கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: “ராமையும் ஜானுவையும் என் குரல்தான் பிரிச்சது!

வெல்ஸி பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்ஸி பாண்டியன்

`ராஜா ராணி' சீரியலில் இப்போ அர்ச்சனாவிற்கு டப்பிங் பேசிட்டு இருக்கேன். அர்ச்சனா நிஜத்துல என்னை மாதிரி ஜாலியா பேசுறவங்க

டெலிவிஷன் தொடர்கள் மக்கள்மத்தியில் பெருமளவில் விரும்பப்படுவதற்கு நம்மைப் போன்ற உடல் மொழியும், குரலும் மிகப்பெரிய காரணம். அந்த வகையில் சின்னத்திரையில் நாம் பார்க்கும் பெரும்பாலான முகங்களின் குரல்களுக்குச் சொந்தக்காரர் வெல்ஸி பாண்டியன். கிட்டத்தட்ட எட்டு சீரியல்களுக்கும் மேல் இவர் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்.

“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா டப்பிங் கோ-ஆர்டினேட்டராக இருந்ததால் என் அக்காவை டப்பிங் பேசக் கூப்பிட்டார். ஆனா, அக்காவைவிட எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு. அப்பாகிட்ட அடம்பிடிச்சுக் கேட்டதால என்னை வாய்ஸ் டெஸ்ட்டிற்குக் கூட்டிட்டுப் போனார். பல கட்டத் தேர்வுக்குப் பிறகு எனக்கு டப்பிங் கார்டு கிடைச்சது. என்னுடைய எட்டு வயசில் டப்பிங் பேச ஆரம்பிச்சேன். `ரேனிகுண்டா'வில் முதன்முதலா டப்பிங் பேசினேன்.

இதுவரை கிட்டத்தட்ட 550 திரைப்படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருப்பேன். சினிமாவில் பேசும்போது கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். சீரியலுடன் ஒப்பிடும்போது சினிமா கொஞ்சம் கஷ்டம். சீரியலுக்கு டப்பிங் பேசுறப்போ அந்த கேரக்டராக வாழணும். எங்கேயும் என் ஒரிஜினல் குரல் தெரியக் கூடாது. அதே மாதிரி, நான் பேசுற வேற சீரியலுடைய குரல் தன்மையும் தெரியக்கூடாது. அந்தந்த சீரியலுக்கு ஏற்ற மாதிரியா குரலை ஏற்ற இறக்கமாக மாற்றிப் பேசணும்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை, `தமிழும் சரஸ்வதியும்' மின்னல்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிப் பேசுவாங்க. திரையில் அவங்களுடைய உடல்மொழிக்கு ஏற்ற மாதிரி நம்முடைய குரல் இருக்கணும். நிறைய விளம்பரப்படங்களுக்கும் டப்பிங் பேசியிருக்கேன். `96' படத்துல ராம், ஜானுவை ஒரு பொண்ணு பிரிச்சுவைக்குமே, அந்தப் பொண்ணுக்குக்கூட நான்தான் டப்பிங் பேசினேன்.

விகடன் TV: “ராமையும் ஜானுவையும் என் குரல்தான் பிரிச்சது!

`ராஜா ராணி' சீரியலில் இப்போ அர்ச்சனாவிற்கு டப்பிங் பேசிட்டு இருக்கேன். அர்ச்சனா நிஜத்துல என்னை மாதிரி ஜாலியா பேசுறவங்க. அதனால அவங்களுக்கு ரொம்ப ஈஸியா பேசிட்டு வந்துடுவேன். மாமியார் இல்லைன்னா கணவர்கூட சண்டை போடுற மாதிரியான சீன்கள் எல்லாம் வந்தால் சுலபமா பேசிடுவேன். ஆனால், ரொமான்ஸா பேசுற சீன் வந்துச்சுன்னா செம டென்ஷன் ஆகிடுவேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் பல திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன். சில சமயங்களில் அம்மா கேரக்டருக்கும், மகள் கேரக்டருக்கும் சேர்த்தே டூயல் டப்பிங்கெல்லாம் பண்ணியிருக்கேன்.

மற்றபடி எல்லா வேலைகளைப் போலவும் இதுக்கும் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். பிரசவ வலியில் கத்துற மாதிரி பேசும்போதெல்லாம் உண்மையாகவே அந்த வலியை ஃபீல் பண்ணிக் கத்தணும். அப்போதான் ரிசல்ட் நல்லாருக்கும். அப்புறம் இன்னொரு விஷயம்... `சிறுத்தை' படத்தில் வர்ற குழந்தையுடைய குரலுக்குக்கூட நான்தான் சொந்தக்காரி!”