Published:Updated:

`நிறைவேறிய வேண்டுகோள்; சின்னத்திரையில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு' - நெகிழும் குண்டு கல்யாணம்!

குண்டு கல்யாணம்

'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நான் நடித்தது நல்ல காமெடியான ஸ்கிரிப்ட். தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். சின்னத்திரையில் 2000-க்கு பிறகு மீண்டும் நடிக்கிறேன்!

`நிறைவேறிய வேண்டுகோள்; சின்னத்திரையில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு' - நெகிழும் குண்டு கல்யாணம்!

'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நான் நடித்தது நல்ல காமெடியான ஸ்கிரிப்ட். தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். சின்னத்திரையில் 2000-க்கு பிறகு மீண்டும் நடிக்கிறேன்!

Published:Updated:
குண்டு கல்யாணம்

80-களின் தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளில் நாம் அடிக்கடி பார்த்து ரசித்த முகம், குண்டு கல்யாணம். உடல்ரீதியாக பல பிரச்னைகளுடன் வாய்ப்பிற்காக காத்திருந்தவரை சந்தித்து ஆனந்த விகடன் இதழில் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தோம். தற்போது அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பவருக்கு வாழ்த்துகள் கூறிப் பேசினோம்.

குண்டு கல்யாணம்
குண்டு கல்யாணம்
hp

"விஜய் டிவியில் ஃபோன் பண்ணி கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இது ஒரு கெஸ்ட் ரோல் தான்.. அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு இருந்தா நிச்சயம் கூப்பிடுறோம்னு சொன்னாங்க. அவங்க கூப்பிட்ட உடனேயே ஓகே சொல்லிட்டேன். அந்தக் கால சீரியலுக்கும், இப்ப சீரியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. செட்ல எல்லாரும் நல்லா கோ-ஆப்ரேட் பண்ணினாங்க. செந்தில் சார் என்னை நல்லா கவனிச்சிகிட்டாரு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் சரி, செந்தில் சாரும் சரி பல விஷயங்கள் பேசினோம். ரொம்ப ஜாலியா ஒர்க் இருந்துச்சு. ரிசல்ட் எப்படி வந்திருக்குன்னு மக்கள்தான் சொல்லணும். மனநல மருத்துவமனையில் வேலை பார்க்கிற டாக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்.

குண்டு கல்யாணம்
குண்டு கல்யாணம்
hp

'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நான் நடித்தது நல்ல காமெடியான ஸ்கிரிப்ட். தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். சின்னத்திரையில் 2000-க்கு பிறகு மீண்டும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்!" என்றார்.