Published:Updated:

காந்தக்குரலுக்குச் சொந்தக்காரர்; செய்திகளைச் சுவாரஸ்யமாக்கிய மனிதர் - ஷம்மி என்கிற சண்முகம் மரணம்!

ஷம்மி என்கிற சண்முகம்

சன் செய்திகளில் ‘சிறப்புப் பார்வை’ எனத் தனித் தொகுப்பாக வரும் செய்திகளில் பின்னணிக் குரல் இவருடையதுதான். இவரது குரலுக்காகவே செய்தி பார்த்தவர்களெல்லாம் உண்டு.

நியூஸ் 7 தமிழ் சேனலின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவரும் ஆரம்பக் காலத்தில் சன் டிவியில் பணியாற்றியவருமான மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்கிற சண்முகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

பலரது குரல்கள் நம் செவிகளின் வழியே கடந்து செல்லும். ஆனால் வெகுசில குரல்கள் செவிகளில் புகுந்து மனதில் அழுந்தப் பதிந்து விடும். அப்படியான ஒரு காந்தக்குரலுக்குச் சொந்தக்காரர் சண்முகம். இயக்குநர் கங்கை அமரன் சிபாரிசின் மூலம் சன் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர், தன் தனித்தன்மை மிக்க குரலால் அங்கு முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்தார்.

சன் செய்திகளில் ‘சிறப்புப் பார்வை’ எனத் தனித் தொகுப்பாக வரும் செய்திகளில் பின்னணிக் குரல் இவருடையதுதான். இவரது குரலுக்காகவே செய்தி பார்த்தவர்களெல்லாம் உண்டு.

சண்முகம்
சண்முகம்

சன் டிவியிலிருந்து வெளியேறிய பிறகு நியூஸ் 7 தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணிபுரிந்து வந்தார். அங்கு ‘பேசும் தலைமை’, 'பீனிக்ஸ் மனிதர்கள்' ஆகிய வெற்றிகரமான நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்தவர்.

ஊடகப் பணி தாண்டி விளம்பரப் படங்கள், மற்றும் சினிமா இயக்கம் எனப் பல முயற்சிகளில் இருந்தவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் போகச் சிகிச்சை எடுத்து வந்தார். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (10/9/22) மாலை காலமானார். இவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார், ஊடகவியலாளர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.