Published:Updated:

``ஃபாத்திமா பரதம் ஆடியதைப் பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டேன்!’’ - நெகிழும் கணவர் பாபு

கணவர் பாபுவுடன் ஃபாத்திமா
கணவர் பாபுவுடன் ஃபாத்திமா

``அவ என்கிட்ட என்ன கேட்டாலும் நோ சொல்ல மாட்டேன். என்ன, அடிக்கடி கால் வலிக்குதுப்பான்னு சொல்வா. இப்போ டான்ஸ் ஆடினா வலி அதிகமாகுமேங்கிற கவலைதான் எனக்கு.’’ என்கிறார் பாபு.

அடர் நிறத்திலான பரதநாட்டிய உடையில் இன்னும் அழகாகத் தெரிகிறார் ஃபாத்திமா பாபு. அவருடைய முகநூலில் இருந்த பரதநாட்டியப் புகைப்படங்களைப் பற்றிக் கேட்டவுடன், ``அதுவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுத்த போட்டோஸ். ஆனா, எனக்கு உண்மையிலே நல்லா பரதநாட்டியம் தெரியும்’’ என்று சிரித்தவரிடம், `அப்படியா’ என்றோம்.

ஃபாத்திமா பாபு
ஃபாத்திமா பாபு

``நான் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறப்போ என்னை டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க அம்மா. ஆனா, எனக்கு டான்ஸ் கொஞ்சம்கூட பிடிக்காது. தய்யா தய்யான்னு ஒரே ஸ்டெப்பை போடணுமேன்னு ரொம்ப போரடிக்கும். எப்படியாவது டான்ஸ் கிளாஸ்க்கு மட்டம் போட்டுடணும்னு நினைக்கிற என்னை தினமும் கட்டாயப்படுத்தித்தான் அனுப்புவாங்க. இப்படியே நாலாம் வகுப்பு வரைக்கும் டான்ஸ் கிளாஸ் போனேன்.

என் ஸ்கூல்ல தமிழ் டிராமானாலே `கூப்பிடு ஃபாத்திமாவை’ன்னு சொல்லிடுவாங்க. நான் நாலாவது படிச்சிட்டிருந்தப்போ `கண்ணகி’ நாடகம் போடச் சொன்னாங்க. அதுல நான்தான் கண்ணகி, நான்தான் டைரக்டர். நான்தான் யார் யாருக்கு என்னென்ன ரோல்னு பிரிச்சுக் கொடுப்பேன். கண்ணகி கேரக்டருக்கு கட்டறதுக்கு எங்கம்மாகிட்ட கறுப்பு கலர் புடவையில்லைங்கிறதால, அவங்க ஃபிரெண்ட் ஒருத்தங்கிட்ட கறுப்பு கலர் புடவை வாங்கித் தந்தாங்க. இதையெல்லாம், ஏன் சொல்றேன்னா, என்னை ஸ்டேஜ்ல ஏத்த அந்தளவுக்கு என்கரேஜ் செய்வாங்க என் அம்மா.

கல்லூரி நாள்களில்
கல்லூரி நாள்களில்

ஒரு தடவை, ஸ்கூல்ல பெரிய கிளாஸ் படிக்கிற அக்காங்க புரோகிராம்ல ஆடுறதுக்காக ஆடிட்டோரியம் ஸ்டேஜ்ல பரதநாட்டியம் பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தாங்க. அவங்க போட்ட ஸ்டெப்பை நான் கீழே நின்னுட்டு போட்டுட்டிருந்தேன். அதை டீச்சர்ஸ் பார்த்துட்டாங்க. அதுக்கப்புறம் என் ஸ்கூல்ல பரதநாட்டியம்னாலே ஃபாத்திமான்னு சொல்லுவாங்க. நான் ஃபோக் டான்ஸும் ஆடுவேன்.

