கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சீரியல் செலிபிரிட்டிகளின் தீபாவளி பிளான் - ஓடிடியில் படம்... புது டிரஸ்ஸில் போட்டோ ஷூட்...

நட்சத்திரா - 
பிந்து
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரா - பிந்து

சின்னத்திரை

தீபாவளி வரப்போகிறது என்றால் ஒரு மாதத்துக்கு முன்பே எல்லோரும் பிளான் போட ஆரம்பித்துவிடுவோம். பல மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால், பலரது பிளானிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ‘இந்த வருடம் தீபாவளி பிளான் என்ன?’ என்று சீரியல் செலிபிரிட்டிகள் சிலரிடம் பேசினோம்...

நட்சத்திரா (நாயகி)

“தீபாவளின்னா நான் ரொம்பவே ஜாலியாகிடுவேன். எப்போதும் ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே பிளானிங், ஷாப்பிங் எல்லாம் ஆரம்பிச்சுரும். தீபாவளி அன்னிக்கு சொந்த பந்தமெல்லாம் வீட்டுக்கு வந்துருவாங்க. குட்டீஸ்களோட சேர்ந்து செமையா என்ஜாய் பண்ணுவேன். ஆனா, இந்த வரு ஷம் பாதுகாப்பு கருதி எங்க குடும்பத்தில் உள்ளவங்க மட்டும் தனியா தீபாவளி கொண்டாடப் போறோம். என்னுடைய தீபாவளி

டிரஸ் எப்போதுமே டிரெடிஷனலா இருக்கணும்னுதான் ஆசைப்படுவேன். அதனால் புடவைதான் இந்த வருஷ தீபாவளி ஆடை. ஷாப்பிங்கெல்லாம் ஆன்லைனில்தான் செய்யப்போறேன். ஸ்நாக்ஸ் எல்லாம்கூட இந்த வருஷம் வீட்டிலேயேதான் செய்யப்போறோம். நானும் ஏதாவது ஸ்வீட் செய்ய டிரை பண்ணுற ஐடியாவுல இருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே பட்டாசு வெடிக்கப் பிடிக்காது. அதனால்

ஸ்வீட், நான்வெஜ், புதுப்படம். கையில் மெஹெந்தினு இந்த வருஷமும் தீபாவளியைக் கலக்கலா கொண்டாடப் போறேன்.”

நட்சத்திரா - பிந்து
நட்சத்திரா - பிந்து

பிந்து (இதயத்தை திருடாதே)

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு எங்க குடும்பத்தில் இருக்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்துருவோம். ஃபிரெண்ட்ஸும் எங்க வீட்டுக்கு வந்துருவாங்க. ஆனா, இந்த வருஷம் பிளானில் கொஞ்சம் மாறுதல் இருக்கு. இந்தத் தீபாவளிக்கு எதாவது

ஒரு முதியோர் இல்லத்துக்கு ஸ்வீட், டிரஸ்ஸெல்லாம் வாங்கிட்டுப் போய், அவங்களோட கொண்டாடப்போறேன். பாதுகாப்பு கருதி இன்னும் பெர்மிஷன் கிடைக்கல. சில முதியோர் இல்லங்களில் பேசிட்டு இருக்கேன். எனக்கான டிரஸ்ஸை ஏதாவது ஒரு டிசைனர்கிட்ட கொடுத்து தயார் பண்ணணும். அதுக்கு நேரம் கிடைக்கலைன்னா, நானே ஒரு ஃபேஷன் டிசைனர்தான். அதனால் எனக்கான ஆடைகளை நானே வடிவமைச்சுக்குவேன். அக்ஸசரிஸ் வாங்க மட்டும் ஷாப்பிங் போகணும். தீபாவளி அன்னிக்கு பட்டாசு, ஓடிடியில் ஒரு படம், அம்மா செய்யும் சூப்பரான ஸ்வீட்ஸுடன் பாதுகாப்பான தீபாவளி பிளானிங் இருக்கு.”

