Published:Updated:

``புருஷன்-பொண்டாட்டினா இப்படித்தான்கிற சோஷியல் ப்ரஷர் எங்களுக்கு இல்லை!" - கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

மகள் சமைரா, இன்னொருபக்கம் ஷூட் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட்ராமிடம், குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கேட்டோம்.

Published:Updated:

``புருஷன்-பொண்டாட்டினா இப்படித்தான்கிற சோஷியல் ப்ரஷர் எங்களுக்கு இல்லை!" - கணேஷ் வெங்கட்ராம்

மகள் சமைரா, இன்னொருபக்கம் ஷூட் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட்ராமிடம், குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கேட்டோம்.

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா

`நியாயமான மனுஷன்யா’ என்று மக்களிடம் `குட்' சர்டிஃபிகேட் வாங்கியவர், `பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராம். மகள் சமைரா, இன்னொரு பக்கம் ஷூட் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் கணேஷிடம், குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கேட்டோம்.

கணேஷ் வெங்கட்ராம் குடும்பம்
கணேஷ் வெங்கட்ராம் குடும்பம்

``'கல்யாணம், பெற்றோர்கள்னு வாழ்க்கையோட எல்லா கட்டத்துலேயும் நம்ம ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா இருக்கணும்'னு நிஷாகிட்ட நான் காதலிக்கும்போதே சத்தியம் வாங்கிட்டேன். அப்போதான் நமக்குள்ள புரிதல் அதிகமா இருக்கும்னு சொல்வேன். புருஷன்னா இப்படி, பொண்டாட்டினா இப்படிங்கிற சோஷியல் ப்ரஷர் எங்களுக்கு இல்லை. நாங்க எப்பவுமே பெஸ்ட் ஃப்ரெண்டாதான் இருக்கோம். நிஷாவும் என்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிக்கிட்டாங்க. அவங்களுக்கு டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும்.

நிறைய இடங்களுக்கு பயணிக்கணும், வெவ்வேறு கலாசாரங்களை ரசிக்கணும்ங்கிறதுதான் அவங்களோட ஆசை. அப்படி நான் டிராவல் பண்ண விடணும்ங்கிறதுதான் அந்த சத்தியம். கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு வருஷம் டிராவல் பண்ணோம். எங்களுக்குள்ள புரிதல் அதிகமாச்சு. குழந்தைக்கு இதுதான் சரியான டைம்னு ரெண்டு பேருக்குமே தோணுச்சு. இப்போ, பாப்பாவும் வந்தாச்சு. எங்களோட வாழ்க்கை ப்ளான் பண்ண மாதிரி போயிட்டிருக்கு. சின்னச்சின்ன முடிவுகளைக்கூட நிதானமா யோசிச்சுதான் எடுப்போம்."

கணேஷ் வெங்கட்ராம், நிஷா
கணேஷ் வெங்கட்ராம், நிஷா

நிஷாவுக்குள்ள பாப்பா இருந்த காலம் ரொம்ப அழகானதா இருந்தது. வழக்கத்தைவிட அவங்க மேல அன்பைக் கொட்டினேன். அந்த டைம்ல என்ன பண்ணணும்ங்கிறதைத் தெரிஞ்சிக்க நிறைய புத்தகங்கள் படிச்சேன். மகப்பேறு பற்றி அம்மாக்களுக்குதான் நிறைய புத்தகங்கள் இருந்துச்சு. ஆனா, மனைவியை எப்படிப் பார்த்துக்கணும்னு அப்பாக்களுக்கு எந்தப் புத்தகமும் இல்லாதது ஏமாற்றமா இருந்தது.

பையன் வேணுமா, பொண்ணு வேணுமான்னு நிஷா அடிக்கடி கேட்பாங்க. குழந்தை ஆரோக்கியமா பிறந்துட்டா போதும்னு நான் சொல்வேன். ஆனா, உள் மனசுல பெண் குழந்தை வேணும்னுதான் இருந்தது. என்னோட ஆசை நிறைவேறி குட்டி நிஷாவும் வந்துட்டாங்க."

கணவரா இருந்தா ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மனைவியை ஜட்ஜ் பண்ணுவாங்க. ஆனா, ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்தாதான் எந்த நிர்பந்தமும் இல்லாம அன்பைக் கொட்ட முடியும்!
கணேஷ் வெங்கட்ராம்

ஒரு குழந்தை பிறந்த அப்புறம் எல்லாரோட கவனமும் அந்தக் குழந்தை மீதுதான் இருக்கும். ஆனா, அந்த அம்மாவோட மனநிலையைப் பத்தி யாருமே யோசிக்கிறதில்லை. நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் என்னன்னா... டெலிவரிக்கு அப்புறம்தான் கணவன் தன்னோட மனைவியை அதிகமா நேசிக்கணும். ஏன்னா, டெலிவரிக்குப் பிறகு பெண்களோட உடல்ல அவ்வளவு மாற்றங்கள் நடக்கும்.

பெண்களோட கர்ப்ப காலத்துல ஹார்மோன்கள் எல்லாமே அதிகமா சுரக்கும். குழந்தை பிறந்ததும் அத்தனை ஹார்மோன்களும் இறங்கிடும். இந்த மாற்றத்தால பெரும்பாலான பெண்கள் மனதளவுல பாதிக்கப்படுவாங்க.

சமைரா
சமைரா

இதனால, நான் அந்த விஷயத்துல ரொம்பக் கவனமா இருக்கேன். பாப்பாவுக்குத் தேவையான நேரத்துல பால் கொடுத்திட்டா, அது தொந்தரவு பண்ணாம விளையாடிட்டிருக்கும். அந்தச் சமயத்துலதான் நிஷாவை அதிகமா கவனிச்சிக்கிட்டேன். கணவரா இருந்தா ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மனைவியை ஜட்ஜ் பண்ணுவாங்க. இதே ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருந்தா, எந்த நிர்பந்தமும் இல்லாம அன்பைக் கொடுக்க முடியும். குட்டி நிஷா வந்ததும் வாழ்க்கையில அமைதி வந்துருக்கு. மெள்ள மெள்ள `ப்பா...'னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம்.

என்னோட வேலைக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட ரெண்டு மடங்கு அதிமா என்னோட குடும்பத்துக்குக் கொடுக்கிறேன். நாங்க ரெண்டு பேருமே சோஷியல் மீடியாவை அதிகம் யூஸ் பண்ண மாட்டோம். அதுல ஆக்டிவா இருந்தா தேவையில்லாம நம்மளை மத்தவங்களோட கம்பேர் பண்ணிப் பார்த்து ஸ்ட்ரெஸ் ஆகிடுவோம். என்னோட முழுக் கவனமும் குடும்பம், வேலை, இலக்கு மட்டும்தான். லைஃப் இப்போ அமைதியா போகுது" என்றவரிடம், அவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு பற்றிக் கேட்டோம்.

கணேஷ் வெங்கட்ராம், நிஷா
கணேஷ் வெங்கட்ராம், நிஷா

``நான் தமிழ்ப் பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். அவங்களையும் சேர்த்து தமிழ் மேலேயும் காதல் அதிகமாகியிருக்கு. முறைப்படி தமிழ் கத்துக்கிட்டேன். இப்போ, தமிழ்ல பேச மட்டுமில்லை, எழுதவும் தெரியும்’’ என்றார் புன்னகையுடன்.