கட்டுரைகள்
Published:Updated:

“சீரியலில் அந்த ரோல் தாங்களேன் ப்ளீஸ்!”

ஆல்யா மானசா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல்யா மானசா

`ராஜா ராணி-2’ல் ‘செம்பா’வுக்கு அப்படியே நேரெதிரா வர்றேன். கேரக்டர் பேரு சந்தியா. ஐ.பி.எஸ் ஆக ஆசைப்படற மிடில் கிளாஸ் பொண்ணு. ஆனா டக்னு கல்யாணம் நடந்திடுது.

சென்னை வளசரவாக்கத்திலுள்ள ‘தேனார்’ ஷூட்டிங் ஹவுஸ். அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிற ‘ராஜா ராணி’ சீசன் 2-ன் ஷூட்டிங்கில் இருந்தார் ஆல்யா மானசா.

`பாம்பே போதும்... பாட்ஷா போதும்ங்கிற மாதிரி, ‘செம்பா’ போதும்... சேலை போதும்னு கிளம்பிட்டீங்க போல.

‘`ஆமாங்க. `ராஜா ராணி-2’ல் ‘செம்பா’வுக்கு அப்படியே நேரெதிரா வர்றேன். கேரக்டர் பேரு சந்தியா. ஐ.பி.எஸ் ஆக ஆசைப்படற மிடில் கிளாஸ் பொண்ணு. ஆனா டக்னு கல்யாணம் நடந்திடுது. அந்தக் கல்யாணத்துலயே முதல் ஏமாற்றம். தொடர்ந்து கணவர் வீட்டுக்குள் இருந்தபடி தன்னுடைய கனவான போலீஸ் அதிகாரியா ஆக முடிஞ்சதா இல்லையான்னுதான் போகும் கதை. போலீஸ் வேலைக்கு ஆசைப்படறதால துணிச்சல் கூடவே இருக்கும். காஸ்ட்யூம்லயே அந்த `சேஞ்சை’ப் பார்க்கலாம். முதல் சீசன்ல எப்பவும் சேலையிலேயேதான் இருப்பேன். இதுல சுடிதார். இவ்ளோ நாளா ‘செம்பா’வா என்னைப் பார்த்திருந்த எங்க யூனிட்டே ‘செம்பாவா இது’னுன் ஆச்சர்யப்படறாங்க. சீரியல் ரசிகர்களுக்கும் இந்த ஆச்சர்யம் நிச்சயம் இருக்கும்’’ என்று உற்சாகமாகிறார்.

“சீரியலில் அந்த ரோல் தாங்களேன் ப்ளீஸ்!”

“எப்படி இருக்காங்க உங்க வீட்டு `குட்டி’ராணி அய்லா? சேட்டையா சமத்தா? அம்மா சாயலா, அப்பா சாயலா? யார்கிட்ட ஒட்டிக்கிறாங்க?”

“சூப்பரா இருக்காங்க. இப்பதான் வீடியோ கால்ல பார்த்துப் பேசிட்டு வந்தேன். சாயல்னு பார்த்தா, எனக்கு இருக்கிற மாதிரி பெரிய மூக்கு கிடையாது. அவ அப்பா மாதிரி சப்பை மூக்குதான். அப்புறம், பொண்ணுங்க எப்பவுமே அப்பா கிட்டதானே ஒட்டிக்கு வாங்க. அதேதான் இங்கயும் நடக்குது. சேட்டை கொஞ்சம் இருக்கு. ஆனா சமத்தும் கூட. ஒருநாள் சஞ்சீவ் தூங்கிட்டிருந்த நேரம் நானா குளிக்க வச்சுப் பாக்கலாம்னு தூக்கிட்டுப் போயிட்டேன். சோப்பு போடறப்ப வழுக்கி பாத் டப்ல விழுந்துட்டா. எங்க அழுது காட்டிக் கொடுத்துடப் போறாளோன்னு பயந்துட்டேன். என்னுடைய பயத்தைப் புரிஞ்சுகிட்டாளோ என்னவோ, உதடு நெளிஞ்சதே தவிர அழுகை வரவேயில்லையே.

“அய்லா பிறந்து ஆறு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள ஷூட் வந்துட்டீங்களே..?”

“ஆமா, வருத்தமாத்தான் இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி சஞ்சீவ் ஷூட் கிளம்பினார். அப்பவும் ரெண்டு நாள் அவரை ரொம்பவே தேடினா. இப்ப நானும் ஷூட்டிங் வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நாள் அவளோட இருந்துட்டு வரலாம்தான். ஆனா கரியர்ல வர்ற வாய்ப்பு முக்கியமில்லையா? காலையில நாங்க ஷூட் கிளம்பறப்ப தூங்கி எழுந்திருக்கவே மாட்டா. நைட் சில நாள்கள் நாங்க போறதுக்குள்ள மேடம் தூங்கிடுவாங்க. அதனால நாங்க ரெண்டு பேருமே டைம் வச்சு பிரேக்லதான் வீடியோ கால்ல பேசிட்டிருக்கோம். ஈவ்னிங் வீட்டுக்குப் போனதும் அப்படியே தூக்கிக் கொஞ்சலாம்னாக் கூட, கொரோனா பீதி வேற. கஷ்டமாத்தான் இருக்கு. ரொம்பவே மிஸ் பண்ணுறோம். ஆனா அவளோ, பாட்டி, அத்தைகூட ஜாலியா இருக்கா.’’

``போலீஸ் கேரக்டருக்கு ஃபிட்டா இருக்கணும்னு ஒர்க் அவுட் பண்ணுனீங்கன்னு கேள்விப்பட்டோம்...’’

‘`குழந்தை பிறந்தா உடல் ரீதியா சேஞ்ச் இருக்கும்தானே. நானும் வெயிட் போட்டிருந்தேன். ஆனா சீசன் 2 நீங்கதான் பண்ணுறீங்கன்னு சொன்னதுமே மனசளவுல நடிக்கத் தயாராகிட்டேன். அதனால சின்னச் சின்ன எக்சர்சைஸ் செஞ்சேன். கொஞ்ச நாளில் போலீஸ் கேரக்டர்னு சொன்னதும் வெயிட்டைக் குறைச்சே ஆக வேண்டிய நிர்பந்தம். ஜிம் போகலாம்னா லாக்டௌனால ஜிம் இல்லை. அதனால எங்க வீட்டு கார் பார்க்கிங்கையே ஜிம் ஆக்கி ஒர்க் அவுட் பண்ணினேன். ஒரே மாசத்துல பத்து கிலோ குறைச்சேன்.’’

``சீரியல்ல போலீஸ் ஆக ஆசைப்படறது இருக்கட்டும், ரியல் லைப்ல என்னவாக ஆசைப்பட்டீங்க?’’

``தூதரகத்தில் ஆபீசரா வேலை பார்க்கணும்கிறதுதான் என்னுடைய ஆசையா இருந்தது. காலேஜ்ல சேர்ற வரைக்குமே அதுதான் லட்சியமா இருந்தது. பிறகு எப்படி எப்ப ரூட் மாறுச்சுன்னு தெரியலை. ஏதாவது ஒரு சீரியல்லயாச்சும் அந்தக் கேரக்டரைத் தந்தாங்கன்னா ஜஸ்ட், ரீல் லைப்லயாச்சும் அந்த ஆசை நிறைவேறும்.’’