பிக் பாஸ் தமிழ் 4-வது சீசனுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது. ‘இவங்க போறாங்களாமே’, ’அவங்க போறாங்களாமே’ என ஆளாளுக்கு ’உத்தேச பட்டியல்’ வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். எப்படியாவது ஷோவுக்குள் நுழைந்துவிட வேண்டுமெனத் துடிக்கும் சிலர் யாரைப் பிடித்தால் க்ளிக் ஆகுமென முந்தைய சீசனில் கலந்து கொண்டவர்களிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஒரு ரவுண்ட் வந்தவர். பிறகு திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். அவரிடம் ‘ஷோல கலந்துக்க விருப்பமா’ எனக் கேட்டிருக்கிறார்கள். 'தமிழ் சினிமாவுல இன்னொரு ரவுண்ட் வர, ஷோ உதவுமா' எனக் கேட்டவர், கணவரிடம் டிஸ்கஸ் செய்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாராம்.
எப்படியும் 2021 புத்தாண்டை பிக் பாஸ் வீட்டுக்குள்தான் கொண்டாட இருக்கிறார்கள் போட்டியாளகள். அந்தக் கொண்டாட்டத்தில் பெரிய செலிபிரிட்டி ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் தர யோசனையும் இருப்பதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கமல் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு இன்னொருபுறம் இருக்கிறது. பிக் பாஸ் மேடையை கமலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.

பிக் பாஸ் தொடங்கும் நாள், லாஸ்லியா-கவின், ஆரவ்-ஓவியா போல் இந்த சீசனில் எந்த ஜோடி..? இப்படியான பல கேள்விகளுக்கான பதில்கள் நாளை (20/08/2020) வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கிறது. படிக்கத் தவறாதீர்!