Published:Updated:

``நான் எடுத்த முடிவு என்னுடைய டீமையும் பாதிச்சிடுச்சு!"  - ஃபைனலி பாரத் ஓபன் டாக்

`பொதுவா எந்தத் துறையா இருந்தாலும் அதுல ஒரு போட்டி இருக்கும். ஆனா, யூ டியூப் சேனல்களுக்கு இடையே அப்படி எதுவுமே இல்லை. அதுதான் ஏன்னு தெரியலை’

அப்பாவியான ஒரு கேரக்டரை வைத்து யூ டியூப்பில் புதிய டிரெண்ட்களை உருவாக்கிய சேனல் ஃபைனலி. மொத்த டீமும் திறமையானவர்கள்தான் என்றாலும் அதில் பாரத்துக்குக் கொஞ்சம் மவுசு அதிகம். அந்த வெள்ளந்தித்தனம் மாறாமல்தான் நிஜத்திலும் பேசுகிறார். ஒரு டிவி நிகழ்ச்சிக்காக தயாராகிக்கொண்டிருந்தவரை சின்ன இடைவேளையின்போது சந்தித்துப் பேசினேன்.

`` `திண்ணையில படுத்திருந்தவனுக்குத் திடுக்குன்னு ஒரு வாழ்க்கை வந்துச்சு'னு சொல்வாங்க. அப்படித்தான் என்னுடைய வாழ்க்கையும். 7 யூ டியூப் ஆரம்பிச்சு எல்லாமே ஃப்ளாப் ஆகிடுச்சு. எட்டாவதா ஆரம்பிச்ச ஃபைனலிதான் ஹிட்டாச்சு. இதுவும் ஃப்ளாப்தான்னு நினைச்சோம். ஆனா, எதிர்பார்க்காத அளவுக்கு ஹிட்டாகிடுச்சு."

ஃபைனலி டீம்
ஃபைனலி டீம்

``அப்பாவியான ஒரு பையன். அவனைச் சுத்தி நடக்குற விஷயங்கள். இதுதான் எங்க சேனலுடைய கான்செப்ட். என்னுடைய கேரக்டரை இயக்குநர் நிரஞ்சன்தான் டிசைன் பண்ணார். அப்புறம் என்னுடைய ரிங் டோனும் ஃபேமஸாச்சு. அந்த ஐடியா பாலா கொடுத்ததுதான். டக்குனு பெயர், புகழ்லாம் கிடைச்சதும் அதைக் காப்பாத்திக்கணும்னு ஓட ஆரம்பிச்சோம். நானும் அந்த ஓட்டத்துல இருக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிறதால எதுலேயும் கவனம் செலுத்த நேரம் இல்லை."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``திடீர்னு கிடைச்ச இந்தப் பெயரைத் தக்க வெச்சுக்க, கூப்பிடுற இடத்துல எல்லாம் போய் நடிச்சுக் கொடுத்தேன். நிறைய வாய்ப்புகள் வந்ததால அதை எப்படி ஹேண்டில் பண்றதுனு தெரியாம திணறினேன். ஒரு கட்டத்துல வீடியோக்கள் பண்ண முடியாத நிலை உருவாகிடுச்சு."

பாரத்
பாரத்

``நான் எடுத்த சில முடிவுகள் என்னுடைய டீமையும் பாதிச்சிடுச்சு. அதக்கப்புறம் என்னால ஏற்பட்ட பிரச்னைகளை நானே சரி பண்ணேன். என்கூட வொர்க் பண்ற மத்தவங்களும் ஃபேமஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காத்தான் நிறைய வீடியோக்கள்ல நான் நடிக்கிறதில்லை. அவங்களும் ரொம்பத் திறமையானவங்கதான். அதனால, எங்களுக்குள்ள ரொம்ப ஆரோக்கியமான போட்டிதான் நிலவுது."

``முழுக்க முழுக்க இப்போ எங்க டீம் சார்ந்துதான் செயல்படுறேன். தரமான வீடியோக்கள் கொடுக்கணும்னுதான் சமூக வலைதளங்கள்ல நேரம் செலவிடுறதில்லை. தவிர, ஃபேஸ்புக், இன்ஸ்டாவுல ஆர்வமும் கிடையாது. என்னை வெச்சு மீம்ஸ் போடுறாங்கனு ஃப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க. ஆனா, இதுவரைக்கும் நானா ஒரு மீம்கூட பார்த்தது இல்லை."

