Published:Updated:

''கணவருடைய பிரச்னையை என்னுடையதா நினைச்சேன்''- டிரெண்டாகும் வி.ஜே -யின் இன்ஸ்டா வீடியோ!

VJ Iswarya Prabakar ( www.instagram.com/iswarya_prabakar/ )

''கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்க ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.''

''கணவருடைய பிரச்னையை என்னுடையதா நினைச்சேன்''- டிரெண்டாகும் வி.ஜே -யின் இன்ஸ்டா வீடியோ!

''கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்க ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.''

Published:Updated:
VJ Iswarya Prabakar ( www.instagram.com/iswarya_prabakar/ )

வீடியோ ஜாக்கி ஐஸ்வர்யா பிரபாகரை யாரும் மறந்திருக்க முடியாது. முன்னணி தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் அழகாகக் கலக்கியவர். திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட ஐஸ்வர்யா, தன் ஃபிட்னஸ் டிப்ஸ், வீடியோ என்று இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவ். நேற்றைய தினம் அவர், பர்சனல் லைஃப் பற்றி இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருந்த வீடியோ ஒன்று, அவருக்கு 'நீங்கள் ஓர் இன்ஸ்பிரேஷன் ஐஸ்வர்யா' என்று பலரிடமும் பாராட்டை வாங்கித்தந்துவருகிறது.

வி.ஜே.
வி.ஜே.
www.instagram.com/iswarya_prabakar/

''16 வயசிலேயே நான் சேனலுக்கு வந்துட்டேன். 24 வயசுல எனக்கு கல்யாணமாச்சு. வீட்ல பார்த்து வெச்சவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதாவது, கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்க ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்கவேண்டிய நிலைமை. அவரை மட்டுமே நம்பி அமெரிக்காவுக்குப் போனேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழ்க்கை நிறைய ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் எனக்கு வெச்சிருந்துச்சு. யெஸ், அமெரிக்கா போனதுக்கப்புறம்தான், பொருளாதாரரீதியா என் கணவர் ரொம்ப மோசமான நிலைமையில இருக்காருன்னு எனக்குத் தெரியவந்துச்சு. அவரோட பணத்தையெல்லாம் அவருடைய சொந்தக்காரங்களே ஏமாத்தி வாங்கிட்டிருக்காங்க. கிட்டத்தட்ட அவரோட பேங்க் அக்கவுன்ட் சுத்தமா துடைச்ச நிலைமைதான். திவால்னு சொல்வாங்களே, அப்படியொரு நிலைமையிலதான் அவர் அப்போ இருந்தார். திருமணம் முடிந்த ஒரு வருஷம் முழுக்க ஹனிமூன் பீரியட்னு சொல்வாங்க. ஆனா, எங்களுக்கு அது ரொம்ப குழப்பமான பீரியட்.

VJ Iswarya Prabakar
VJ Iswarya Prabakar
www.instagram.com/iswarya_prabakar/

அவரைக் குறை சொல்றதைவிட, அவரோட கஷ்டத்துல நானும் பங்கெடுத்துக்கணும்னு நினைச்சேன். ரெண்டு பேர் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணோம். கொஞ்சம் கொஞ்சமா எங்க எல்லாப் பிரச்னைகள்லேருந்தும் மீண்டு வந்துட்டோம்'' என்கிறார் செம பாசிட்டிவ்வாக.

இப்படியொரு சூழ்நிலையில், 'உன் பிரச்னைகளையெல்லாம் மறைச்சு என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டே'ன்னு சண்டைபோடுவதுதான் இயல்பாக நடக்கிற விஷயம். ஆனால், தன் இணையின் பிரச்னையைத் தன்னுடையதாக நினைத்து துணைநின்ற ஐஸ்வர்யா கிரேட் தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism