Published:Updated:

``ஆல்யாவுக்காக எழுதப்பட்ட கதையில் ரித்வா நடிப்பது ஏன்?’’- இயக்குநர் பிரவீன் பென்னட் ஷேரிங்ஸ்

பிரவீன் பென்னட், ஆல்யா, ரித்வா
பிரவீன் பென்னட், ஆல்யா, ரித்வா

நடிகை ஜெயஸ்ரீ-யின் மகள் ரித்வா இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார்.

சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற ரொமான்டிக் சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்னட், தற்போது `பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்னும் குழந்தைகளை அடிப்படையாகக் கொண்ட சீரியலில் களமிறங்கியிருக்கிறார். நடிகை ஜெயஸ்ரீ-யின் மகள் ரித்வா இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார்.

`பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் குறித்து பிரவீன் பென்னட் நம்மிடம் பகிர்ந்துகொண்ட பிரத்யேகத் தகவல்கள்.

பிரவீன் பென்னட்
பிரவீன் பென்னட்

``ஒரு அம்மா தன்னோட ரெண்டு வயசு குழந்தைய தவறவிட்டுறாங்க. அந்தக் குழந்தைய நெனச்சி அவங்க ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க. அந்தச் சூழலைப் பயன்படுத்தி வீட்டில் இருக்கும் சிலர் அவங்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்லி ஒதுக்குறாங்க. அவங்க எப்படி எல்லாரையும் சமாளிக்கிறாங்க. குழந்தை என்னவானதுன்னு கதை நகரும். இந்த சீரியலைப் பொறுத்தவரைக்கும் குழந்தைகள் தான் லீட். மாமியார் மருமகள் சண்டை கான்சப்ட் இருக்காது. குடும்பக் கதை என்றாலும், காதல் சீக்வன்ஸும் இருக்கும்.’’

``நான் இதுவரைக்கும் இயக்கிய சீரியல் அனைத்துமே காதல், ஊடல்-ன்னு ஃபன்னா போகும். ஆனா இந்த மாதிரியான சீரியல் எனக்குப் புதுசு. குழந்தைங்கள நடிக்க வெச்சு பழக்கப்பட்டதே கிடையாது. ஒரு மாதிரி செட்டே புதுசா இருக்கு. ஒரு மூணு வயசு குழந்தைய நடிக்க வெச்சிருக்கோம். அந்தப் பாப்பாவுக்கு கேமிராவே தெரியாது. அவங்ககிட்ட இப்படி நடி அப்படி நடின்னு சொல்லமாட்டேன். அவங்க என்ன பண்றாங்களோ அதுதான். அதுவே அழகா இருக்கு. சிம்பிளா சொல்லணும்னா அந்தக் குழந்தைதான் அதற்கான காட்சிகளை டைரக்ட் பண்ணிக்கும். நாங்க பார்த்து ரசிப்போம்.''

`பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் டீம்
`பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் டீம்

``இந்த சீரியலில் ரித்வா, ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க. ஆதிக்கு 5 வயசுதான் ஆகுது. ஆனா நல்ல நடிப்பான். நான் பெரிய ஆர்டிஸ்ட் வெச்சி ஷூட் பண்ணியிருக்கே. யாரும் என்னைத் திட்டினது கிடையாது. ஆனா அஜய் என்னைத் திட்டுவான். ` பிரவீன் சார் எத்தனை ஒன் மோர்போவீங்க போர் அடிக்குது. இதுக்கு மேல ஒன் மோர் போட்டீங்கன்னா நடிக்க முடியாது’’- ன்னு மிரட்டுவான். தனியா சொன்னாக் கூட பரவாயில்ல. ஆனா எல்லார் முன்னாடியும் சொல்லுவான். இப்படி செம ஃபன்னா போகுது ஷூட்.''

ரித்வாவும் நல்லா நடிப்பாங்க. ஏற்கெனவே ஜோடி டேன்ஸ் ஷோவில் கலக்கியிருக்காங்க. ஈஷ்வர் - ஜெயஸ்ரீ பிரச்னை பொதுவெளிக்கு வருவதற்கு முன்னாடி ரித்வாவை என் சீரியலில் நடிக்க வைக்க முடியுமான்னு ஈஸ்வர்கிட்ட கேட்டேன். அவர் வேண்டாம்னு சொல்லிட்டார். நான் அதன் பிறகு ஆடிஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாள் ஜெயஸ்ரீ கால் பண்ணி ரித்வா உங்க சீரியலில் நடிப்பாங்கன்னு சொன்னாங்க. மத்த விஷயங்கள் நேர்ல சொல்றேன்னு சொன்னாங்க. அப்புறம் அவங்களுக்குள்ள இருக்கும் பிரச்னைகளைச் சொன்னாங்க. எனக்கு வருத்தமா இருந்துச்சு.

ஜெயஸ்ரீ, ரித்வா
ஜெயஸ்ரீ, ரித்வா

ரித்வாவை வெச்சு ட்ரையல் ஷூட் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். திடீர்னு ஜெயஸ்ரீ - ஈஸ்வர் விஷயம் மீடியாவுக்கு வந்து பரபரப்பாகிடுச்சு, நான் ஜெயஸ்ரீக்கு போன் பண்ணி, ரித்வா தொடர்ந்து நடிப்பாங்களா, இவ்வளோ பிரச்னைகளுக்கு மத்தியில் அவங்க ஷூட்டிங் வர முடியுமா, அவங்களுக்கு மன உளைச்சலா இருக்குமே’-ன்னு கேட்டேன். அதற்கு ஜெயஸ்ரீ ஒரு பிரச்னையும் வராதுன்னு வாக்குக் கொடுத்தாங்க. அதன் பிறகு ஷூட் பண்ண ஆரம்பிச்சிட்டோம். ரித்வா ரொம்ப டேலன்டட். சின்ன வயசுல மீனாவைப் பார்க்குற மாதிரி இருக்கு அவங்க நடிப்பு.

ரித்வா
ரித்வா

ராஜா ராணி சீரியல் முடிஞ்ச பிறகு ஆல்யா மானசாவுக்காக எழுதப்பட்ட கதையைத்தான் இப்போ பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலா எடுத்துட்டு இருக்கோம். அவங்க கர்ப்பமாகிட்டதால நடிக்க முடியாமப் போய்டுச்சு. ஆல்யா இல்லாததால, ஹீரோயின் கதாபாத்திரத்தை சிறுமியா மாத்தி, , ரித்வாவை நடிக்க வெச்சிட்டோம். அதுமட்டுமல்லாம ராஜா ராணி சீரியலில் வில்லியாக மிரட்டிய ஷப்னம், இந்த சீரியலில் பாசிடிவ் ரோலில் ரொமான்ஸ் பண்ணப் போறாங்க.’’ என்று முடித்தார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு