Published:Updated:

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சிறந்த தொடர் - யார் யாருக்கு 'எம்மி' விருதுகள்? #Emmys

நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, HBO... இந்த வருடம் அதிக எம்மி விருதுகளைத் தட்டிச்சென்றது யார்?

Peter Dinklage
Peter Dinklage ( Twitter )

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வெப்-சீரிஸுக்கான விருது வழங்கும் விழாவான 'எம்மி' விருதுகள் இன்று வழங்கப்பட்டன. டி.வி தொடர்களின் ஆஸ்காராக பார்க்கப்படும் இந்த விழாவில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'செர்னோபில்' எனப் பல முக்கியத் தொடர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டிபோட்டன.

இதில் வெற்றி மகுடம் சூடியவை எவை என்று பார்ப்போம்.

சிறந்த டிராமா தொடர்- கேம் ஆஃப் த்ரோன்ஸ் (HBO)

Game of thrones
Game of thrones

சிறந்த நடிகை (டிராமா தொடர்) - ஜோடி கோமேர் (கில்லிங் ஈவ், BBC America)

சிறந்த இயக்கம் (டிராமா தொடர்) - ஒஸர்க் (Netflix)

சிறந்த நடிகர்(டிராமா தொடர்) -பில்லி போர்ட்டர் (போஸ், FX Networks)

சிறந்த துணை நடிகை (டிராமா தொடர்) - ஜூலியா கார்னெர் (ஒஸர்க், Netflix)

சிறந்த எழுத்து (டிராமா தொடர்) - சக்ஸஷன் (HBO)

சிறந்த துணை நடிகர் (டிராமா தொடர்) - பீட்டர் டிங்லெஜ் (கேம் ஆஃப் த்ரோன்ஸ் ,HBO)

Vikatan

சிறந்த இயக்கம் (குறுந்தொடர்) - ஜோகன் ரென்க் (செர்னோபில், HBO)

Chernobyl
Chernobyl

சிறந்த குறுந்தொடர்- செர்னோபில், HBO

சிறந்த நடிகை (குறுந்தொடர்) - மிச்செல் வில்லியம்ஸ் (போஸே/வெர்டன், FX Networks)

சிறந்த டி.வி திரைப்படம்- பேண்டர்ஸ்னேட்ச் (Netflix)

சிறந்த நடிகர் (குறுந்தொடர்) - ஜாரேல் ஜெரோம்(வென் தே சீ அஸ், Netflix)

சிறந்த எழுத்து (குறுந்தொடர்) - கிரேக் மேசின் (செர்னோபில், HBO)

சிறந்த துணை நடிகை (குறுந்தொடர்) - பாட்ரிசியா அரிக்யூட்(தி ஆக்ட், Hulu)

சிறந்த காமெடி தொடர்- ஃப்ளீபேக் (Prime Video)

Fleabag, PrimeVideo
Fleabag, PrimeVideo

சிறந்த நடிகை (காமெடி தொடர்) - ஃபீபி வால்லேர் பிரிட்ஜ் (ஃப்ளீபேக், Prime Video)

சிறந்த நடிகர் (காமெடி தொடர்) -பில் ஹாதேர் (பேரி, FX HBO)

சிறந்த இயக்கம் (காமெடி தொடர்) - ஹாரி பிராட்பீர்(ஃப்ளீபேக், Prime Video)

சிறந்த எழுத்து (காமெடி தொடர்) - ஃபீபி வால்லேர் பிரிட்ஜ் (ஃப்ளீபேக், Prime Video)

சிறந்த துணை நடிகை (காமெடி தொடர்) - அலெக்ஸ் போர்ஸ்டீன் (தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல், Prime Video)

சிறந்த துணை நடிகர் (காமெடி தொடர்) - டோனி ஷால்ஹோப் (தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல், Prime Video)

மொத்தமாக அதிக ப்ரைம்டைம் எம்மி விருதுகளை தட்டிச்சென்றது யார்?

Vikatan

HBO: 9 விருதுகள்

நெட்ஃபிளிக்ஸ்: 4 விருதுகள்

ப்ரைம் வீடியோ: 7 விருதுகள்