கட்டுரைகள்
Published:Updated:

சீரியல், நிஜம்... ரெண்டு ஒற்றுமை இருக்கு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

“பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்ல மீனா கேரக்டருக்கு முதல்ல கமிட் ஆனது கவிதா. அவங்களை வெச்சு ஷூட் முடிச்சு புரமோவும் டிவியில வந்திடுச்சு. ஆனா என்னுடைய வாழ்க்கையில ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மறக்க முடியாத விஷயமா அமையணும்னு இருக்கறப்ப எப்படி நான் அதுல இல்லாம இருப்பேன்! கரெக்டா கவிதாவுக்குக் கன்னட பிக்பாஸ்ல இருந்து அழைப்பு வர, அவங்க விலகி, சீரியலுக்குள் நான் வந்தேன்’’ - உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ஹேமா சதீஷ். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் இரண்டாவது மருமகள். கதைப்படி சீரியலில் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் தற்போது எட்டு மாத கர்ப்பிணி.

‘`இந்த சீரியல் வாழ்க்கையில மறக்க முடியாததுன்னு இந்த ஒற்றுமையைத்தான் சொல்றீங்களா’’ எனக் கேட்டதும், ஹேமா முகத்தில் எக்கச்சக்க ஆச்சர்ய ரேகைகள்.

சீரியல், நிஜம்...  ரெண்டு ஒற்றுமை
இருக்கு!

‘`என்னங்க, டக்னு இதனாலதானான்னு சாதாரணமாக் கேட்டுட்டீங்க. நிறைய இருக்குங்க. எங்க ஊரு மயிலாடுதுறை பக்கத்துல இருக்கிற மணக்குடிங்கிற கிராமம். அங்க எங்க அப்பா இன்னைக்கும் மளிகைக்கடைதான் வெச்சிருக்கார். நான் காலேஜ் படிச்சிட்டிருக்கிறப்பெல்லாம் கிராமத்துல என்னை மளிகைக்கடைக்காரர் பொண்ணு’ன்னுதான் கூப்பிடுவாங்க.

இந்த சீரியல்ல கமிட் ஆன புதுசுல நான் ஊருக்குப் போனப்ப, கிராமத்துல எல்லாருக்கும் பதில் சொல்ல முடியல. அதெப்படி மளிகைக்கடைக்காரக் குடும்பத்துக்கே மருமகளாகப் போயிருக்கறீங்க’ன்னு கேட்டு என்னையே வெட்கப்பட வெச்சிட்டாங்க. சீரியல்ல கமிட் ஆன அந்த செகண்ட் எனக்கேகூட‌ ஆச்சர்யம்தான். ‘எப்படி இப்படி’ன்னு நானே என்னைக் கேட்டுட்டு இருந்தேன்.

அதேநேரம், மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் இருந்தது. இப்பவும் ஊருக்குப் போனா, கடையில கல்லாவுல மட்டும் உட்கார மாட்டேன். பொருள் எடுத்து வெயிட் போட்டுத் தர்றது, கடைக்கு வர்றவங்ககிட்ட சிரிச்ச முகமாப் பேசறதுன்னு எல்லாம் எனக்கு அத்துப்படி. அதனால டைரக்டர்கிட்ட டேக் வாங்காம தப்பிச்சிடலாம்னு எனக்கு நானே நினைச்சுப் பார்த்து சிரிச்சுக்கிட்டேன்’’ என்கிறார்.

ஹேமா சதீஷ்
ஹேமா சதீஷ்

``சரி, அடுத்த ஆச்சர்யம்?’’

‘`சீரியல்ல எப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் கூட்டுக்குடும்பமா இருக்கோ, அதே மாதிரி ரியல் லைஃப்ல என் கணவர் குடும்பம் கூட்டுக்குடும்பம்தான்” என்றவரிடம் “எட்டு மாத கர்ப்பிணி, அதிலும் கொரோனா இன்னும் முடிவடையாத நிலையில் ஷூட்டிங் போயிட்டு வர்றீங்களே?” என்றேன்.

ஹேமா சதீஷ்
ஹேமா சதீஷ்

“எங்க யூனிட்டைப் பொறுத்தவரை நிஜமாவே ஒரு குடும்ப ஃபீலிங்தான். அதுலயும் இப்ப நான் மாசமா இருக்கேங்கிறதால சக ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே என்னை அப்படிப் பார்த்துக்கிடுறாங்க. என்னைவிட மத்தவங்கதான் என் மேல ரொம்ப அக்கறையோடு இருக்காங்கன்னா பாருங்க. சுஜிதா, சித்ரா மட்டுமல்ல, ஸ்டாலின் சார், எனக்கு ஜோடியா நடிக்கிற வெங்கட், கொழுந்தனா நடிக்கிற குமரன் எல்லாருமே என் ஹெல்த் மேல அக்கறையோடு இருக்காங்க. ஷாட் இல்லைன்னா போய் படுத்துக்கச் சொல்றாங்க. வீட்டுல இருக்கிற மாதிரியே ஷூட்டிங் ஸ்பாட்லயுமே கம்ஃபர்ட்டபிளாவே ஃபீல் பண்ணுறேன்.’’

ஹேமா சதீஷ்
ஹேமா சதீஷ்

“சினிமாக் கனவு?”

‘`நியூஸ் ரீடரா என்னுடைய கரியரைத் தொடங்கினேன். பிறகு சினிமா வாய்ப்புகளும் வந்திச்சு. ‘பாயும்புலி’ என்னுடைய முதல் படம். அடுத்தும் படங்கள் பண்ணினேன். ஆனா சில படங்கள் ரிலீஸ் ஆச்சு; பல படங்கள் ரிலீஸ் ஆகலை. சர்வைவ் பண்ணணுமில்லையா? அதனால சீரியலான்னு யோசிச்சிட்டிருக்க முடியுமா? முதல்ல ‘ஆபீஸ்’ சீரியல்ல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். இப்ப இந்த சீரியல்ல எனக்குப் பிடிச்ச வெடுக் வெடுக்னு பேசற ஒரு குறும்புத்தனமான கேரக்டர். என்னைப் பொறுத்தவரைக்கும் இப்போதைய ஆசை, என் புள்ளயைப் பெத்தெடுக்கிறப்ப இந்தக் கொரோனா இந்த உலகத்தை விட்டே போயிருக்கணும்கிறதுதான். அது நடக்க நீங்களும் வேண்டிக்கங்களேன்’’ என்கிறார்.