ஜனனி அசோக்குமார் (நாம் இருவர் நமக்கு இருவர்)

“என் குடும்பத்தினர் கோவையில் இருக்காங்க. ஷூட்டிங்குக்காக நான் சென்னையில் இருக்கேன். அடுத்தடுத்து ஷூட்டிங் இருக்கு. தீபாவளிக்கு ஊருக்குப் போறதுதான் என்னுடைய பெரிய பிளானிங்கே, ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு நானும் என் தங்கச்சியும் சேர்ந்து 10 நாளைக்கு முன்னாடியே ஷாப்பிங் போயிட்டு வந்துருவோம். இந்த வருஷம் அதுக்கு வாய்ப்பு இல்ல. அதனால் தனித்தனியாதான் ஷாப்பிங் போகணும். நானும் என் தங்கச்சியும் சேர்ந்து குலோப் ஜாமூன் செய்யும் பிளானிங் இருக்கு. ஆன்லைனில் நிறைய ஆஃபர்கள் போட்டிருப்பதால் ஆன்லைனில் ஃபேன்ஸி ஜுவல்லரிகள் ஷாப்பிங் பண்ணணும்.”

ஜனனி அசோக்குமார் - ஸ்ரீதேவி
ஜனனி அசோக்குமார் - ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி (பொம்முக்குட்டி அம்மாவுக்கு)

“என் மாமியார் வீட்டில்தான் இந்த வருஷம் தீபாவளி கொண்டாடப்போறோம். டிரஸ், பட்டாசு எல்லாம் இனிமேதான் ஷாப்பிங் பண்ணணும். தீபாவளிக்கு சூப்பரான புடவை வாங்கும் பிளான் இருக்கு. என் மாமியார் நல்லா சமைப்பாங்க. அவங்களோட சேர்ந்து நானும் ஸ்வீட்ஸ் பண்ணப்போறேன். எப்போதும் தீபாவளிக்கு கோயில், தியேட்டர்னு எங்கேயாவது வெளிய போவோம். இந்த வருஷம் பாதுகாப்பு கருதி அதுபோல

எந்த பிளானும் இல்ல. வீட்டை அழகா டெக்கரேஷன் செய்து, சாமி கும்பிட்டு என்ஜாய் பண்ணணும். புது டிரஸ்ஸில் போட்டோ ஷூட் செஞ்சு சோஷியல் மீடியாவில் அப்லோட் பண்ணி லைக்ஸ் அள்ளும் பிளானிங்கும் இருக்கு.”

பவித்ரா (அம்மன்)

“சொந்த ஊரு பெங்களூரு. ஷூட்டிங்காக சென்னையில் இருக்கேன். கொரோனா பரவல் அதிகமா இருக்கிறதால ஊருக்குப் போகும் ஐடியா இல்ல. எனவே, இந்த வருடம் தீபாவளியைச் சென்னையில் சிங்கிளாதான் கொண்டாடணும். எனக்கு ஷாப்பிங்னா ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி ஷாப்பிங் போய் டிரஸ் எடுத்துகிட்டே இருப்பேன். சீரியலில் எப்போதும் டிரெடிஷனல் என்றாலும் நிஜ வாழ்க்கையில் கேஷ்வல் லுக்தான் என் சாய்ஸ். தீபாவளின்னா இன்னும் ஸ்பெஷல். எப்போதுமே தீபாவளிக்கு சாமி கும்பிட ஒரு டிரஸ், சாப்பிட ஒரு டிரஸ், கோயிலுக்கு ஒரு டிரஸ்னு நிறைய டிரஸ்கள் பர்சேஸ் பண்ணுவேன். இந்த வருஷமும் நாலு டிரஸ்ஸுக்கான பிளானிங் இருக்கு. ஆன்லைனில் ஆடைகள் வாங்கப் பிடிக்காது. நேர்ல போய்தான் ஷாப்பிங் பண்ணணும். எனக்கு சமைக்கத் தெரியாது. அதனால் தீபாவளி அன்னிக்கு பிடிச்சதை யெல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுவிட்டு ஜாலியா ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்.''

