Published:Updated:

விகடன் TV: “எனக்காக தினமும் சப்பாத்தி எடுத்துட்டு வர்றார் மனோபாலா!”

ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
ஷபானா

திரும்பத் திரும்ப என்னை மேடையேத்தி மகிழ வைக்கிற தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ?’’

விகடன் TV: “எனக்காக தினமும் சப்பாத்தி எடுத்துட்டு வர்றார் மனோபாலா!”

திரும்பத் திரும்ப என்னை மேடையேத்தி மகிழ வைக்கிற தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ?’’

Published:Updated:
ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
ஷபானா

“45 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக... மக்கள் ஆதரவுடன்... உங்கள் ஷபானா... இல்லல்ல, பார்வதி...’ன்னு ஸ்டேஜ்ல அறிவிக்கப்பட்ட அந்த நிமிஷம் எனக்கு சந்தோஷத்துல வார்த்தைகளே வரல, கண்ணுல நீர் முட்டுது. திரும்பத் திரும்ப என்னை மேடையேத்தி மகிழ வைக்கிற தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ?’’ -‘ஜீ தமிழ் குடும்ப விருது’களில் `சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஜோடி’க்கான விருது பெற மறுபடியும் மேடை ஏறிய தருணத்தை விவரித்த ‘செம்பருத்தி’ ஷபானாவிடம் வாழ்த்து சொல்லி, கேள்விகளை வைத்தேன்.

விகடன் TV: “எனக்காக தினமும் சப்பாத்தி எடுத்துட்டு வர்றார் மனோபாலா!”

`` ‘செம்பருத்தி’ கமிட் ஆன சமயத்துல சீரியல் இந்த அளவு ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?’’

“நிச்சயமா இல்லை. ஷபானான்னா யாருக்கும் தெரியாதவளா இருந்தேன். முதன்முதலா சீரியலுக்குக் கேட்டப்ப, முன்னணி சேனல்; பிரைம் டைம்கிற சந்தோஷத்துல சம்மதிச்சிட்டாலும் பயமா இருந்தது. ஏன்னா அன்னைக்கு எனக்கு தமிழ் சுத்தமாப் பேச வராது. ‘வாய்ப்பை மிஸ் பண்ணக் கூடாது; போற வரைக்கும் போகட்டும்’கிற சின்ன சஞ்சலத்தோடயே வந்தேன். அதேபோல ஆரம்பத்துல டயலாக் பேசறப்ப ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனா இன்னைக்கு மூணு வருஷம் கடந்துட்ட பிறகு நிலைமை நேரெதிர். தமிழும் எனக்கு நல்லாப் பேச எழுத வருது. தமிழ்நாட்டு மக்கள் மனசுக்குள்ளயும் நான் இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா எனக்குக் கிடைச்ச பேர் புகழ், வாழ்க்கை எல்லாமே `செம்பருத்தி’யினாலதான்.’’

விகடன் TV: “எனக்காக தினமும் சப்பாத்தி எடுத்துட்டு வர்றார் மனோபாலா!”

``சரி, விருது வாங்கின அந்த நிகழ்வை மூணு நாள் ஒரே வீட்டுல தங்கியிருந்து... இன்னொரு சேனலோட ஷோவைக் காப்பியடிச்சு நடத்தினதை யாரும் கலாய்க்கலயா?’’

“நான் ஒருநாள்கூட அங்க தங்கலை. காலையில போனேன். தரப்பட்ட ரெண்டு டாஸ்க்கை முடிச்சுட்டு ஓடி வந்துட்டேன். ஸோ, நெக்ஸ்ட் கொஸ்டீன் போயிடலாமா?”

‘`ஒவ்வொரு வருஷமும் அதே சீரியல் விருது வாங்கறதை சேனல்ல ஒளிபரப்பாகிற மத்த சீரியல் யூனிட்ல எப்படிப் பார்க்கிறாங்க?’’