புதுச்சேரி பாரதிதாசன் காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்போ, `கலாஷேத்ரா’ ருக்மணி அருண்டேல்கிட்ட பரதம் கத்துக்கிட்ட ஜெயஸ்ரீ நாராயணன்கிட்ட பரதம் கத்துக்கிறியா’ன்னு அம்மா கேட்டாங்க. ஸ்கூல் நாள்கள்ல என் டான்ஸை எல்லாரும் பாராட்டினதால இப்போ எனக்கு பரத நாட்டியம் பிடிச்ச விஷயமா மாறியிருந்துச்சு. அதனால, சரின்னு சொன்னேன். எனக்கு ஏற்கெனவே பரதம் தெரியும்கிறதால, தனி கவனம் கொடுத்து சொல்லிக்கொடுத்தாங்க ஜெயஸ்ரீ மேம். அப்புறமென்ன, காலேஜ்லேயும் ஸ்டேஜ் புரோகிராம்னாலே என் பரதநாட்டியம் இருக்கும்னு ஆயிடுச்சு. இன்டர்காலேஜ் போட்டியிலேயும் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.

ஃபாத்திமா பாபு
ஃபாத்திமா பாபு
மீண்டும் பிக்பாஸ் ஜூலி டு `ஆங்ரி பேர்ட்' பாலா... என்ன நிகழ்ச்சி, நடுவர்கள் யார்? #VikatanExclusive

காலேஜ் முடிச்சதும் டான்ஸ் ஆடுறதுக்கு வாய்ப்பே இல்லாம ஆயிடுச்சு. செய்தி வாசிப்பு, நடிப்பைவிட டான்ஸ்தான் என் ரத்தத்துல ஊறியிருக்கு தெரியுமா’’ என்றவரிடம், `எப்போ அரங்கேற்றம்’ என்றோம்.

``நான் முப்பதுகள்ல இருக்கிறப்போ, `சிவசங்கரி மேடத்தைப் பாரு. `50 வயசுக்கு மேலதான் அரங்கேற்றமே செஞ்சாங்க’ அப்படின்னாங்க எங்க அம்மா. அப்போ குடும்பம், குழந்தை, வேலைன்னு ஓடிட்டு இருந்ததால அவங்க சொன்னதை பெருசா எடுத்துக்கலை. இப்போ ஒரு சேனல்ல, டான்ஸ் புரோகிராம்னு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன்.

பாபு, என்னோட டான்ஸை பார்த்துட்டு `அய்யோ, உன்னை நான் என்கரேஜ் செஞ்சிருக்கணும். விட்டுட்டேன்’னு வருத்தப்பட்டார். `அப்படியா’னு நிமிர்ந்து பார்த்தேன். `அதுக்காக இப்போ டான்ஸ் பண்ணப் போறேன்னு குதிக்கக் கூடாது’ன்னு சிரிச்சார்’’ என்றவரிடம் பேட்டியை முடித்துக்கொண்டு, அவருடைய பாபுவிடம் பேசினோம்.

``எந்த அரசையும் விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கு" - மிரட்டலுக்கு அசராத நடிகர் சித்தார்த்

``அவளுக்குப் பரதநாட்டியம் தெரியும்கிறது எனக்குத் தெரியும். அரங்கேற்றம் பண்ணாம விட்டுட்டாங்கிறதும் தெரியும். அதுக்கப்புறம் வாழ்கையோட ஓட்டத்துல அதெல்லாமே மறந்துபோச்சு. சமீபத்துல `ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்றேன். பார்க்கிறியா பாபு’ன்னா. பார்த்தேன். சந்தோஷத்துல நிஜமாவே என் கண்கள் கலங்கிடுச்சு. அய்யோ, இந்தத் திறமையை வெளிய கொண்டு வராம விட்டுட்டோமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன். அவ என்கிட்ட என்ன கேட்டாலும் நோ சொல்ல மாட்டேன். என்ன, அடிக்கடி கால் வலிக்குதுப்பான்னு சொல்வா. இப்போ டான்ஸ் ஆடினா வலி அதிகமாகுமேங்கிற கவலைதான் எனக்கு. கொஞ்சம் வெயிட் குறைய வெச்சுட்டா, ஃபிட்டாகிடுவா. 60 வயசுலகூட அரங்கேற்றம் பண்ணலாமே’’ என்கிறார் மனைவி மீதான மிகுந்த வாஞ்சையுடன்.

அடுத்த கட்டுரைக்கு