Published:Updated:

Ethirneechal: `ஆதிரை யாரை கல்யாணம் பண்ணுவாங்க?' - `எதிர்நீச்சல்' விமல் குமார் ஷேரிங்ஸ்

விமல் குமார்

பல ஆண்டுகளாக இந்த இடத்துக்கு வர்றதுக்காக கஷ்டப்பட்டிருக்கேன். கரிகாலனா மக்களோட சப்போர்ட் கிடைக்கும்போது அது இதயத்துக்குள்ள புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரியான ஓர் உணர்வைக் கொடுக்குது.

Published:Updated:

Ethirneechal: `ஆதிரை யாரை கல்யாணம் பண்ணுவாங்க?' - `எதிர்நீச்சல்' விமல் குமார் ஷேரிங்ஸ்

பல ஆண்டுகளாக இந்த இடத்துக்கு வர்றதுக்காக கஷ்டப்பட்டிருக்கேன். கரிகாலனா மக்களோட சப்போர்ட் கிடைக்கும்போது அது இதயத்துக்குள்ள புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரியான ஓர் உணர்வைக் கொடுக்குது.

விமல் குமார்
எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் விமல் குமார். விஜே, ஆர்ஜே, வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஷோ புரொடியூசர் எனப் பல முகங்கள் கொண்டவர்.

கரிகாலன் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வரும் நிலையில் அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

விமல் குமார்
விமல் குமார்

"பல ஆண்டுகளாக இந்த இடத்துக்கு வர்றதுக்காக கஷ்டப்பட்டிருக்கேன். கரிகாலனா மக்களோட சப்போர்ட் கிடைக்கும்போது அது இதயத்துக்குள்ள புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரியான ஓர் உணர்வைக் கொடுக்குது. இந்தக் கேரக்டர் ஒருதலைக் காதலோடு நான் இருக்கிற மாதிரி இருக்கும். கதைப்போக்கு இப்ப எப்படி இருக்கு ஆதிரை யாரை திருமணம் செய்வாங்கன்னு கேட்டீங்கன்னா அதுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆடியன்ஸோட பல்ஸ் என்னன்னு இயக்குநருக்கு நல்லாவே தெரியும். அவருக்கு மட்டும் தான் அடுத்து என்ன ஆகப் போகுதுங்கிறது தெரியும்" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"நான் நிறைய இயக்குநர்களை சந்திச்சிருக்கேன். பொதுவாகவே நட்புங்கிறது வேற... சினிமாங்கிறது வேற! நீங்க ஒரு இயக்குநரை சந்திக்கலாம், பேசலாம், அவங்க கூட மணிக்கணக்கா உரையாடலாம். ஆனா, வாய்ப்பு? அது என் மைண்ட்ல ஸ்பார்க் ஆகணும் தம்பி.. அந்தக் கேரக்டர் உன்னை டிமாண்ட் பண்ணனும்ன்னு வெளிப்படையாகவே சொல்லிடுவாங்க. அப்படி இந்தக் கேரக்டருக்கு இவன் பொருத்தமா இருப்பான்னு இயக்குநருக்குத் தோணினா மட்டும்தான் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிறதுங்கிறது நம்ம கையிலதான் இருக்கு.

விமல் குமார்
விமல் குமார்

பெரும்பாலும் நான் நூலகத்தில்தான் என்னுடைய பொழுதுகளை கழிச்சிருக்கேன். புத்தக வாசிப்பு தான் இன்னைக்கு இந்த இடத்துக்கு என்னை கூட்டிட்டு வந்திருக்கு. நாம பார்த்து வியந்த பிரபலங்கள் பலருடைய பயோகிராபி படிச்சி மோட்டிவேட் ஆகியிருக்கேன். என்கிட்ட நிறைய தேடல் இருந்தது. அந்த தேடல் கொடுத்த அனுபவமாகத்தான் நான் கரிகாலனை நினைக்கிறேன்.

ஒருமுறை ஆடிஷனுக்காக வடபழனிக்குப் போயிருந்தேன். அங்க ஆடிஷனில் ஒரு ஃபோட்டோவை என்கிட்ட காட்டி இதுல இருக்கிற மாதிரி முடி வெட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க. நானும் போய் வெட்டிட்டு வந்தேன். இன்னும் கொஞ்சம் வெட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க பண்ணிட்டு வந்தேன். மூன்றாவது முறை தாடியை கொஞ்சம் ஷார்ப் ஆக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. மூணு முறை முடி வெட்டிட்டு போனேன்.

மூணாவது முறையா நான் போனப்ப அங்க யாருமில்லை. நானும் வருவாங்கன்னு ரொம்ப நேரமா அங்கேயே காத்திருந்தேன். அப்ப அந்த இடத்தோட ஓனர் என்கிட்ட வந்து என்ன வேணும், யாரு என்னன்னு விசாரிச்சாங்க. நான் விவரத்தை சொல்லவும் அவங்க அப்பவே போயிட்டாங்களே... உங்களை அவங்க செலக்ட் பண்ணலைன்னு உங்களுக்குத் தெரியலையான்னு கேட்டாங்க. அந்த ஆடிஷனில் நான் சந்திச்ச நபர்களை நான் மீண்டும் எங்கேயும் இதுவரைக்கும் சந்திக்கல. அன்னைக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்துச்சு. ரூமுக்கு வந்து வெந்நீர் குடிச்சிட்டு தூங்கிட்டேன். ஒவ்வொரு நாள் விடியலும் புது விடியல் தான். கவலையெல்லாம் அந்த ஒரு நாளைக்கு மட்டும்தான். அடுத்த நாள் புது ஓட்டம் ஆரம்பிச்சிடும். இப்படி நீளமான இரவுகள்; கவலையான இரவுகள் எல்லாம் என் வாழ்க்கையிலும் இருக்கு. அதெல்லாம் என் டைரி பக்கங்களில் இருக்கு!" என்றார்.

விமல் குமார்
விமல் குமார்

இன்னும் பல விஷயங்கள் குறித்து விமல் குமார் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.