Published:Updated:

ரீ- என்ட்ரி கொடுத்த லதா ராவ்; வேறு ஒரு தொடரில் கமிட் ஆனதுதான் ஹாசினி விலகியதற்கான காரணமா?!

ஹாசினி - லதா ராவ்

சித்ராவாக நடித்துக் கொண்டிருந்த ஹாசினி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தவமாய் தவமிருந்து' என்கிற புதிய தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார் என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்!

ரீ- என்ட்ரி கொடுத்த லதா ராவ்; வேறு ஒரு தொடரில் கமிட் ஆனதுதான் ஹாசினி விலகியதற்கான காரணமா?!

சித்ராவாக நடித்துக் கொண்டிருந்த ஹாசினி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தவமாய் தவமிருந்து' என்கிற புதிய தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார் என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்!

Published:Updated:
ஹாசினி - லதா ராவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `பாவம் கணேசன்'. இந்தத் தொடரில் சித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹாசினி @ விலாசினி அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக சில வருடங்களாகத் தமிழ் சீரியலில் பிரேக் எடுத்திருந்த லதா ராவ் நடிக்கிறார்.

ஹாசினி - லதா ராவ்
ஹாசினி - லதா ராவ்

`பாவம் கணேசன்' தொடரில் கதாநாயகனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் லதா ராவ் நடிக்கிறார். ராஜ்கமல் - லதா ராவ் என்றால் தான் பலருக்கும் சட்டென இவர் முகம் நினைவிற்கு வருமளவிற்கு இவரும், இவரின் கணவரும் பிரபலம். தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் குட்டி பிரேக் எடுத்திருந்தார். தற்போது மீண்டும் அவர் சின்னத்திரையில் என்ட்ரியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தொடரின் நாயகன் நவீனும், லதா ராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ரீல்ஸை நவீன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லதா ராவ் புதிய சித்ராவாக நடிக்கிறார் என்கிற தகவலை கூறியிருந்தார். அவருடைய கம்பேக்கிற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ராஜ்கமல் - லதா ராவ்
ராஜ்கமல் - லதா ராவ்

சித்ராவாக நடித்துக் கொண்டிருந்த ஹாசினி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தவமாய் தவமிருந்து' என்கிற புதிய தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார் என சமூகவலைதள பக்கங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். என்ன காரணம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிய பிரேக்குக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கும் லதா ராவிடம் பேசினோம்,

"பத்து வருஷம் கழிச்சு நடிக்கிறேன். அதுவே ரொம்ப எக்ஸைட்டிங் ஆக இருக்கு. பலரும் எப்ப நடிப்பீங்கன்னு என்கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க. இப்பதான் அதற்கான சூழல் அமைஞ்சது. நான் நடிக்கலாம்னு முடிவெடுத்தப்ப சரியா இந்த வாய்ப்பு கிடைச்சது. இதுவரை நெகட்டிவ் ரோலில்தான் அதிகமா நடிச்சிருக்கேன். அந்த ரோல் என்னை விட்டுப்போகாதுபோல, இப்பவும் நெகட்டிவ் ரோலில்தான் நடிக்கிறேன். நெகட்டிவ்ல தான் நம்ம திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதால் நானும் ஓகே சொல்லிட்டேன். நமக்கு கார் ஓட்டத் தெரியும் கொஞ்ச வருஷமா கார் ஓட்டாம மறுபடி காரை எடுத்தா நமக்கு ஓட்டத் தெரியாதா என்ன? அதுமாதிரித்தான்! நடிக்கிறது நமக்கு புதுசு இல்ல. ஆனா இங்க நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. இந்த டீம்ல இருக்கிற பலர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவங்க என்பதால ஈஸியா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். பரீட்சை எழுதிட்டு ரிசல்ட்டிற்கு காத்திருக்கிற மாதிரி இந்தக் கேரக்டர் ரீச் ஆகணும் என்கிற எண்ணம் நிச்சயம் இருக்கு. தொடர்ந்து சீரியல்களில் இனி என்னை பார்க்கலாம்!" என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism