சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

46100
சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!
பிரீமியம் ஸ்டோரி
News
46100 சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

‘`லாக் டௌனில் லாக் ஆகிட்டேன் ப்ரோ’ எனச் சிரித்த கதிரிடம் பேசிய போது, ‘செலவு மிச்சம்.

கொரோனா, ஊரடங்கு, சீரியல் ஷூட்டிங் தடை என்று எவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதும் டிவி பிரபலங்கள் வீட்டில் விசேஷங்களுக்குக் குறையில்லை.

வீட்ல விசேஷம்

‘மைனா’ நந்தினி - நடிகர் யோகேஷ்வ ராம் திருமணம் 2019, நவம்பரில் நடந்தது நினைவிருக்கலாம். சந்தோஷத்துடன் இல்லற வாழ்வைத் தொடங்கிய இந்த ஜோடிக்கு அடுத்த சந்தோஷம்... யெஸ், அம்மாவாகப்போகிறார் நந்தினி.

சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

கடந்த மே மாதம் தனது பிறந்த நாளை சிம்பிளாக செலிபிரேட் செய்த நந்தினி, கேக் வெட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். வீடியோவில் நந்தினியின் முகத்தில் மாற்றத்தைக் கவனித்தவர்கள், ‘பூரிப்பா இருக்கிற மாதிரி தெரியுதே, வீட்ல விசேஷமா’ எனக் கேட்டனர். அப்போது எதுவும் சொல்லாதவர், சில தினங்கள் கழித்து, ‘ஆமா எங்க வீட்டுக்குப் பாப்பா வரப் போறாங்க’ என முறைப்படி அறிவித்தார். தற்போது மனைவியைப் பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொள்கிறார் யோகேஷ்.

கல்யாணம்

`ரன்’ சீரியலில் ருத்ரன் கேரக்டரில் ஒரேநேரத்தில் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் நடித்து ரீச் ஆனாரே விஜித்... அவரது திருமணமும் ஜூலை 2-ம் தேதி வேடச்சந்தூரில் நடந்தது.

சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

“பொண்ணு பேரு விஷ்வ வினோதினி. ஊர் திண்டுக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடிச்சிருக்காங்க. பெரியவங்க பார்த்து நடத்தி வெச்ச திருமணம். முதல்ல ஏப்ரல் மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். கொரோனா வால அந்த தேதியில பண்ண முடியலை. எங்க குலதெய்வமான குங்கும காளியம்மன் கோயிலும் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர்ல இருக்கிறதால அந்தக் கோயில்ல வெச்சே தாலி கட்டியாச்சு. சரியா ஐம்பது பேர்தான் வந்திருந்தாங்க. இ பாஸ் மாதிரியான சிக்கல்கள் இருந்ததால, சென்னையில இருந்து டிவி ஃபிரெண்ட்ஸ் யாரையும் கூப்பிட முடியலை. ஆனா அவங்க லைவ்ல மேரேஜைப் பார்த்து வாழ்த்தினாங்க. அக்டோபர் மாதக் கடைசியில் சென்னையில் வரவேற்பு நடத்தலாம்னு இருக்கேன்’’ என்றார் விஜித்.

நிச்சயதார்த்தம்

சீரியல், ஆங்கரிங் என தான் இருக்கும் ஏரியாவில் கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காத ‘செம்பருத்தி’ கதிரின் திருமண நிச்சயதார்த்தம், ஜூலை 2-ம் தேதி நடந்தது. மணப்பெண் சிந்து திருச்சியைச் சேர்ந்தவர். சென்னையில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறார். இம்மாத இறுதியில் திருமணம்.

சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

‘`லாக் டௌனில் லாக் ஆகிட்டேன் ப்ரோ’ எனச் சிரித்த கதிரிடம் பேசிய போது, ‘செலவு மிச்சம். அந்தக் காசை வெச்சு ஏதாவது நல்ல விஷயம் பண்ணலாம்னு நினைச்சிருக்கேன். அதேநேரம் என்னுடைய ‘செம்பருத்தி’ யூனிட்டைக்கூடக் கூப்பிட முடியலையேன்னு நினைக்கிறப்ப வருத்தமா இருக்கு’’ என்றார்.

கதிரின் குடும்பம் சொந்த ஊரான கோவையிலிருந்து ஒரேயொரு காரில் கிளம்பி திருச்சி போய், மூன்று மணி நேரத்தில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டது.

பாப்பா வந்தாச்சு

ஷிகாசிங், இந்தி சீரியல் உலகின் பாப்புலர் வில்லி. சில ஆண்டுகளுக்கு முன், தன் பைலட் பாய்ஃபிரெண்ட் கரண் ஷாவைக் கரம்பிடித்தவருக்கு ஜூலை 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

கர்ப்பமாக இருந்தபோது, இன்ஸ்டாவில் வயிற்றைக் காட்டியபடி இவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு அப்படியொரு வரவேற்பு. `உங்களோடு சேர்ந்து நாங்களும் தாய்மையை நேசிக்கிறோம்’ எனக் ‘கமெண்டி’னார்கள் இவரின் ரசிகர்கள். ‘இப்படில்லாம் பண்ணக்கூடாதும்மா, கண்ணு பட்டுடப் போகுது’ என அக்கறையுடன் எச்சரித்தவர்களும் உண்டு.

சின்னத்திரை ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது!

இந்நிலையில் இப்போது, இவர் நடித்துக்கொண்டிருந்த ‘கும்கும் பாக்யா’ தொடரில் இவருக்குப் பதில் இன்னொரு ஆர்ட்டிஸ்ட் நடிப்பார் என அறிவித்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு.

ஷிகாவைக் கேட்டால், ``நான்கு வருஷமா சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். இதுவரை எங்கிட்ட யாரும் முறைப்படி சொல்லலை. இந்த கோவிட் சூழல்ல என் குழந்தையை விட்டுட்டு என்னால எப்படி ஷூட் வர முடியும்? 2021 ஜனவரியில் ஷூட்டிங் திரும்பிடுவேன். ‘கும்கும் பாக்யா’வுல நான் இருக்கேன்னு நம்பறேன்’’ என்கிறார்.