விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள்மனதில் இடம் பிடித்த தொடர்களுள் ஒன்று `ராஜா ராணி'. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதையடுத்து சீசன் 2 வெளியானது. ஆரம்பத்தில் இந்தத் தொடரில் கதாநாயகனாக சித்துவும், கதாநாயகியாக ஆல்யாவும் நடித்து வந்தனர்.

ஆல்யா மானசா கர்ப்பமான காரணத்தினால் அந்தத் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரியா என்பவர் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது ரியா `ராஜா ராணி சீசன் 2' தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.
இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ` ராஜா ராணியில் நான் நடிக்க வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. இதுவரைக்கும் ராஜா ராணி பற்றிப் பெருசா பேசி வீடியோ போட்டதில்லை. இப்பப் போடுறேன் ஏன்னா, இனிமே நான் ராஜா ராணியில் இனி நான் இல்லை. ரியா இனிமே சந்தியாவாக இல்லை. இந்த ஒரு வருஷம் நீங்க கொடுத்த லவ் அண்ட் சப்போர்ட் அதிகம். இனிமே நீங்க புது சந்தியாவைப் பார்ப்பீங்க. அவங்களையும் சப்போர்ட் பண்ணுங்க.. நன்றி!' என அதில் கூறியிருந்தார்.

`சந்தியா' கதாபாத்திரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான `கோகுலத்தில் சீதை' தொடரில் நடித்த ஆஷா கெடா நடிக்க இருக்கிறார்.