ரோஷினி ஹரிப்பிரியன் - பவித்ரா
ரோஷினி ஹரிப்பிரியன் - பவித்ரா

ரோஷினி ஹரிப்பிரியன் (பாரதி கண்ணம்மா)

“என் ஃபேமிலி கூட ஜாலியா இருக்கிறது தான் எப்போதுமே என்னுடைய தீபாவளி பிளானாக இருக்கும். என் நண்பர்கள் எல்லோரும் வீட்டுக்கு வருந்துடுவாங்க. செமையா செலிபிரேட் பண்ணுவோம். இந்த வருஷம் கொரோனாவால் நண்பர்களை வீட்டுக்குக் கூப்பிட முடியாது. அவங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். நான் மாடலாக இருந்தாலும், தீபாவளிக்கு டிரெடிஷனல் ஆடைகள் அணிவதற்குத்தான் பிடிக்கும். அதனால் புடவை வாங்க ஷாப்பிங் போகணும். அக்ஸசரிஸுக்கான ஷாப்பிங் ஆன்லைனில் பண்ணிப்பேன். எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே தீபாவளி ஸ்வீட்ஸெல்ஸாம் வீட்டிலியே தயார் பண்ண ஆரம்பிச்சுருவோம். எங்க அம்மா செய்யும் ஜாங்கிரிக்காக ஐம் வெயிட்டிங். புது டிரஸ், பட்டாசு, ஸ்வீட் என இந்த வருஷமும் ரகிட, ரகிட , ரகிட தீபாவளிதான்.”

பிரியங்கா (ரோஜா)

“தீபாவளி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எங்க அம்மாவுக்கு தீபாவளி அன்னிக்குத்தான் பிறந்தநாள் கொண்டாடுவோம். தீபாவளி அன்னிக்கு எங்க வீட்டில் லட்சுமி பூஜை செய்வோம். அதனால் தீபாவளி கொலு பொம்மைகள் அடுக்கி பூஜைகள் செய்வோம். என்ன ஷூட்டிங் இருந்தாலும் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு ஊருக்குப் போயிருவேன். எப்போதுமே தீபாவளிக்கு நிறைய ஷாப்பிங் பண்ணுவேன். இந்த வருஷமும் பெரிய பட்ஜெட் ஒதுக்கியாச்சு. என்ன டிரஸ் வாங்கணும், என்ன கலர் வாங்கணும்னு கூட முடிவு பண்ணி வெச்சுருக்கேன். ரெண்டு நாளைக்கு முன்னாடியே வீட்டுக்குப் போய் கலக்கணும்.”

பரதா நாயுடு - பிரியங்கா
பரதா நாயுடு - பிரியங்கா

பரதா நாயுடு (செம்பருத்தி)

“இந்த வருஷம் எங்களுக்கு தலை தீபாவளிங்கிறதுனால நிறைய ஸ்பெஷலான தருணங்களுக்காக பிளான் பண்ணிகிட்டு இருக்கோம். என் ஃபேமிலி என் கணவரோட ஃபேமிலின்னு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடப்போறோம். தலைதீபாவளி என்பதால் நிறைய சடங்குகள் இருக்கு. தீபாவளிக்கான ஷாப்பிங் ஆஃப் லைன், ஆன்லைன் என இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சமா பண்ணிகிட்டு இருக்கேன். குலோப் ஜாமூனில் ஆரம்பிச்சு அதிரசம் வரை நிறைய ஸ்வீட் செய்யப் போறோம். எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு தீபாவளி அன்று இரவு திருப்பதி போறோம். இந்தத் தீபாவளி எங்களுக்கு ரொம்பவே டிரெடிஷனல் தீபாவளி.”