Published:Updated:

மதுர மக்கள்: "இங்கிலிஷ் ஸ்டாண்ட்அப் காமெடி பண்றதுல என்ன பிரச்னைனா..?"- மதுரை முத்து

மதுரை முத்து

"அப்போ எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை. ஏன்னா எல்லாரும் மிமிக்ரில பின்னிட்டு இருந்தாங்க. நான் மட்டும் ஸ்டாண்ட்டப் காமெடி. ஆனா, அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போ ஆரம்பிச்ச பயணம், வெவ்வேறு நாடுகள்னு இப்போவரை 83 நாடுகள் போயிட்டேன்."

மதுர மக்கள்: "இங்கிலிஷ் ஸ்டாண்ட்அப் காமெடி பண்றதுல என்ன பிரச்னைனா..?"- மதுரை முத்து

"அப்போ எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை. ஏன்னா எல்லாரும் மிமிக்ரில பின்னிட்டு இருந்தாங்க. நான் மட்டும் ஸ்டாண்ட்டப் காமெடி. ஆனா, அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போ ஆரம்பிச்ச பயணம், வெவ்வேறு நாடுகள்னு இப்போவரை 83 நாடுகள் போயிட்டேன்."

Published:Updated:
மதுரை முத்து

"மதுரைக்குன்னு ஒரு உடல்மொழி இருக்கு. அதுபோக நம்ம வட்டார வழக்குக்குன்னு தனி நகைச்சுவை இருக்கு. சென்னைக்கு போன ஒரு மதுரைக்காரன் கூட்டம் அதிகமா இருந்தா கொள்ளை கூட்டம்டானு சொல்லுவான். அதை மத்த ஊருக்காரன் கேட்டா என்னாது கொள்ளையடிக்கிற கூட்டமான்னு ஜெர்க் ஆவாங்க. கண்டக்டர் வந்து சில்லறை காசு இல்லைன்னா, மத்த ஊருக்காரங்க பரவால்ல மெதுவா குடுங்கனு சொல்லுவாங்க. ஆனா நம்ம ஊருக்காரன் என்ன சொல்லுவோம்? பரவால்ல பைய குடுங்கன்னு சொல்லுவோம். இதை மத்த ஊருக்காரவங்க கேட்டா என்னடா கண்டக்டர் பையைக் கேட்குறான்னு நினைச்சுப்பாங்க.

இப்படித்தான் மதுரை மனிதர்களின் வாசம் மற்ற ஊருக்காரங்களைக் காட்டிலும் தனிச்சு நிக்க காரணம். 'அசத்தப்போவது யாரு' ஆரம்பிக்கிறப்போ முதல் எபிசோடுக்கு வடிவேலுதான் விருந்தினரா வந்திருந்தாரு. 'எல்லாரும் மிமிக்ரி பண்றீங்க. அஜீத் வாய்ஸ் விஜய் வாய்ஸ்னு பேசுறீங்க, இவன் மட்டும்தான் சொந்த அடையாளத்துல பேசுறான். எனக்கு மேடைப்பேச்சுகள் புடிக்கும். நீ பண்றது நல்லாருக்குடா, சேர்ந்து வேலைபார்ப்போம்'னு வடிவேலு சொன்னாரு. அது இன்னமும் ஞாபகம் இருக்கு." மதுரையைப் பற்றி கேட்டதும் பசுமையான நினைவுகளோடுப் பயணிக்கத் தொடங்கினார் மதுரை முத்து.

மதுரை முத்து
மதுரை முத்து

"உங்க ஆரம்ப கால வாழ்க்கை எப்படியிருந்துச்சு? முதல் ப்ரேக் எப்போ, எப்படிக் கிடைச்சது?"

"ஆரம்ப காலத்துல மதுரையே எனக்கு ரொம்ப தூரமாதான் தெரிஞ்சது. சொந்த ஊரு திருமங்கலத்துக்குப் பக்கத்துல இருக்க அரசபட்டிதான். திருவிழாவுக்காக திருப்பரங்குன்றம் வர்றதே எனக்கு அவ்ளோ பெரிய கொண்டாட்டமான மனநிலையை குடுக்கும். காரணம் திருவிழாவுக்காக எடுக்குற புது ட்ரெஸ் அப்பறம் ஷூவுன்னு... அதுக்கப்பறம்தான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர ஆரம்பிச்சேன். அப்படித்தான் எனக்கு மதுரையே எனக்கு அறிமுகமாச்சு.

பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள்தான் ரொம்பவே திருப்புமுனையாக இருந்த நாள்கள். திருமங்கலம் பிகேஎன் பள்ளிக்கூடத்துல ப்ளஸ் ஒன் சேர்ந்த பிறகு ஓரளவு நகரத்துக்கான வாசனை எனக்கு பிடிபட்டது. டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணனும், ஷூ போடணும்னு என்னை மாத்திக்க முயற்சி பண்ணுனேன். 99ல இருந்து 2002 வரைக்கும் கல்லூரிக்காக மன்னர் காலேஜ் பக்கம் வந்தேன். ஹாஸ்டல் வாழ்க்கை வேற! மற்ற ஊரு ஆட்கள் கூட பழகுறோம். நிறைய மனிதர்கள் பழக்கம். அப்போதான் ராமர் எல்லாம் எனக்கு சீனியர். கல்லூரி ஆண்டுவிழாவுல மன்சூர் அலிகான் வாய்ஸ் எல்லாம் மிமிக்ரி பண்ணுவாரு.

அதுக்கு பிறகு ஞானசம்பந்தம் ஐயாவோட நகைச்சுவை மன்றத்துலதான் எனக்கான அங்கீகாரம் கிடைச்சது. ஒரு ஸ்டாண்டப் காமெடியனா நான் சொன்ன ஜோக்குகளை ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகுதான் விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு'ல கலந்துக்கிட்டேன். அப்போ எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை. ஏன்னா எல்லாரும் மிமிக்ரில பின்னிட்டு இருந்தாங்க. நான் மட்டும் ஸ்டாண்ட்டப் காமெடி. ஆனா, அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போ ஆரம்பிச்ச பயணம், வெவ்வேறு நாடுகள்னு இப்போவரை 83 நாடுகள் போயிட்டேன்.

மதுரை முத்து
மதுரை முத்து

இவ்வளவு நாடுகளுக்கு நான் போனாலும் அதுக்கு ஆதாரம், இந்த மண்ணோட மொழியும் மனுஷ மக்களும்தான். அவுங்ககிட்ட இருந்துதான் நான் பாக்குற கேரக்டர்களை என்னோட நகைச்சுவைக்குள்ள பொருத்திக்கிறேன். இதான் உண்மை."

உங்களுக்கான இன்ஸ்பிரேஷன் என்னவா இருந்துச்சு?

"எனக்கு ஆரம்ப காலத்துல இன்ஸ்பிரேஷனே லியோனி அவர்களோட பட்டிமன்றங்கள்தான். அப்போ பழைய பாடலா புதிய பாடலான்னு நிறைய பட்டிமன்றங்கள் கேசட் வழியாவே கேட்டு ரசிச்சிருக்கேன். எனக்குமே பட்டிமன்றங்கள் மீதுதான் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்துச்சுங்கிறது உண்மை. இப்போ எல்லாம் டெக்னாலஜி பயங்கரமா வளர்ந்துருச்சு."

"முதன்முதல்ல உங்களை நீங்களே டிவியில பார்த்த அனுபவம்?"

"என்னோட முதல் ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகுறதைப் பார்க்குறதுக்கு டிவி கிடையாது. பஸ் ஸ்டாண்டுல ஒரு மெடிக்கல்லதான் டிவி இருக்கும். பத்து மணிக்கு கடை அடைக்கிற நேரத்துலதான் நம்ம ஷோவே ஆரம்பிக்கும். கடைக்காரர்கிட்ட நான் டிவியில வர்றேன் அண்ணேனு சொல்லவும், நீ வர்றியான்னு ஆச்சர்யத்துல பாதி ஷட்டரைத் தொறந்து வச்சு எனக்காக டிவி ஆன் பண்ணிவிட்டாரு. இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு."

"குடும்பத்துல உங்களுக்கு ஆதரவு எப்படி இருந்துச்சு?"

"என்னோட அப்பா தீவிர இலக்கியவாதி. நான் ஒரு வாத்தியாரா வரணும்னு ஆசைப்பட்டவரு. ஆனா, நான் இப்படி மீடியா பட்டிமன்றம்னு போனதுல அவருக்கு விருப்பமே இல்ல. ஆனா காலப்போக்குல ஊருக்குள்ள பாக்குறங்க... எல்லாம் முத்துவோட அப்பா முத்துவோட அப்பான்னு பேசுற பூரிப்புலயே ரொம்ப சந்தோஷப்பட்டாரு."

மதுரை முத்து
மதுரை முத்து

"உங்களை நீங்களே எப்படி அப்டேட் பண்ணிக்கிறீங்க? இன்னைக்கு இந்தத் துறையில நிறைய போட்டியிருக்கு. அதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க?"

"இன்னைக்கு நிறைய பேரு ஸ்டேஜ் ஷோ பண்றாங்க. தமிழ் இங்கிலீஷ்னுலாம் பண்றாங்க. இங்கிலீஷ்ல பண்ணுனா ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸ், ஒரு அடைக்கப்பட்ட கதவுக்குள்ளேயே அவுங்களோட படைப்புக்கள் தங்கிப்போயிடும். நம்ம தாய்மொழியில பேசுனா பட்டி, தொட்டி வரைக்கும் மக்களுக்கு அந்தக் கலையும் படைப்பும் போய்சேரும். அதனால், எந்தக் கலைஞனும் சுருங்கிப்போகக் கூடாது. தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கிட்டே போகணும்னா அதுக்கு அவர்களோட தாய்மொழியிலே பயணிக்கிறது இன்னும் சிறப்புதான்.

என் வீட்டுல எழாயிரம் புத்தகம் இருக்கு. இன்னைக்கு வாசிச்சுக்குறேன். குறிப்பெடுத்து வச்சுக்குறேன். இதுக்கு முன்ன சொன்ன ஜோக் இதுக்கு அப்பறம் வருதான்னு பார்த்துக்குறேன். அப்படி நம்மள நாமளே அப்டேட் பண்ணிக்கிட்டாதான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கும் நாம போயி சேர முடியும்னு நம்புறேன்."