“மறுபடியும் வம்பு வளர்க்கிற கேள்வியால்ல இருக்கு? எங்க சேனலைப் பொறுத்தவரை `உனக்கு நிச்சயம் விருது இருக்கு ஷபு’ன்னு மத்த யூனிட்காரங்கதான் என்னைவிட அதிகமா நம்பினாங்க. அதனால சண்டை மூட்டுகிற வேலையெல்லாம் இங்க வேண்டாம்.”

விகடன் TV: “எனக்காக தினமும் சப்பாத்தி எடுத்துட்டு வர்றார் மனோபாலா!”

``ஓகே. லாக் டௌன்ல என்ன செய்தீங்க?’’

‘`தமிழ்ப்படங்கள் கொஞ்சம் பார்த்தேன். சில மோட்டிவேஷனல் புத்தகங்களைப் படிச்சேன். அப்புறம் நானொரு சாப்பாட்டுப் பிரியைங்கிறதால விதவிதமா சமைச்சுச் சாப்பிட்டேன். மேஜரா நடந்தது அந்த வேலைதான். புதுசா கேக் செய்யக் கத்துக்கிட்டேன்.”

`‘திடீர்னு மனோபாலா உங்க சீரியல்ல சேர்ந்திருக்காரே, அவருடன் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?’’

“உண்மையிலேயே நான் எதிர்பார்க்காத இன்னொரு சந்தோஷம் அது. இயக்குநர், சீனியர் நடிகர். ஸ்பாட்டைக் கலகலன்னு வச்சிருக்கிறதால சீரியலுக்குள் அவர் வந்ததுல எல்லாருக்குமே ஹேப்பி. பிரேக் டைம் மட்டுமல்ல எல்லா நேரமுமே எல்லாரையும் நல்லா என்டர்டெய்ன் பண்றார்.

‘பார்வதி உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு’ என் வீட்டுல இருந்து சமைச்சு எடுத்துட்டு வர்றேன்னு கேட்டு சமைச்சு எடுத்துட்டு வர்றார். தினமும் சப்பாத்தி செஞ்சு எடுத்துட்டு வர்றார். அதுக்கு விதவிதமான குருமா செஞ்சிருப்பார் பாருங்க, அவ்ளோ டேஸ்டா இருக்கு. சமையல் அவருக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்கிறதால அவர் வீட்டுலயும் அவரேதான் சமைப்பாராம்.

‘உனக்கு சமையல் வருமா?’ன்னு கேட்டார். `நல்லா சாப்பிடுவேன்’னு சொன்னேன். `உன்னுடைய புருஷன் சமைக்கத் தெரிஞ்சவனா இருக்கணும்; அப்பத்தான் வாழ்க்கை சந்தோஷமாப் போகும். இல்லாட்டி பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும்’னு ‘கஜினி’ டயலாக்கை நினைவுட்டி எச்சரிக்கை வேற செஞ்சிருக்கார்.”

``கார்த்திக்-ஷபானா ஜோடியை தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்குது. ஷபானாவுக்குப் பிடிச்ச சீரியல் ஜோடி?’’

`` `திருமணம்’ சீரியல் சித்து-ஸ்ரேயா ஜோடியை ரொம்பவே க்யூட்டான ஜோடியாப் பார்க்குறேன். டைம் கிடைக்கிறப்ப அவங்க ரெண்டு பேருக்காகவுமே அந்த சீரியலைப் பார்க்கிறேன்.”

``அந்த ஜோடி ரியலாகவும் லவ் பண்ணுறாங்கன்னு சீரியல் ஏரியாவுல டாக் ஓடுதே... உங்க காதுக்கு வந்துச்சா?’’

“அது சரி, என்ன பதில் சொன்னாலும் அடுத்து, அதுகிடக்கட்டும், உங்க மேட்டருக்கு வாங்கன்னு கேப்பீங்கதானே, இந்த ஆட்டத்துக்கெல்லாம் நான் வரவே மாட்டேன். பேட்டியை முடிச்சுக்குவோமா?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism