Published:Updated:

" ஸ்டாலினிடம் சீட் கேட்பேன்"- இமான் அண்ணாச்சி அதிரடி!

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

''சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்'' என்கிறார் இமான் அண்ணாச்சி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. தி.மு.க பேச்சாளராகவும் இருக்கும் இமான் அண்ணாச்சி அரசியலில் அவரின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிக் கேட்டோம்.

இமான் அண்ணாச்சி
இமான் அண்ணாச்சி

தி.மு.க அரசின் கொள்கைகள் பிடித்துப்போய்தான் நான் தி.மு.கவில் என்னை இணைத்துக் கொண்டேன். கலைஞர் ஐயாவை ஒரு முறைநேரில் பார்த்துp பேசியபோது என்னையும் அறியாமல் உடம்பு புல்லரிச்சுப்போய் நின்றது இப்போதும் நினைவில் இருக்கு. அவர் ரொம்பவே இயல்பான மனிதர். அதனால்தான் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் இருக்காங்க.

கலைஞர் ஐயாவுக்கு அடுத்து தளபதி இப்போ தி.மு.கவை சிறப்பா வழிநடத்திட்டு இருக்கிறார். அதன் அடையாளம் தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்குத் தமிழகத்தில் கிடைத்த வெற்றி. தி.மு.கவை ஆதரிச்சு பிரசாரம் செய்ததே மகிழ்ச்சியான விஷயமாகத் தான் பார்க்கிறேன்.அதன் அடுத்த கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக வேட்பாளராக நிற்கவும் முடிவெடுத்துள்ளேன்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தளபதி ஸ்டாலினிடம் தி.மு.க வேட்பாளராக நிற்க அனுமதி கேட்பேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு தி.மு.க தொண்டனாக என்னை நான் நிரூபிப்பேன். மக்களும் ஆதரவு கொடுப்பாங்க என நம்புறேன். உங்கள் அண்ணாச்சி அரசியலும் கலக்குவாரு. சப்போர்ட் பண்ணுங்கண்ணே, சப்போர்ட் பண்ணுங்க'" என்றார் இமான் அண்ணாச்சி.

அடுத்த கட்டுரைக்கு