Published:Updated:

``டான்ஸ் ஆட  அனுப்பினா  ரெண்டு பேரும் டிக் டொக்  பண்ணிட்டிருக்காங்க... என்னத்த சொல்ல!" - பரத் வேதனை

மகாலட்சுமி
மகாலட்சுமி

`ஈஸ்வரும், மகாலட்சுமியும் சங்கத்துல இருந்து விலகுவாங்களானு தெரியலை. சங்கமும் அவங்க மீது நடவடிக்கை எடுக்கலைன்னா மேற்கொண்டு பேசுறதுக்கு எதுவும் இல்லை’

`மலேசியாவில் ஷோ நடத்திய விவகாரத்தில் நிதி முறைகேடு' என ஏற்கெனவே சிதைந்து கிடந்தது சின்னத்திரை நடிகர் சங்கம். 2 நாள்களுக்கு முன் கூடிய டிவி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகப்பட்ட ரகளை நடந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக ஈஸ்வர் மற்றும் நியமன உறுப்பினரான மகாலட்சுமி இருவரையும் தொடர்புப்படுத்தி நீடித்துக்கொண்டிக்கும் சர்ச்சைகளைதான் இதற்கு காரணம்!

கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் பரத்திடம் பேசினேன். ``மலேசியா ஷோ விவகாரத்துலே இன்னும் தெளிவான முடிவை எடுத்தபாடில்லை. தலைவர்தான் ஊழல் பண்றார்னு சொன்ன நிர்வாகக்குழு, அவரை நீக்கவும் முடிவெடுத்தது. ஆனா, சங்கத்தின் விதிப்படி பொதுக்குழு உறுப்பினர்களால தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை, நீக்குற அதிகாரம் நிர்வாகக் குழுவுக்குக் கிடையாது. அதனால இது செல்லாம போயிடுச்சு."

மகாலட்சுமி
மகாலட்சுமி

``சரி பொதுக்குழுவுல பேசி ஏதாவது முடிவெடுக்கலாம்னு கடந்த மாசம் அவசரமாகப் பொதுக்குழுவைக் கூட்டினாங்க. அதுலயும் எந்த முடிவையும் எடுக்கலை. மிச்சமானதெல்லாம் கூச்சலும் குழப்பமும்தான். தலைவரைக் குறை சொல்ற நிர்வாகக் குழுவைச் சேர்ந்த நிறைய பேர், மலேசிய கலை நிகழ்ச்சியில பண ஆதாயம் அடைஞ்சிருக்காங்க. சிலருடைய குட்டு வெளிப்பட்டதும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டாங்க. அதனால, நிர்வாகத்தின் மேலே குழு உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை. சரி, ஆண்டுப் பொதுக்குழுவுல முடிவு செய்யலாம்னு அன்னைக்கே கலைஞ்சிட்டோம்."

``அந்தக் கூட்டம்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதுக்கு நடுவுல தலைவர் ரவி வர்மாவை சங்க அலுவலகத்துக்குள்ள அனுமதிக்காம, பொருளாளரே சில பணப் பரிவர்த்தனைக்குத் தன்னிச்சையா முடிவு எடுத்திருக்கார். இதனால, கூட்டத்துல இருந்து பொருளாளரை நீக்கியதா தீர்மானம் போட்டாங்க. ஆனா, அவர் அந்த முடிவை ஏத்துக்க மறுத்துட்டார்."

``தொடர்ந்து 'நீ ஒழுங்கா... நான் ஒழுங்கா'னு ஆள் ஆளுக்கு கூச்சல் போட்டுகிட்டிருக்காங்க. மனோபாலா மாதிரியான சீனியர் நடிகர்களையும் அவமானப்படுத்திட்டாங்க. கடைசிவரை உறுப்படியான எந்த முடிவையும் எடுக்க முடியலை."

``இந்த லட்சணத்துலதான் மகாலட்சுமி, ஈஸ்வர் விவகாரமும் சேர்ந்துடுச்சு. மகாலட்சுமி ஒரு பேட்டியில `சங்கம்தான் எங்களை சேர்ந்து டான்ஸ் ஆடச் சொன்னது'னு சொல்றாங்க. அவங்க டான்ஸ் மட்டும் பண்ணலை. ரெண்டு பேரும் `டிக் டாக்' பண்ணி வீடியோ வெளியிடுறாங்க. இந்த விவகாரமே இன்னும் முடியாத நிலையில சங்கம் ஏன் ரெண்டு பேரையும் சேர்ந்து டான்ஸ் ஆட அனுப்பி வெச்சாங்கனு தெரியலை. ரெண்டு குடும்பம் அங்க பிளவுபட்டுட்டிருக்க சூழல்ல, சங்கத்தின் பெயரும் அதில் அடிபடுறது நல்லதானு கேட்டா யாரும் காது கொடுத்து கேட்க மாட்றாங்க."

ஈஸ்வர் ஜெயஶ்ரீ
ஈஸ்வர் ஜெயஶ்ரீ

``அன்னைக்கு கூட்டத்துலகூட ஈஸ்வர் விவகாரம் பத்திப் பேசணும்னு சிலர் எழுந்தோம். `இப்போ முடியாது; இன்னொரு நாள் பேசலாம்'னு சொல்றாங்க. அதையும் மீறி சிலர் பேசும்போது, கூச்சல் போட்டுட்டேயிருக்காங்க. அதேபோல பதவியில இருந்தும் கூட்டத்துல ஈஸ்வரும், மகாலட்சுமியும் கலந்துக்கலை. பொது சங்கத்துடைய பொறுப்பில் இருக்கிறவங்க மீது குற்றம் சுமத்துனா, பதவியில இருந்து விலகுறதுதான் நாகரிகம். ஆனா, ஈஸ்வரும், மகாலட்சுமியும் விலகுவாங்களானு தெரியலை. இப்படியிருக்கும்போது சங்கமும் அவங்க மீது நடவடிக்கை எடுக்கலைன்னா மேற்கொண்டு பேசுறதுக்கு எதுவும் இல்லை" என்றார் பரத்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ராஜேந்திரனிடம் பேசினேன். ``ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்துல ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிட்டதைப் பார்த்தப்போ, ரொம்ப வருத்தமா இருந்தது. ஆளாளுக்கு சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க. கட்டுப்படுத்துறக்கான தகுதி கொண்ட ஆளும் நிர்வாகத்துல இல்லை. சங்கமும் இனி முறையா செயல்படும்னு எனக்குத் தோணலை'' என்றார்.

``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்!'' - மகாலட்சுமி
அடுத்த கட்டுரைக்கு