பாரத்
பாரத்

``என் நண்பர்கள் என்னுடைய ரியாக்‌ஷன்களை வெச்சு, வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பண்ணலாம்னு பேசிக்கிறதைக் கேட்கும்போது, நாம அந்தளவுக்கு பிரபலமானு தோணும்."

`` `உனக்கு அப்புறம் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சவங்க, நடிச்சவங்க எல்லாம் இன்ஸ்டாவுல ஃபேமஸாகிட்டாங்க. நீ ஏன் இப்படி இருக்க’னு நண்பர்கள் திட்டுவாங்க. அட்வைஸ் பண்ணுவாங்க. இனிமே ஆக்டிவா இருக்க முயற்சி பண்ணணும்."

பாரத்
பாரத்

``என் வீட்ல அம்மா மட்டும்தான். அப்பா கிடையாது. அவங்களுக்கு நான் என்ன பண்றேன்னு தெரியாது. ஃபைனலி வீடியோக்களைக் காட்டும்போது, `ஏன் எல்லாக் கேள்விக்கும் தப்புத் தப்பா பதில் சொல்ற. அவங்க கேட்குறது உனக்கு புரியவே இல்லையா. அப்படியே உன் அப்பா மாதிரியே இருக்கியே’னு சீரியஸா ரியாக்ட் பண்ணுவாங்க."

``சமீபத்துல ஒரு டி.வி நிகழ்ச்சியில என்னைப் பார்த்துட்டு அம்மா செம ஹேப்பி. `சூப்பர்பா. இப்படியே சன் டிவி, விஜய் டிவியில நடிச்சு பெரியாளா வா'னு பாராட்டினாங்க. ஃபைனலி ஆரம்பிச்சதுல இருந்து பணத்துக்குக் கஷ்டமே இல்லை. வர்ற லாபத்தை எங்களுக்குள்ள ஷேர் பண்ணிக்குவோம்."

யூ டியூபர்ஸ்
யூ டியூபர்ஸ்

``இப்போ ஜீ தமிழ் சேனலுக்காக ஹ்யூமர் தொடர் பண்றோம். எங்ககூட யூ டியூப் பிரபலங்கள் நிறைய பேர் நடிக்கிறாங்க. லைட்டா `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மாதிரி இருக்கும். ஆனா, வித்தியாசமான கான்செப்ட்டை வெச்சு உருவாக்கியிருக்கோம். மத்த யூ டியூபர்ஸோடு சேர்ந்து வொர்க் பண்றது ஜாலியா இருக்கு. அப்படியே மாத்தி மாத்தி நாங்களே கலாய்ச்சிகிட்டு விளையாடிட்டிருப்போம்."

``பொதுவா எந்தத் துறையா இருந்தாலும் அதுல ஒரு போட்டி இருக்கும். ஆனா, யூ டியூப் சேனல்களுக்கு இடையே அப்படி எதுவுமே இல்லை. அதுதான் ஏன்னு தெரியலை. மாத்தி மாத்தி புகழ்ந்துக்குவோம்; ஒண்ணும் மண்ணுமா இருந்துக்குவோம். ஒரு விக்ரமன் படம் மாதிரிதான் நாங்க பழகுறோம். இது என்னைக்கு மாறுமோனு தெரியலை."

பாரத்
பாரத்

``சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆரம்பத்துல வேண்டாம்னு சொன்னேன். நிரஞ்சன் ஸ்க்ரிப்ட்லதான் முதல்ல நடிக்கணும்னு வைராக்கியத்தோட இருந்தேன். அதை வெச்சு ஒண்ணுமே பண்ண முடியாதுனு இப்போ புரிஞ்சிடுச்சு. அதனால இப்போ வர்ற பட வாய்ப்புகளை ஏத்துகிட்டிருக்கேன். அதர்வா படத்துல அவருக்கு நண்பரா நடிச்சிட்டிருக்கேன். மூணு படங்கள்ல லீடு ரோலுக்கான வாய்ப்பு வந்தது. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்போதைக்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லைனு தோணுது. இன்னொரு விதத்துல பயம்னுகூட சொல்லலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா போகலாம், அதுதான் சேஃப். படக்குனு விழுந்தாலும் ரொம்ப வலி தெரியாது" என்றார் பக்குவமாக.

ஆல்யா - சஞ்சீவ் கல்யாணமாகி, அம்மா ஆகப் போறாங்க... ஆனாலும்?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு