Published:Updated:

Exclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்!

ரேட்டிங் அடிப்படையில் நான்கு சீசன்களுமே ஹிட் என்பதால் இந்த சீசனும் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது சேனல். அதேநேரம் ஐபிஎல், போட்டி சேனல்களில் ‘சர்வைவர்’, ‘மாஸ்டர் செஃப்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதால் போட்டியாளர்கள் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்களாம்.

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்குகிறது கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் சீசன் 5.

ரேட்டிங் அடிப்படையில் முதல் நான்கு சீசன்களுமே ஹிட் என்பதால் இந்த சீசனும் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது சேனல். அதேநேரம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், போட்டி சேனல்களில் ‘சர்வைவர்’, ‘மாஸ்டர் செஃப்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவதால் போட்டியாளர்கள் விஷயத்தில் இந்த முறை சற்று கூடுதலான கவனம் செலுத்தியிருக்கிறார்களாம். இதுவரை 20 பேரைத் தேர்வு செய்து வைத்திருக்கிற சேனல் அதிலிருந்து 16 பேரை டிக் செய்ய இருப்பதாகத் தெரிகிறது.

பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என ஏற்கெனவே சிலரது பெயர்களை விகடன் வெளியிட்டிருந்தது. தற்போது அதில் உறுதி செய்யப்பட்ட முதல் 8 பேர்களின் பெயர் பட்டியல் இங்கே!

ஜாக்குலின்

ஜாக்குலின்
ஜாக்குலின்

லயோலாவில் படித்துவிட்டு விஜய் டிவிக்கு வந்த தொகுப்பாளினி. கலகலப்பான இவரது ஆங்கரிங்கிற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆங்கரிங்கில் இருந்தபடியே சினிமாப் பக்கமும் வந்தார். ‘கோலமாவு கோகிலா’ வெள்ளித்திரையில் இவரது முதல் படம். அடுத்து சீரியல் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார். ‘தேன்மொழி பி.ஏ’ தொடர் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதாலேயே தற்போது ‘தேன்மொழி பி.ஏ’ சீரியல் முடிக்கப் பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.

சுனிதா

சுனிதா
சுனிதா

சுனிதாவும் விஜய் டிவியின் முகம்தான். ‘ஜோடி’ நிகழ்ச்சியில் இவரது டான்ஸ் பர்ஃபாமென்ஸுக்கு டிவி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. யுடியூப் சேனல் மற்றும் டான்ஸ் ஸ்டுடியோ என தற்போது பிசியாக இருக்கிறார். தாறுமாறாகக் கார் ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக சர்ச்சைகளில் சிக்கியவர் இந்த சுனிதா.

பாவனி ரெட்டி

பாவனி ரெட்டி
பாவனி ரெட்டி

தெலுங்கு சீரியல் பக்கம் இருந்து தமிழுக்கு வந்தவர். ஆரம்பத்தில் சன் டிவியில் இருந்தாலும் தற்போது விஜய் டிவி முகமாகவே பார்க்கப்படுகிறார். ‘சின்னத்தம்பி’ இவரது முக்கியமான சீரியல். கடந்த சீசனின் ஷிவானி ஃபார்முலாபடி சமீபமாக சோஷியல் மீடியாவில் கிளாமர் போட்டோக்களை இறக்கிவந்தவர் இவர்.

பிரியங்கா

பிரியங்கா
பிரியங்கா

விஜய் டிவியின் இன்னொரு செல்ல தொகுப்பாளினி. நிகழ்ச்சிகளில் தன்னையே கலாய்த்துக் கொள்ளும் இவரது பாணி இவரைப் பிரபலமாக்கியது. யுடியூப் சேனலிலும் பயங்கர பிஸியாக இருக்கிறார். யுடியூப் மூலம் அதிகம் சம்பாதித்து வருகிற தமிழ் டிவி முகங்களில் இவர் பெயர்தான் முதலிடத்தில் இருக்கிறது.

சூசன்

சூசன்
சூசன்

‘மைனா’ சூசன் என்றால் சட்டென நினைவுக்கு வருகிற நடிகை சூசன் விஜய் டிவியின் ‘ஆபிஸ்’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருந்தார். சமீப சில வருடங்களாக சினிமா, டிவியிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனாலும் நெகட்டிவ் கேரக்டர்களாக இவருக்கு சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தனவாம். அதனால் கொஞ்சம் விலகியிருந்தவர் இப்போது மீண்டும் பிக்பாஸ் மூலம் மீடியா வெளிச்சத்துக்குள் வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தோஷ் பிரதாப்

சந்தோஷ் பிரதாப்
சந்தோஷ் பிரதாப்

நடிகர் சந்தோஷ் பிரதாப், பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ‘சார்பட்டா பரம்பரை’ ராமன் கேரக்டர் இப்போது நல்ல புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மாடல் கோபிநாத்

கோபிநாத் ரவி - மாடல்
கோபிநாத் ரவி - மாடல்

மிஸ்டர் இந்தியா வென்ற தமிழ்நாட்டுக்காரர். 2017 முதல் மாடலிங்கில் இருக்கிறார். அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். கடந்த சில சீசன்களிலும் இவரது பெயர் அடிபட்டது. ஆனால் கடைசியில் எப்படியோ அந்த வாய்ப்பு நழுவி விட, தற்போது உறுதியாகி இருக்கிறது.

மாடல் பிரதாயினி சர்வா

பிரதாயினி சர்வா - மாடல்
பிரதாயினி சர்வா - மாடல்

‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் பத்திரிக்கையாளராக வந்தவர். அடிப்படையில் இவரும் ஒரு மாடலே. சமீபமாக சினிமாவுக்காக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். தற்போது ‘பிக்பாஸ்' விட்டுக்குள் கலர்ஃபுல்லாக உலவ ஷாப்பிங்கில் பிஸியாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு