்கமில்லை!

குக்கு வித் கோமாளி -3 : ஷிவாங்கி இருக்கிறார்... புகழ் மிஸ்ஸிங்! சீக்ரெட் பகிரும் ஷோ டைரக்டர்!

சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு சமையல் தெரியாதவங்க ஹெல்ப் பண்ணனும் அதுதான் ஷோவுடைய முக்கியமான எண்ணம். வேணும்னே அவங்களுடைய சமையலை கெடுத்து விடணுங்கிறது நிகழ்ச்சியின் நோக்கமில்லை!

Published:Updated:
குக்கு வித் கோமாளி

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சீசன் 1- ஐ விடவும் சீசன் -2 விற்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. கோவிட் லாக்டவுனில் அனைவருக்குள்ளும் இருந்த மன அழுத்தத்தை குறைத்து பலரையும் சிரிக்க வைத்து வெற்றியடைந்த ஒரு நிகழ்ச்சி. பிக்பாஸை விடவும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது வரும் என பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மூன்றாவது சீசன் ஆரம்பமாகப் போகிறது என்கிற புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஆடியன்ஸ் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் பார்த்திபனை பேட்டிக்காக சந்தித்திருந்தோம். அப்போது பேசியதிலிருந்து..

பார்த்திபன்
பார்த்திபன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமைக்க தெரிஞ்சவங்களுக்கு சமையல் தெரியாதவங்க ஹெல்ப் பண்ணனும் அதுதான் ஷோவுடைய முக்கியமான எண்ணம். வேணும்னே அவங்களுடைய சமையலை கெடுத்து விடணுங்கிறது நிகழ்ச்சியின் நோக்கமில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் 'குக்கு வித் கோமாளி' பொறுத்தவரை பெரிய அளவில் திட்டமிட்டிருந்தோம். ஆனா, ஷோ ஆரம்பிச்சதும் அந்தந்த டைமிங்கில் என்ன ஒர்க் அவுட் ஆகும்னு எங்க டீமுக்கு தோணுச்சோ அதை அப்ளை பண்ணிப் பார்த்தோம். முதல் சீசனில் ஃபர்ஸ்ட் எபிசோட் முடிஞ்சதும் எடிட்டிங் முடிச்சு அந்த ரிசல்ட்டை ஸ்கிரீனில் பார்த்தப்போ நாங்க எதிர்பார்த்திருந்த ஷோ இதுதானான்னு டிஸ்கஸ் பண்ணினோம். ஆடியன்ஸ் பார்வையில் அது எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதை அப்படியே மக்களுக்கு கொடுத்தோம். அவங்களுக்கும் அது பிடிச்சிருந்தது.. இதுக்கு பின்னாடி பலருடைய உழைப்பு இருக்கு. எல்லாருடைய உழைப்பிற்கான பலனும் இப்போ கிடைச்சிருக்குன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

எப்பவுமே கோமாளிகளைத் தேர்வு செய்வது தொடங்கி குக்குகளை தேர்ந்தெடுக்கும் வரையிலும் ஒவ்வொன்னுக்கும் பொறுமையா ரொம்ப டைம் எடுத்துப்போம். பல கட்ட டிஸ்கஷன்களுக்குப் பிறகுதான் ஃபைனல் பண்ணுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களோட ஷோவில் கலந்து கொண்டவங்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த வெற்றிப்படிகள் வருதுங்கிறதை பார்க்கும்போது ரொம்பவே பெருமையா இருக்கு. சீசன் 2 செலிப்ரேஷன் டைம்ல புகழால வர முடியலை. நிறைய பேர் அவரை மிஸ் பண்றதா எங்ககிட்ட சொன்னாங்க. உண்மையை சொல்லணும்னா நாங்களும் புகழை அதிகமா மிஸ் பண்ணோம். இவங்க எல்லாருமே அடுத்தடுத்த கட்டத்துக்கு போகணுங்கிறதுதான் எங்களுடைய ஆசை என்றவரிடம், குக்கு வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் குறித்துக் கேட்டோம்.

புகழுடன் சிவாங்கி
புகழுடன் சிவாங்கி

இது தொடர்பாக இப்போதைக்கு என்னால எதுவும் பேச முடியாது. ஆனா, நிச்சயம் இந்த சீசனும் செம ஜாலியா இருக்கும் என்றார்.

புரோமோவில் ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மட்டுமே இருந்தார்கள். புகழ் புரோமோவில் இல்லாத காரணத்தினால் அவர் இந்த சீசன் முழுவதும் வர மாட்டார் என்பது தெரிகிறது. ஆனாலும், டைம் கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism