Published:Updated:

"சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல..." சர்ச்சை குறித்து கொதித்த பிந்து!

நவீன் - ஹீமா பிந்து

ரியலா இருக்கிறவங்க யாரும் அதை பண்றதில்லை. ஃபேக் ஐடியில் பேசுறதை நாம ஏன் பெருசா எடுத்துக்கணும்.

"சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல..." சர்ச்சை குறித்து கொதித்த பிந்து!

ரியலா இருக்கிறவங்க யாரும் அதை பண்றதில்லை. ஃபேக் ஐடியில் பேசுறதை நாம ஏன் பெருசா எடுத்துக்கணும்.

Published:Updated:
நவீன் - ஹீமா பிந்து

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஜோடி நவீன் - பிந்து. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமூகவலைதள பக்கங்களில் இந்த ஜோடி வைரலாக பேசப்பட்டு வந்தது. அதுதவிர, இருவரும் காதலிக்கிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நவீனும் சரி பிந்துவும் சரி நாங்கள் நண்பர்கள் தான் எனக் கூறி வந்தனர்.

நவீன் - பிந்து
நவீன் - பிந்து

இந்நிலையில், நவீனுக்கும் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் ஆகப் போகிறது என்கிற தகவல்கள் வெளியாகின. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்போது இருவரும் காதலிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதற்கடுத்து சமூகவலைதள பக்கங்களில் ஒரு பக்கம் நவீனுக்கு ஆதரவாகவும், ஒரு பக்கம் பிந்துவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிந்து, நவீன் இருவரிடமும் இந்த பிரச்னை குறித்துப் பேசினோம்.

சர்ச்சை குறித்து இருவரிடமும் கேட்டபோது பிந்து, 'நான் சர்ச்சையை நல்லாதாகவும் பார்க்கிறேன்.. கெட்டதாகவும் பார்க்கிறேன்' என்றார். நவீன், 'இந்த சர்ச்சை குறித்து நாங்க ரெண்டு பேரும் வெளிப்படையா பேசிட்டோம்னா சர்ச்சையே இல்லாம போயிடும். அதனால தான் நாங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கோம்' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

நவீன் - பிந்து
நவீன் - பிந்து

'ரியலா இருக்கிறவங்க யாரும் அதை பண்றதில்லை. ஃபேக் ஐடியில் பேசுறதை நாம ஏன் பெருசா எடுத்துக்கணும். அதுமட்டுமில்லாமல், நம்மளை பற்றி பேசிட்டே இருக்காங்க.. அதுவும் நல்லா தானே இருக்கு என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பிந்துவிடம் பேசியபோது, "ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கற்பனை இருக்கும். நடக்குறது அதுவா நடக்கட்டும் என்றவரை நிறுத்தி நவீன் தொடர்ந்தார். எங்களுக்கு தெரியும் நாங்க யாருன்னு.. ரெண்டு பேருமே சொல்லியிருக்கோம் என்றவர் நீங்க முகத்தை இப்படி வைக்காதீங்க பார்க்கிறவங்களுக்கு தப்பா தான் தெரியும் என்றதும் கோபத்துடன் பிந்து, 'இந்த கேள்விகளை அவாய்ட் பண்ணுங்க. நான் அதை பற்றி பேச விரும்பல. இதுல என்னை நுழைக்காதீங்க! சீரியலில் உடன் நடிக்கிற நடிகையா சீரியல் பத்தி என்ன கேள்வினாலும் கேளுங்க.. நான் பதில் சொல்றேன்! சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல துருவி, துருவி கேட்டாலும் என்கிட்ட எந்த பதிலும் வராது!' என்றார்.

நவீன் - பிந்து
நவீன் - பிந்து

மேலும், இந்த சர்ச்சை குறித்து பல விஷயங்களை நம்முடன் நவீன் - பிந்து பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism